என் மலர்tooltip icon

    மதுரை

    • வியாபாரி-வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
    • தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணிய புரம் 1-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (வயது25). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். மேலும் வியா பாரத்தை அதிகப்படுத்து வதற்காக வேன் வாங்க விரும்பி யுள்ளார். இதற்காக அவர் தாயிடம் வேன் வாங்கி தரும்படி கூறி யுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாய் விஜயா ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காய்கறி வியாபாரி ராஜ் குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் அழகுராஜ் (30). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. திருமணமாகவில்லை. இதனால் மன உைளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கீரைத்துரை போலீசில் தாய் செல்லபாப்பு புகார் செய்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்ணாநகர் யாகப்பா நகர் பாலாஜி நகர் முதல் தெருவைசேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லிங்கேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லிங்கேஸ்வரன் மகன் ராமச்சந்திர பூபதி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்க்கட்சிகளின் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
    • தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

    மதுரை

    தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மதுரையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும். பா.ஜ.க.வுடன் தனியாக மோதினால் வெல்ல முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தலை த.மா.கா. சந்திக்கும். விரைவில் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளன.

    டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடினால் தான் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க முடியும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமலாக்கத் துறை சோதனையை சரி என்கிறது. ஆனால் ஆளுங் கட்சியாக மாறிய பின் தவறு என்கிறது.

    தி.மு.க. மக்களுக்கு அதிக வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளது. தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத் தலை வர் ராஜாங்கம், நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், சித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2000 போலி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
    • கிழக்கு யூனியன் சேர்மன் மணி மேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் செட்டிக்குளத்திலும், சக்கிமங்கலத்திலும் சுகாதா ரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

    இந்த மருத்துவ முகாம்க ளில் அனைத்து நோய்க ளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் வழங்கப்படும். தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவல கத்தில் பத்திர எழுத்தா ளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்களது பணி வெளியிலேயே முடிந்து விடுகிறது. பொதுமக்களே நேரடியாக வந்து பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்ற நடவடிக் கைகள் மேற்கொள்ளப் படுகிறது.

    பத்திரப்பதிவு செய்ய வரும் யாரும் பணம் கொண்டுவர வேண்டாம். ஆன்லைன் மூலமாகவே செலுத்திக் கொள்ளலாம். பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பதிவு செய்பவர்களை தவிர யாரும் வரக்கூடாது. குறிப்பாக இடைத்தரகர் களுக்கு இடமில்லை. 50 லட்சம் மதிப்பிற்கு மேலான சொத்துக்கள் பதிவு செய்யவும், கள ஆய்வு செய்யவும் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படு வார்கள்.

    போலி பத்திரப்பதிவு ரத்து சட்டத்தின்படி 2000 பதிவுகள் ரத்து செய்யப்பட்டு ள்ளது. மேலும் 14 ஆயிரம் மனுக்களும் வந்துள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களுக்கு எது தேவையோ அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான அரசு செய்து வரு கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விழாவில் மண்டலத்தலைவர் வாசுகி சசிகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரிய கலா கலாநிதி, மேற்கு யூனியன் சேர்மன் வீரராக வன், கிழக்கு யூனியன் சேர்மன் மணி மேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    மேலூர்

    சிவகங்கை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சென்னகரம்பட்டி கிராமத்தில் வட்டார வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது. கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் சுபா சாந்தி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் சுரேஷ் பூச்சி தாக்குதல் குறித்தும் பூச்சி கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தும் முறை, அதன் பயன்பாடு, இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

    பின்னர் வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து கரிசல் கலைக்குழு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்பிரமணியன், சரவணகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன், சத்திய கீர்த்தனா மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னகரம்பட்டி உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • பூக்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
    • 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அரசபட்டி, வலையங்குளம், தும்பக்குளம், கப்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இந்தப்பகுதி யில் மல்லிகை, பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்றவை பயிரிடப்படுகிறது. இந்த மாதம் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திரு விழாக்கள் நடத்துவது வெகுவாக குறைந்துள்ள தால் பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

    மல்லிகை, முல்லைப்பூ ஆகியவற்றை பறிப்பதற்கு ஒருநாள் கூலி ரூ.150 வழங்கப்படுகிறது. ஆனால் பூக்களின் விலை ரூ.100-க்கு விற்பதால் நஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தோட்டத்தில் உள்ள செடிகளில் பூக்கள் பறிக்கப்படாமல் உள்ளது.

    லட்சக்கணக்கில் செலவழித்து பூ சாகுபடி செய்த விவசாயிகள் விலை சரிவால் வேதனைய டைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் வாசனை திரவியம் ஆலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • கார் மோதி பெண் பரிதாப சாவு; வேன் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவை சேர்ந்தவர் பாண்டி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்லம்மாள்(வயது35). இவர் நேற்று மாலை அட்டப்பட்டி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக செல்லம்மாள் மீது மோதியது. அதே வேகத்தில் கார் ரோட்டில் இருந்து வயலில் புகுந்தது.



    பலியான செல்லம்மாள்

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேங்கையன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மேலூர் ராஜேந்தி ரன் என்பவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனது உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் லால்குடிக்கு வேனில் சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று இரவு வேனில் விஜய குமார் மற்றும் குடும்பத்தினர் ஊருக்கு புறப்பட்டனர். வேனை இசக்கிமுத்து என்பவர் ஓட்டி வந்தார்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் நடுவே மாடு சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை திருப்பினார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பஸ் நிறுத்தம் முன்பு தலைக்குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்த வர்கள் கூக்குரலிட்டனர். உடனே அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் விஜயகுமார், வெங்கடேஷ், பால்ராஜ் மற்றும் பெண்கள் என 13 பேர் காயமடைந்தனர். இவர்கள் மேலூர் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மேலூர் அருகே விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது
    • புதிய தென்னை கன்றுகளை நடவு செய்திடவும், மானிய விலையில் ஊக்கத்தொகை வழங்கிடவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம் பட்டியில் ஒன்றியத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட கலெக் டர் சங்கீதாவிடம் தெரிவித்தனர்.

    முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட கலெக்டருக்கு, தமிழகத்தின் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள தனி சிறப்பான அரிசி வகைகள் அடங்கிய பரிசு பெட்டகத்தை விவசாயிகள் கலெக்டரிடம் வழங்கினர்.கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 21 ஊராட்சி மற்றும் 75 கிராமங்கள் உள்ளடக்கியது.

    கொட்டாம்பட்டி சுற்று வட்டார விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் விளை பொருட்கள் நேரடியாக விவசாயிகள் விற்பனை செய்து கொள்வதற்கும் அதன் மூலம் நல்ல விலை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக கொட்டாம்பட்டியில் உழவர் சந்தை அரசின் சார்பில் அமைத்து தருமாறும், சொக்கலிங்க புரம் ஊராட்சி உட்பட்ட உதினிப்பட்டி, மணல் மேட்டுப்பட்டி, சொக்கலிங்கபுரம், திரௌபதி அம்மன் கோவில் ஆகிய ஊரணி களை தூர்வாரி செய்து சீரமைத்து தரவும், கொட்டாம்பட்டி வட்டாரத்தில் வயது முதிர்வால் காய்ப்பு திறன் குறைந்த தென்னை மரங்களை அகற்றிவிட்டு புதிய தென்னை கன்றுகளை நடவு செய்திட விவசாயிகளுக்கு மானிய விலையில் ஊக்கத்தொகை வழங்கிடவும்,கொட்டாம்பட்டியை மையமாக வைத்து காயர் கிளஸ்டர் குழுமத்தினை ஏற்படுத்திதரவும், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    மேலூர் உட்பட மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி தாலுகாவில் இருந்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • 3-ந்தேதி முப்பழ பூஜை நடக்கிறது.
    • இன்று முதல் 3-ந்தேதி வரை தங்க ரதம் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா இன்று சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவையொட்டி உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.

    பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாராகும் ஊஞ்சலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந்தேதி வரை 9 நாட்கள் தினமும் 6 மணிக்கு ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 3-ந்தேதி முப்பழ பூஜை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், சத்யகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள் ஆகிய 5 சன்னதிகளிலுமாக சுவாமி, அம்பாளுக்கு வாழை, மா, பலா, ஆகிய முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் மற்றும் சிவாச்சாரிகள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சித்திரை திருவிழாவில் திருக்கல்யாணத்தின்போதும், ஆவணி மாதத்தில் நடைபெறும் புட்டுத்திருவிழாவின் போதும் உற்சவர், தெய்வானையுடன் கோவிலுக்கு சென்று வருவதால் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தங்கரதம் உலா நடைபெறுவதில்லை. ஆனி ஊஞ்சல் திருவிழாவின்போது கோவிலுக்குள்ளே சுவாமி இருந்த போதிலும் தங்க ரதம் வலம் வரக்கூடிய திருவாச்சி மண்டபத்தில் ஊஞ்சல் அமைக்கப்படுவதால் இன்று முதல் 3-ந்தேதி வரை 10 நாட்கள் தங்க ரதம் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா இன்று தொடங்கியது.
    • இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் ஆனி ஊஞ்சல் திருவிழா இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் தொடங்கு கிறது. ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் ஈறாக 9 நாட்கள் என இன்று முதல் ஜூலை 2-ந் தேதி முடிய ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ளது.

