என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
- 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்க லம் அருகே உள்ள சாப்டூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது40). இவரது மகள் பெத்தம் மாள்(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை வெளியே சென்றிருந்த ராஜேந்திரன் மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் தனியறையில் பெத்தம்மாள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மகளை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பெத்தம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெத்தம்மாள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருமங்கலம் அருகே உள்ள வில்லூரை சேர்ந்த வர் மலைச்சாமி. இவரது மனைவி ஆறுமுகம்(47). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்திய டைந்த ஆறுமுகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






