என் மலர்
நீங்கள் தேடியது "Train coach fire accident"
- விபத்தில் அவர் உடல் கருகியதால் உடனே அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- இந்தி தெரிந்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
மதுரை:
மதுரையில் ரெயில் பெட்டி தீ விபத்தில் இறந்த 5 ஆண்கள், 4 பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண சுற்றுலா வந்தவர்களை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களை உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர். அதன்படி ஏற்கனவே தீவிபத்தில் சப்தமன் சிங், மிதிலேஸ்வரி ஆகியோர் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது 6 பேரின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர்.
அதன்படி ரெயில் பெட்டி தீ விபத்தில் பரமேஸ்வர் டயத் குப்தா, தாமன் சிங் சந்துரு, ஹேமன் பன்வால், நிதிஷ் குமாரி, சாந்தி தேவி, மனோவர்மா அகர் என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
தீ விபத்தில் இறந்த 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஒருவரின் அடையாளம் மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. விபத்தில் அவர் உடல் கருகியதால் உடனே அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக உடல்களை அடையாளம் காண மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் மொழி தெரியாமல் திகைத்தனர். இதனால் அதிகாரிகள், போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் உரிய பதிலளிக்க முடியவில்லை. அதன்பின் இந்தி தெரிந்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
- பாதுகாப்பு கருதி இரும்பு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
- ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளின் வெப்பநிலை மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பாகவும் சோதனை செய்தனர்.
மதுரை:
மதுரை ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். விதிமுறைகளை மீறி அந்த ரெயில் பெட்டியில் கொண்டு வரப்பட்ட கியாஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கோர சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் தீயில் எரிந்து கிடந்த ரெயில் பெட்டிக்குள் கிடந்த பொருட்களை வெளியே கொண்டு வந்து போட்டனர்.
அப்போது ஒரு இரும்பு பெட்டியை உடைத்து பார்த்தபோது, அதில் 500 ரூபாய் கட்டுகள் இரண்டும், 200 ரூபாய் கட்டுகள் ஏராளமாகவும் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வழிச்செலவுக்காக யாத்ரீகர்கள் இந்த பணத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும், பாதுகாப்பு கருதி இரும்பு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை பத்திரமாக கொண்டு சென்றனர். அதேபோல் ரெயில் பெட்டியின் மேலே ஏறி ஆய்வு நடத்தினர். அப்போது அந்த ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளின் வெப்பநிலை மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பாகவும் சோதனை செய்தனர்.






