அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வாடிப்பட்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது. தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.
அம்பேத்கர் பிறந்த நாள் விழா
Published on

வாடிப்பட்டி

வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பஸ் நிலையம் முன்பு நடந்தது. ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன் தலைமை தாங்கினார்.

துணைச் செயலாளர் சிறுத்தை பாலன், பாசறை பேரூர் செயலாளர் யுவராஜா, தொகுதி செயலாளர் வளவன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் அரசு விஜயார் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் தளபதி, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தார்.

நில உரிமை மீட்பு துணை அமைப்பாளர் விடுதலை வீரன் இனிப்பு வழங்கினார். தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், த.மா.க வட்டாரத் தலைவர் பால சரவணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மச்சராசன், குண்டுமலை, பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com