    நாளை (25-ந்தேதி) இரவு முதல் 26-ந் தேதி ஆனி உத்திரம் அன்றைய தினம் அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளி யம்பல நடராஜர் சிவ காமிக்கும், அம்மனுக்கும் சுவாமி கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமி யம்மனுக்கு சுவாமி கோவில் 2-ம் பிரகாம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும்.

    பின்னர் காலபூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் 4 மாசி வீதிகளில் புறப்பாடாகும். அபிஷேக திரவிய பொருட்களை 25-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம்.

    திருவிழா நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்ட பத்திற்கு எழுந்தரு ளுவார்கள்.

    அங்கு ஊஞ்சள் கொண்ட பின் மாணிக்க வாசகர் பாடிய திருவாச கத்தின் திருப் பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும். அதனை நாதசுர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைவார்கள்.

    ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் படியாக ஆகமத்தில் விரித்துரைக்கப் பட்டுள்ளன.

    அதன்படி அடுத்த மாதம் 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத சிவப்பெரு மானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது.

    இப்பூஜைகளை ஏற்று கொண்ட இறைவன் இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் புணர்வுறு போகம் எய்த அருள் பாலிப்பதாக ஐதீகமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆனி ஊஞ்சல் உற்சவம் முடிவில் 4 சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழா நடைபெறும் நாட்களான வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்துள்ளனர்.

    • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    தஞ்ைச மாவட்டம் கொள்ளுகாது வட்டாட்சி கோட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சுந்தரராஜ். இவர் மதுரை திருமங்கலத்தில் உள்ள சிட்கோவில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை சரியில்லாததால் சுந்தரராஜ் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

    இது குறித்து அவரது அண்ணன் கோவிந்தராஜ், சுந்தரராஜின் நண்பர் மதன பிரகாஷிடம் தனது தம்பிக்கு வேறு ஒரு வேலை வாங்கித் தருமாறு கூறியிருந்தார். அதன்பேலில் சுந்தரராஜ் சேடப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார். அங்கு தங்கியிருந்த சுந்தரராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ்களில் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்கிறார்கள்.
    • கூடுதல் பஸ்களை விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலை தூரத்தில் இருந்து கல்வி பயில வரும் மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர். ஆனால் சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் ஒரு சில அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் அதில் மாணவர்கள் முண்டியடித்துக் க்கொண்டு ஏறும் நிலை உள்ளது.

    பஸ்சில் இடம் கிடைக்காத மாண வர்கள் ஆபத்தான முறையில் படியில் நின்று பயணம் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு பயணம் செய்த மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரசு பஸ்கள் மூலம் வருகின்றனர்.

    ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் ஒருசில பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து சிந்தாமணி, பொட்டபாளையம், பனையூர் மற்றும் அந்தப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் மதுரை கீழவெளி வீதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    அரசு பஸ்களில் வரும் இவர்கள் பெரும்பாலான நாட்களில் கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது. போதுமான பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படாததால் பள்ளி விடும் மாலை நேரங்களில் அரசு பஸ் படிகளில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு பயணம் செய்வதை காண முடிகிறது.

    இதே போன்ற நிலை மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ளது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி குறிப்பிட்ட வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக கூடுதல் பஸ்களை விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது.
    • 4 கோபுர நுழைவு வாயில்களிலும் மத்திய பிரிவு பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். கலை நயமிக்க கோபுரத்தையும், சிற்ப வேலைபாடுகளையும் காண வெளிநாட்டினரும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. இதன் காரணமாக 4 கோபுர நுழைவு வாயில்களிலும் மத்திய பிரிவு பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரத்தை படம் பிடிக்க டிரோன் கேமரா இயக்கப்பட்டது. மேலே சுற்றி வந்த அந்த டிரோன் திடீரென கோபுரத்தின் மீது மோதி கீழே விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் டிரோனை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது சித்திரை வீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்த பெங்களூரில் பணி புரியும் 2 பெண் என்ஜினீயர்கள் கோபுரத்தை படம் பிடிக்க டிரோனை பறக்க விட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பெண்களிடமும் தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த சயலிசிங்கர், சுருதி உர்குடே என தெரியவந்தது. இவர்கள் யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலை தளத்தில் பதிவிடுவதற்காக டிரோனை பறக்க விட்டு கோபுரங்களை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் அனுமதியின்றி டிரோனை பறக்க விட்டதாக 2 பெண் என்ஜினீயர்கள் மீது, மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×