என் மலர்tooltip icon

    மதுரை

    • பாதுகாப்பு கருதி இரும்பு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
    • ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளின் வெப்பநிலை மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பாகவும் சோதனை செய்தனர்.

    மதுரை:

    மதுரை ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். விதிமுறைகளை மீறி அந்த ரெயில் பெட்டியில் கொண்டு வரப்பட்ட கியாஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த கோர சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் தீயில் எரிந்து கிடந்த ரெயில் பெட்டிக்குள் கிடந்த பொருட்களை வெளியே கொண்டு வந்து போட்டனர்.

    அப்போது ஒரு இரும்பு பெட்டியை உடைத்து பார்த்தபோது, அதில் 500 ரூபாய் கட்டுகள் இரண்டும், 200 ரூபாய் கட்டுகள் ஏராளமாகவும் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    வழிச்செலவுக்காக யாத்ரீகர்கள் இந்த பணத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும், பாதுகாப்பு கருதி இரும்பு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை பத்திரமாக கொண்டு சென்றனர். அதேபோல் ரெயில் பெட்டியின் மேலே ஏறி ஆய்வு நடத்தினர். அப்போது அந்த ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளின் வெப்பநிலை மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பாகவும் சோதனை செய்தனர்.

    • கிழக்கு மண்டல புதிய அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • ரூ.4 கோடி மதிப்பீட்டில் அலுவலகம் கட்ட மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன இதில் 1-வது மண்டலத்தில் கிழக்கு 1 முதல் 20 வார்டுகள் உள்ளன. இந்த மண்டலத் திற்கு தனி அலுவலகம் இல்லாமல் மதுரை ஆனை யூரில் உள்ள அரசு கட்டி டத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மதுரை சர்வேயர்காலனி ரவுண்டானா அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் அலுவலகம் கட்ட மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    இதற்கு அரசு ஒப்புதல் கிடைத்த நிலையில் இன்று பூமிபூஜை நடந்தது. அமைச்சர் மூர்த்தி கலந்து ெகாண்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீரராக வன், கவுன்சிலர்கள், கார்த்திகேயன், ரோகிணி பொம்மை தேவன், தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட தலைவர் நேரு பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து செட்டிகுளம் ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாவடி கட்டும் பணிகளையும் அமைச்சர் ெதாடங்கி வைத்தார்.

    • மண் சுமந்த கோலத்தில் சுந்தரேசுவரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • இரவு சுவாமி-அம்மன் கோவிலை வந்தடைந்த பின்னர் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கடந்த13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 19-ந்தேதி முதல் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் 7-வது நாள் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான புட்டுத்திருவிழா விமரிசையாக நடந்தது.

    காலை 5 மணிக்கு சுவாமி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக பழைய சொக்கநாத சுவாமி கோவில் முன்னுள்ள விருது நகர் இந்து நாடார்கள் உறவின்முறை பரிபாலன சபை திருக்கண் மண்டபம், திருமலை ராயர் படித்துறை என்.எல்.பி. அக்ரஹாரம், அனுமார் கோவில் படித்துறை, குருசாமி சாஸ்திரிகள் மண்டபப்படி, சாரதா வித்யா பவனம் மெட்ரிக் மேல்நிலைபள்ளி திருக்கண் மண்டபம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், பேச்சியம்மன் படித்துறை வழியாக, ஒர்க் சாப் ரோட்டில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு எழுந்தரு ளினர்.

    பின்பு வணிக வைசியர் மண்டபத்தில் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்த மதியம் 1 மணியளவில் மண் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 3 மணிக்கு மீண்டும் சுவாமி-அம்மன் மண்ட பத்தில் இருந்து புறப்பட்டனர். ஆரப் பாளையம் பொன்னம்மாள் மண்டபத்திற்கு எழுந்தருளினர். பின்னர் பொன்னகரம் பிராட்வே, ஒர்க் ஷாப் ரோடு, நாயக்கர் புது தெரு, வக்கீல் புது தெரு, கீழ வெளி வீதி அம்மன் சன்னதி வழியாக கோவிலை சென்றடைவர்.

    இன்று காலை சுவாமி -அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பின்னர் நடை சாத்தப்பட்டது. இரவு சுவாமி-அம்மன் கோவிலை வந்தடைந்த பின்னர் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    • செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 11½ பவுன் நகை-ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி பங்களா மேடு தெருவை சேர்ந்தவர் புது ராஜா (வயது 42). இவர் செல்போன் பழுது பார்க்கும் கடை மற்றும் விற்பனை செய்யும் கடை வைத்துள் ளார். இவரது மனைவி க.விளக்கு மருத்துவமனை–யில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்தநிலையில் புது ராஜாவின் நண்பரான திலீப்குமார் அவரிடமிருந்து வாங்கிய கடன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றார். அந்த பணத்தை வீட்டின் உள் அறையில் இருந்த பீரோவில் வைத்து பூட்டிவிட்டு மகனை அழைத் துக் கொண்டு கடைக்கு சென்றார்.

    முன்னதாக மனைவி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், புதுராஜாவின் மகள் தனிஷ்கா (14) வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் தாக–மாய் இருக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்று தனிஷ் காவிடம் கேட்டுள்ள–னர்.

    அவர் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவரது கவனத்தை திசைதிருப்பிய அந்த பெண்கள் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த பணம் ரூ.8 லட்சம் பணம் மற்றும் ஏற்கனவே இருந்து 11½ பவுன் தங்க நகைக–ளையும் திருடி சென்றனர். சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டு போலீசார் வழக் குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமயநல்லூர், உசிலம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட அச்சம்பத்து துணை மின்நிலையத்தில் கீழமாத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை லாலாசத்திரம், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர், காமாட்சிபுரம், கொடிமங்கலம், நாகர்தீர்த்தம், பாறைப்பட்டி, புதூர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்டி கோட்டத்திற்குட்பட்ட எழுமலை ேக.வி. துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 11 மணிவரை மின்தடை ஏற்படுகிறது. உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எருமார்பட்டி, கீழமாத்தூர் பீடரில் நாகமலைப்புதுக்கோட்டை, கீழமாத்தூர் பஞ்சாயத்து, நான்கு வழிச்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • சோழவந்தான் பேரூர், வார்டு நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    அதிமுக பொது குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர், வார்டு நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி யூனியன் தலைவர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேசன், தென்கரை ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா, ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, பேரூர் துணை செயலாளர் தியாகு, 5-வது வார்டு செயலாளர்அசோக், 10-வது வார்டு செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் துரை கண்ணன், ஜெயபிரகாஷ், மாரி, பேட்டை பாலா, மன்னாடி மங்கலம் ராஜபாண்டி, பால் பண்ணை ராஜேந்திரன், பிரேம், சுரேஷ், ராஜா, பாலுசாமி, மணி, அழகர் ஜூஸ்கடை கென்னடி, பி.ஆர்.சி. மகாலிங்கம் முள்ளிப்பள்ளம் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டி அருகே வழிகாட்டி பலகை திறப்பு விழா நடந்தது.
    • பலகையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தொடக்க விழாவினை முன்னிட்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு கண்ட பள்ளி வழிகாட்டு பலகையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவி சித்ரா துணைத் தலைவர் சதீஷ்குமார், வழக்கறிஞர் செல்லம், கட்சி நிர்வாகிகள், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அழகுமாரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை குருநாதன் செய்திருந்தார்.

    • தொடர்ந்து இந்த வாகனத்தின் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் ராட்சத இரும்பு உருளையை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

    தொப்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ராட்சத இரும்பு உருளையை ஏற்றி சென்று லாரி தருமபுரி மாவட்டம், பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று காலை வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து லாரி தலைகுப்புற கவிழ்ந்ததில் ராட்சத உருளையும் சாலை ஓரம் கவிழ்ந்தது.

    இதை தொடர்ந்து இந்த வாகனத்தின் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ராட்சத இரும்பு உருளையை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

    வாகன இடிபாடுகளில் சிக்கியவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தவிபத்தால் பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • முன்னதாக இந்த சிறப்பு ரெயிலில் மொத்தம் 63 பேர் வந்ததாக பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது.
    • ஊர் திரும்புபவர்கள் ஆகியோரை கணக்கெடுத்தபோது 2 பேர் மாயமான தகவல் கிடைத்தது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் வந்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் இறந்தனர். 25 பேர் லேசான மற்றும் பலத்த காயம் அடைந்து ரெயில்வே மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிகிச்சையில் சற்று உடல் நலம் தேறியவர்கள் 22 பேர் இன்று மதியம் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    முன்னதாக இந்த சிறப்பு ரெயிலில் மொத்தம் 63 பேர் வந்ததாக பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது பலியானவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், ஊர் திரும்புபவர்கள் ஆகியோரை கணக்கெடுத்தபோது 2 பேர் மாயமான தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ரெயில்வே போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் தீ விபத்து சம்பவத்தில் அவர்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    • லேசான காயமடைந்தவர்களை மீட்டு ரெயில்வே ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • அமைச்சர் மூர்த்தி அந்த சிறுவனுக்கு காலணி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தார்.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில், உத்தரப்பிரதேசத்தில் ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் தங்கியிருந்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் 9 பேர் பலியானார்கள். லேசான காயமடைந்தவர்களை மீட்டு மதுரை ரெயில்வே ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    அப்போது தனது தாத்தா, பாட்டியுடன் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக வந்த 4 வயது சிறுவன் ஸ்வேதாஸ் சுக்லா நடந்த நிகழ்வுகள் தெரியாமல் எப்போது ராமேசுவரம் செல்வோம்? என்னை ராமேசுவரம் அழைத்து செல்லுங்கள், நான் ராமேசுவரத்தை பார்க்க வேண்டும் என கூறியது அங்கிருந்தவர்களின் மனதை உருக்குவதாக அமைந்தது.

    மேலும் ரெயில் விபத்தில் சிறுவன் அணிந்திருந்த காலணி ரெயிலில் சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த அமைச்சர் மூர்த்தி அந்த சிறுவனுக்கு காலணி மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தார். அமைச்சர் மூர்த்தியின் இச்செயல் அங்கிருந்தவர்களை நெகழ்ச்சி அடைய செய்தது.

    • அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
    • மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சந்தன மகாலிங்கம்-சுந்தர மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் அடர் வனப்பகுதியில் உள்ளது.

    இதனால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நாளை 28-ந்தேதி பிரதோஷம் வருவதை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் தாணிப்பாறை கேட்டில் இருந்து மலையேறி சென்று தரிசிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பயணிகள் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் கத்தி போன்ற ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மழை பெய்தாலோ, காட்டுத் தீ ஏற்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    • பலரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி சட்டரீதியான விசாரணை நடத்த உள்ளார்.

    மதுரையில் நேற்று அதிகாலை சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தீ விபத்து குறித்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி சட்டரீதியான விசாரணை நடத்த உள்ளார். மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

    விபத்து குறித்து பொதுமக்களிடம் ஏதேனும் தகவல் அல்லது ஆதாரம் இருந்தால் அதை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கொடுக்கலாம். அல்லது ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர், தெற்கு வட்டம், 2-வது மாடி, சன்ராக்ஷா பவன், பெங்களூரு - 560 023 என்ற முகவரிக்கு கடிதம் வழியாகவும் தெரிவிக்கலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ×