என் மலர்
மதுரை
- சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் மீது தென்னக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை ரெயில் விபத்து குறித்து ரெயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா கூறியிருப்பதாவது:-
ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைகளுக்கான சாத்தியம் ஏதும் இல்லை. ரெயில் பெட்டியில் சிலிண்டர் அடுப்பில் தேநீர் போட்டுக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. பிரேத பரிசோதனை முடிந்தவுடம் 7 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு, விமானம் மூலம் உத்தரபிரதேசம் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில் தீ விபத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்யவும் லக்னோ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை:
உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் மீது தென்னக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்யவும் லக்னோ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- மதுரையில் 9 பேர் பலியான சம்பவம் மனதுக்கு வேதனை அளிக்கிறது.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது அறிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வ தற்காக 90 க்கும் மேற்பட்டோர் கடந்த 17 தேதி யாத்திரைப் பயணிகள் ரெயில் மூலமாக தமிழ்நாட் டிற்கு வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.
இவர்களின் ரெயில் பெட்டி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டபோது, திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தால் 9-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தீக் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோரச்சம்பவம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீ விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் மரணமடைந்த பக்தர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மகளிர் குழுக்களுக்கு களநீர் பயிற்சி வகுப்பு நடந்தது.
- ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வீரராகவன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மதுரை
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, கிராமப்புற பெண்கள் சுகாதாரக் குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு களநீர் பரிசோதனை பெட்டி பயன்படுத்துதல் மற்றும் வலைத்தளத்தில் பதிவு குறித்த பயிற்சி வகுப்பு, கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் செந்தில்குமரன் தலைமை யில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வீரராகவன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் உலக நாதன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் கருத்த பாண்டியன் மற்றும் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெட்கிராட் பொருளாளர் கிருஷ்ண வேணி நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 கிராம பஞ்சாயத்துகளில் பணி யாற்றும் பம்ப் ஆப்ரேட்டர் களுக்கு நீரின் தன்மைகள் குறித்து செய்முறைகள் மூலமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் பரிசோதனையாளர் விளக்கி கூறினார்.
இந்த நிகழ்ச்சி மூலமாக நீரின் பல்வேறு தன்மைகள் குறித்து தாங்கள் அறிந்து கொண்டதாக பம்ப் ஆப்ரேட்டர்கள் தெரிவித்த னர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜூபிடர் பெண்கள் கூட்ட மைப்பு,பெட்கிராட் நிர்வாகிகள் அங்குசாமி, சாராள் ரூபி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் செய்திருந்தனர்.
- அம்மாபட்டி அரசு பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை மணிமாறன் தொடங்கி வைத்தார்.
- அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்றார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப் பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். துணை தலைமை யாசிரியர் பாண்டி வரவேற்றார்.
மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மணிமாறன் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தற்போது படிப்பு முடித்து பெரிய பதவிகளுக்கு வருகின்றனர். மாண வர்களின் மருத்துவ படிப்புக்கு தடையாக உள்ள நீட் தேர்வினை ரத்து செய்ய தமிழக முதல்வர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்றார். முடிவில் ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.
திருமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி யன், ஆலம்பட்டி சண்முகம், மாவட்ட கவுன்சிலர் ஜெய ராஜ், ஒன்றிய துணை செயலாளர் முத்துபாண்டி, தகவல் தொழில்நுட்ப மதுரை மண்டல அமைப்பா ளர் பாசபிரபு, திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகரப் பொரு ளாளர் சின்னச்சாமி, நகராட்சி கவுன்சிலர் திருக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காலை உணவு விரிவாக்க திட்டத்தை நகர்மன்றத்தலைவர் தொடங்கி வைத்தார்.
- நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சியில் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி, முகமதுஷாபுரம் தொடக்கப்பள்ளி, வேங்கட சமுத்திரம் தொடக்கப் பள்ளி, தெற்குதெரு பள்ளி, சத்திரம் தொடக்கப்பள்ளி மற்றும் முஸ்லீம் பெண்கள் பள்ளி ஆகிய 6 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 209 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. திருமங்கலம் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகரப்பொருளாளர் சின்னச்சாமி, கவுன்சிலா்கள் திருக்குமார், ரம்ஜான் பேகம் ஜாகீர் உசேன், அமுதா சரவணன், நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், சுகாதார அலுவலர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை புட்டுத்திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டார்.
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் முக்கிய விழாவான புட்டு திருவிழா நாளை (27-ந்தேதி) நடைபெற உள்ளது.
மதுரையில் நடைபெறும் திருவிழாக்களில் புட்டுத்திருவிழாவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், புட்டுத்திருவிழா ஆகிய 2 திருவிழாக்களுக்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்ரமணிய சுவாமி, தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.
அதன்படி நாளை நடைபெற உள்ள புட்டுத்திரு விழாவில் பாண்டிய மன்ன னாக பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி இன்று காலையில் மதுரைக்கு புறப்பட்டார்.
முன்னதாக சுப்பிர மணியசுவாமி, தெய்வா னைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி-தெய்வானை பல்லக்கில் புறப்பட்டனர். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண்களில் எழுந்தருளி மதுரைக்கு செல்வர்.
புட்டுத்திருவிழாவில் பங்கேற்கும் சுப்பிரமணிய சுவாமி வருகிற 31-ந்தேதி வரை மதுரை ஆவணி மூல வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 31-ந்தேதி மாலை பூப்பல்லக்கில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மீண்டும் திருப்பரங்குன்றத்தை வந்தடைவார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- இந்த விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சுப்பிரமணியன் மதுரை வந்தார்.
மதுரை
மதுரையில் இன்று உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா ரெயில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்து மதுரை ரெயில்வே மருத்துவ மனையிலும் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சுப்பிரமணியன் மதுரை வந்தார். அவர் தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் மற்றும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
இன்று காலை 5 மணி அளவில் உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் 64 பேர் திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரை வந்து மீனாட்சியம்மன் கோவில் மற்றும் ராமேசுவரம் செல்ல இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக 5 மணி அளவில் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைக்கும் போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த நபர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இறந்த நபர்களின் உடல்கள் விரைவாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப் படும். மேலும் அவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி. போன்ற மருத்துவ பரிசோ தனைகள் செய்யப்பட்டு ரெயிலில் வந்த பயணிகளை பத்திரமாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த தகவல் தெரிந்த உடனே அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் வந்து வேண்டிய உதவிகளை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- ரெயில் பெட்டிகள் எரிந்து கொண்டிருக்கும்போது பயணிகள் ரெயில் கடந்து சென்றது.
- உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை
மதுரை ெரயில் நிலையம் அருகே நின்றிருந்த ரெயில் பெட்டிகளில் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலா வந்த வடமாநிலத்தவர்கள் 9 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர்.
ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடி லைன் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்து டன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில் ரெயில் பெட்டி முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரெயில் பெட்டிகள் முழுவதுமாக எரிந்தன.
அப்போது அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற பயணிகள் ரெயில் கடந்து சென்றது. அப்போது அதிலிருந்த பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
தீ விபத்து நடந்த தண்ட வாளம் அருகே பயணிகள் ரெயில் கடந்து சென்றபோது தீ அந்த ரெயிலை தொட்டுவிடும் வகையில் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுபோன்ற பெரும் விபத்து நடக்கும்போது அந்த பகுதியில் பாதுகாப்பை கருதி ரெயில் போக்கு வரத்தை நிறுத்துவது வழக்கம். ஆனால் இன்று காலை தீ பற்றி எரிந்து கொண்டிருந்த ரெயில் பெட்டி அருகே உள்ள தண்டவாளத்தில் மற்றொரு ரெயில் செல்ல அனுமதி அளித்தது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய விசார ணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக தரம் உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) வில்வசேகரன் தலைமை தாங்கினார். இதில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தேனி மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் ஜீவா, மதுரை மற்றும் தேனி மாவட்ட துணைப்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கே.நாட்டாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை எந்திரத்திற்கான ரூ.27 லட்சத்து 73 ஆயிரத்து 826 மதிப்புள்ள கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.
- சோழவந்தான் பேட்டை அரசு நிலைப்பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
- பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தலைமை வகித்து தொடங்கி வைத்து மாணவ மாணவியருக்கு உணவுகளை பரிமாறினார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் லலிதா பேபி வரவேற்றார். சமுதாய வள பயிற்றுனர் செல்வி, வரி தண்டலர்கள் வெங்கடேசன் கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு ரமேஷ், பேரூராட்சி பணியாளர்கள் வேணுகோபால், கவுதம் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விபத்தில் அவர் உடல் கருகியதால் உடனே அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- இந்தி தெரிந்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
மதுரை:
மதுரையில் ரெயில் பெட்டி தீ விபத்தில் இறந்த 5 ஆண்கள், 4 பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண சுற்றுலா வந்தவர்களை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களை உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர். அதன்படி ஏற்கனவே தீவிபத்தில் சப்தமன் சிங், மிதிலேஸ்வரி ஆகியோர் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது 6 பேரின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர்.
அதன்படி ரெயில் பெட்டி தீ விபத்தில் பரமேஸ்வர் டயத் குப்தா, தாமன் சிங் சந்துரு, ஹேமன் பன்வால், நிதிஷ் குமாரி, சாந்தி தேவி, மனோவர்மா அகர் என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
தீ விபத்தில் இறந்த 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஒருவரின் அடையாளம் மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. விபத்தில் அவர் உடல் கருகியதால் உடனே அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக உடல்களை அடையாளம் காண மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் மொழி தெரியாமல் திகைத்தனர். இதனால் அதிகாரிகள், போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் உரிய பதிலளிக்க முடியவில்லை. அதன்பின் இந்தி தெரிந்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.






