search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில் பெட்டி தீவிபத்து: ரெயில் பெட்டியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகள்
    X

    ரெயில் பெட்டி தீவிபத்து: ரெயில் பெட்டியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகள்

    • பாதுகாப்பு கருதி இரும்பு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
    • ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளின் வெப்பநிலை மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பாகவும் சோதனை செய்தனர்.

    மதுரை:

    மதுரை ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். விதிமுறைகளை மீறி அந்த ரெயில் பெட்டியில் கொண்டு வரப்பட்ட கியாஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த கோர சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் தீயில் எரிந்து கிடந்த ரெயில் பெட்டிக்குள் கிடந்த பொருட்களை வெளியே கொண்டு வந்து போட்டனர்.

    அப்போது ஒரு இரும்பு பெட்டியை உடைத்து பார்த்தபோது, அதில் 500 ரூபாய் கட்டுகள் இரண்டும், 200 ரூபாய் கட்டுகள் ஏராளமாகவும் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    வழிச்செலவுக்காக யாத்ரீகர்கள் இந்த பணத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும், பாதுகாப்பு கருதி இரும்பு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை பத்திரமாக கொண்டு சென்றனர். அதேபோல் ரெயில் பெட்டியின் மேலே ஏறி ஆய்வு நடத்தினர். அப்போது அந்த ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளின் வெப்பநிலை மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பாகவும் சோதனை செய்தனர்.

    Next Story
    ×