காலை உணவு விரிவாக்க திட்டம்

காலை உணவு விரிவாக்க திட்டத்தை நகர்மன்றத்தலைவர் தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார்.
காலை உணவு விரிவாக்க திட்டம்
Published on

திருமங்கலம்

திருமங்கலம் நகராட்சியில் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி, முகமதுஷாபுரம் தொடக்கப்பள்ளி, வேங்கட சமுத்திரம் தொடக்கப் பள்ளி, தெற்குதெரு பள்ளி, சத்திரம் தொடக்கப்பள்ளி மற்றும் முஸ்லீம் பெண்கள் பள்ளி ஆகிய 6 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 209 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. திருமங்கலம் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகரப்பொருளாளர் சின்னச்சாமி, கவுன்சிலா்கள் திருக்குமார், ரம்ஜான் பேகம் ஜாகீர் உசேன், அமுதா சரவணன், நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், சுகாதார அலுவலர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com