search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fallen sharply"

    • பூக்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
    • 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அரசபட்டி, வலையங்குளம், தும்பக்குளம், கப்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இந்தப்பகுதி யில் மல்லிகை, பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்றவை பயிரிடப்படுகிறது. இந்த மாதம் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திரு விழாக்கள் நடத்துவது வெகுவாக குறைந்துள்ள தால் பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

    மல்லிகை, முல்லைப்பூ ஆகியவற்றை பறிப்பதற்கு ஒருநாள் கூலி ரூ.150 வழங்கப்படுகிறது. ஆனால் பூக்களின் விலை ரூ.100-க்கு விற்பதால் நஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தோட்டத்தில் உள்ள செடிகளில் பூக்கள் பறிக்கப்படாமல் உள்ளது.

    லட்சக்கணக்கில் செலவழித்து பூ சாகுபடி செய்த விவசாயிகள் விலை சரிவால் வேதனைய டைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் வாசனை திரவியம் ஆலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×