search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers grievance"

    • மேலூர் அருகே விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது
    • புதிய தென்னை கன்றுகளை நடவு செய்திடவும், மானிய விலையில் ஊக்கத்தொகை வழங்கிடவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம் பட்டியில் ஒன்றியத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட கலெக் டர் சங்கீதாவிடம் தெரிவித்தனர்.

    முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட கலெக்டருக்கு, தமிழகத்தின் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள தனி சிறப்பான அரிசி வகைகள் அடங்கிய பரிசு பெட்டகத்தை விவசாயிகள் கலெக்டரிடம் வழங்கினர்.கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 21 ஊராட்சி மற்றும் 75 கிராமங்கள் உள்ளடக்கியது.

    கொட்டாம்பட்டி சுற்று வட்டார விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் விளை பொருட்கள் நேரடியாக விவசாயிகள் விற்பனை செய்து கொள்வதற்கும் அதன் மூலம் நல்ல விலை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக கொட்டாம்பட்டியில் உழவர் சந்தை அரசின் சார்பில் அமைத்து தருமாறும், சொக்கலிங்க புரம் ஊராட்சி உட்பட்ட உதினிப்பட்டி, மணல் மேட்டுப்பட்டி, சொக்கலிங்கபுரம், திரௌபதி அம்மன் கோவில் ஆகிய ஊரணி களை தூர்வாரி செய்து சீரமைத்து தரவும், கொட்டாம்பட்டி வட்டாரத்தில் வயது முதிர்வால் காய்ப்பு திறன் குறைந்த தென்னை மரங்களை அகற்றிவிட்டு புதிய தென்னை கன்றுகளை நடவு செய்திட விவசாயிகளுக்கு மானிய விலையில் ஊக்கத்தொகை வழங்கிடவும்,கொட்டாம்பட்டியை மையமாக வைத்து காயர் கிளஸ்டர் குழுமத்தினை ஏற்படுத்திதரவும், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    மேலூர் உட்பட மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி தாலுகாவில் இருந்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ×