என் மலர்
மதுரை
- அ.தி.மு.க. மாநாட்டு புளியோதரை விவகாரத்தில் அஷ்டலட்சுமியே நேரில் வந்தாலும் குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை
மதுரையில் அ.தி.மு.க. வீர வரலாற்றில் எழுச்சி மாநாடு கடந்த 20-ந் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டு வெற்றிக்காக உழைத்த மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களுக்கு பாராட்டு விழாவும், சிறப்பு அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை, பீடா ஆகிய வற்றுடன் இரவு விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா கட்டி காத்த இயக்கத்தை இன்றைக்கு நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமையேற்று நடத்தி வருகிறார்.
மதுரை மண்ணில் முதல் மாநாட்டை நடத்தி தி.மு.க. விற்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி திகழு கிறார். இந்த ஆட்சி எப்போது முடியும். மு.க.ஸ்டாலின் எப்போது வீட்டுக்கு செல்வார் என்று தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
விரைவில் தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி யார் பதவி ஏற்பார். அதற் காக நாம் அயராது உழைக்க வேண்டும். இன்றைக்கு 2 கோடி உறுப்பினர்களை கொண்ட மகத்தான இயக்க மாக அ.தி.மு.க. உருவெடுத்து உள்ளது. வருகிற பாராளு மன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெரும் வகை யில் இந்த மதுரை மாநாடு நமக்கு முதல் புள்ளியாக அமைந்திருக்கிறது .
மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் லட்சோப லட்சம் தொண்டர்கள் திரண்டனர். பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆற்றிய வீர உரை தமிழக அரசியலில் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. மக்கள் மத்தியிலும் பெரும் வர வேற்பு பெற்றுள்ளது.
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு இந்திய அரசியல் வரலாற்றில் முக்கி யத்துவம் பெற்றுள்ளது அந்த அளவுக்கு பல லட்சம் மக்கள் குவிந்து மதுரையில் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய எழுச்சி அலையை உரு வாக்கி தந்துள்ளனர்.
அஷ்டலட்சுமி
மாநாட்டில் தொண்டர்க ளுக்கு பசியாற உணவு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் சிறப்பாக ஏற்பாடு செய்தார். 300 கவுண்டர்களில் உணவு வழங்கப்பட்ட நிலையில் ஒரு கவுண்டரில் 10 அண்டா புளியோதரை மீதமானதை பெரிதாக பேசுகிறார்கள் குறை சொல்பவர்கள் என்றைக்குமே குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அதை பெரிது படுத்த தேவை யில்லை.
அஷ்டலட்சுமியே நேரில் வந்து காட்சி அளித்தாலும் மூக்கு சரியில்லை, முடி சரியில்லை என்று குற்றம் கண்டுபிடித்து குறை கூறு பவர்கள் தமிழகத்தில் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறார்கள்.
எனவே அ.தி.மு.க.வின் வெற்றி மாநாட்டை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் இது போன்ற நயவஞ்சக செயலை நாம் பெரிது படுத்தாமல் அ.தி.மு.க. மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் ஏறும் வகை யில் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாராட்டு கூட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
- மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- ஊதிய உயர்வு, பணப்பலன்களை வழங்கும் அரசாணை வெளியி டப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது.
மதுரை
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அரசு மருத்துவ மனைகள், மருத்து வக்கல்லூரிகளில் பணி யாற்றும் டாக்டர்க ளுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டி இன்று மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
அதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
ஊதிய உயர்வு, பணப்பலன்களை வழங்கும் அரசாணை வெளியி டப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுவரை அதனை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களின் இந்த போராட்டம் காரணமாக மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
- குடிநீர் வரி-டெபாசிட் தொகை உயர்வுக்கு எதிர்ப்பு மதுரை மாநகராட்சியை கண்டித்து மக்களை திரட்டி போராடுவோம்.
- அ.தி.மு.க. குழுத்தலைவர் சோலைராஜா பேட்டிளித்தார்.
மதுரை
மதுரை மாநகராட்சி கூட்டம் கடந்த 25-ந் தேதி மேயர் இந்திராணி தலைமையில் கமிஷனர் பிரவீன் குமார் முன்னி லையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள், மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிக ளின் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மதுரை மாநகராட்சி சார்பில் விரைவில் குடியி ருப்பு மற்றும் வணிக நிறுவ னங்கள், தொழிற்சாலை களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது என்றும் இதற்காக குடிநீர் வரி மற்றும் டெபாசிட் தொகை நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த குடிநீர் வரி, டெபாசிட் தொகை அதிக அளவில் உயர்த்தப்பட்டதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சியின் அ.தி.மு.க. குழு தலைவரும், எதிர்க் கட்சித்தலைவருமான சோலைராஜா கூறியதா வது:-
மதுரை மாநகராட்சி எவ்வித அடிப்படை வசதிக ளையும் மதுரை மக்களுக்கு சரிவர செய்து கொடுக்க வில்லை 100 வார்டுகள் உள்ள மாநகராட்சியில் பல வார்டுகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீரில் சாக்கடையும் கலந்து வருவ தால் பொதுமக்கள் வீதிக ளில் வந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது.
பல பகுதிகளில் குப்பை கள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடுகளும் அதிகரித்துள்ளன. கோவில் மாநகரம் என்று அழைக்கப் பட்ட மதுரை தி.மு.க. நிர்வாக சீர்கேடு காரணமாக குப்பை நகரமாக மாறி உள்ளது.
தற்போது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முல்லை பெரி யாறு கூட்டு குடிநீர் திட்டம் முழுமை அடைந்து வரும் நிலையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாநகராட்சி அதிக அளவில் வரி மற்றும் டெபாசிட் தொகை வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி வீடுகளுக்கு 5 ஆயிரம் முதல் 12 ஆயிரத்து 500 வரை டெபாசிட் தொகையும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும் குடிநீர் டெபாசிட்டாக வசூலிக்க தீர்மானம் கொண்டுவரப் பட்டுள்ளது.
மேலும் மாதம் மாதம் செலுத்தும் குடிநீர் வரியாக வீடுகளுக்கு ரூ. 120 முதல் 210 வரையிலும், வணிகம் மற்றும் தொழிற்சாலை களுக்கு ரூ.360 முதல் 630 வரையிலும் குடிநீர் கட்ட ணமாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
ஏழை எளிய மக்கள் குடிநீருக்காக 5000 ரூபாய் டெபாசிட்டும் மாதந்தோறும் 120 கட்டணமும் எப்படி கட்ட முடியும். எனவே மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக அனைத்து கவுன்சிலர்களையும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் குடிநீர் டெபாசிட் மற்றும் வரி உயர்வுக்கு கட்சி தலைமை யின் அனுமதியுடன் மக்களை திரட்டி போராட வேண்டிய நிலை அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 150 சதவீத சொத்துவரி உயர்வால் மதுரை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் மீது வரி சுமை சுமத்தாமல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செயல்படுத்திட மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை அ.தி.மு.க. சார்பில் வேண்டு கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சோழவந்தான், ஆனையூரில் நாளை மின்தடை ஏற்படும்.
- சோழவந்தான், ஆனையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பூதகுடி பீடரில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
மதுரை
மதுரை அருகே உள்ள சோழவந்தான் துணை மின் நிலையம் மற்றும் ஆனையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பூதகுடி பீடரில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே நாளை (29-ந்தேதி) காைல 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலெட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிரா யிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் மற்றும் சோழவந்தான் பகுதிகள்.
சிக்கந்தர் சாவடி, பி. ஆர்.சி.காலனி, பாசிங்கா புரம், வாகைகுளம், பூதகுடி, விசால்நகர், இ.எம். டி.நகர், குமாரம், வடுகப்பட்டி, அரியூர், கோவில்பாப்பா குடி, கீழநெடுங்குளம் பகுதிகள்.
மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
- அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- நிகழ்ச்சி முடிவில் ஞானகுமார் நன்றி கூறினார்.
மேலூர்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மேலூர் கோட்டை கிணறு தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மதுரை 6-ம் பகுதி செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். சபரிமலை சேவைகள், சங்க வளர்ச்சி குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், 7-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கமாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலூர் துணைச் செயலாளர் அழகுராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஞானகுமார் நன்றி கூறினார்.
- இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியை அடுத்து உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் 10-ம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த அண்ணன் உறவு முறையை கொண்ட காட்டு ராஜா (வயது 36). அடிக்கடி வந்து செல்வார்.
சம்பவத்தன்று பெண் ணின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த காட்டுராஜா இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக் கவே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை நிகழ்ந்ததாக தெரி கிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து அவரது தாயார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மகளை அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோ தனை செய்தபோது, அந்த பெண் 11 வார கர்ப்பிணியாக இருந்ததை தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மகளிடம் நடந்த விவரம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் மேலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி விசாரணை நடத்தி இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த காட்டு ராஜாைவ போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர்.
- உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
- உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பங்கேற்று பரிசு வழங்கினார்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 37-வது ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் மெர்ஸி தலைமை–யில் நடைபெற்றது. தொடக் கமாக பள்ளியின் ஆண்ட–றிக்கை வாசிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் மலர், பள்ளி தாளாளர் பானு ஆர்.சி. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் அமுதா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முதல் மூன்று இடங் கள் பிடித்த மாணவி–களுக்கு பரிசுகளை வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், மம்மி டாடி நிறுவனர் நிஜாமுதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரசேகர், கட்சி நிர்வாகிகள் பிரபு ஜான்சன், சசிகுமார், அய்யனார்குளம் ஜெயக்குமார், அழகு மாரி, வில்லானி பாண்டி ஆகி–யோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவி–களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நாளை அ.தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.
- அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அருகில் கூறியிருப்பதாவது-
மதுரை வளையங்குளத் தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் ஏறுவதற்கும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை அழகர் கோவில் உள்ள பழமுதிர் சோலை கோவிலில் நாளை (29-ந்தேதி) மாலை 4 மணி அளவில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
இந்த தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவ நாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் ஜக்கையன், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் ராஜ் சத்யன் மற்றும் முன்னாள், இந்நாள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்தியாவில் உள்ள கட்சிகளுக்கு முன்னோடி இயக்கமாக தி.மு.க. திகழ வேண்டும்.
- சேலம் இளைஞரணி மாநாடு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.
மதுரை
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர், அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:-
டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. இதில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 20,625 இளைஞரணி செயல் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
சேலம் இளைஞரணி மாநாடு இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளுக்கு முன்னோடி இயக்கமாக தி.மு.க. இயக்கம் திகழ்கின்ற வகையில் சிறப்புடன் நடைபெறும்.
செப்டம்பர் 20-ந்தேதி மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூரில் மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி வழங்குகிறார்.
மேலும் மதுரை கிழக்கு, சோழவந்தான், மேலூர் தொகுதிகளில் ஆகிய 3 தொகுதிகளில் உள்ள மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் பேர்களுக்கு பொற்கிழியும், பூத்து கமிட்டி உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படு கிறது
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட துணை செய லாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமைச் செயற் குழு உறுப்பினர் கரு.தியாகராஜன், இளைஞரணி மாநில துணை செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி மாவட்ட செயலாளர் மருதுபாண்டி, பகுதி செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கலாநிதி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், இலக்கிய அணி நேருபாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அழகு பாண்டி, துணை அமைப்பா ளர்கள் வைகை மருது, இளங்கோ, பேரூர் செயலாளர் வாடிப்பட்டி பால்பாண்டி,நகர் செயலாளர் மேலூர் யாசின், விவசாய தொழி லாளர் அணி செயலாளர் ஒத்தக்கடை சரவணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வ கணபதி, பாபு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் உமா சிங்கத்தேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மேலூர் அருகே மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது.
- ரோட்டின் இருபுறமும் சைக்கிள் பந்தய ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.
மேலூர்
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட சைக்கிளிங் கழகம் சார்பாக சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டி மேலூர் நாவினிபட்டியில் நடைபெற்றது. மேலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மதுரை மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் சேர்மன் வல்லத்தரசன் முன்னிலை வகித்தார். மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் போட்டியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் ராஜா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.மேலூர் தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் கெங்காதரன், மதுரை மாவட்ட சேர்மன் சின்னன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் துணைத் தலைவர் ஜான்சன் கலைச்செல்வன், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மேலூர் டி.எஸ்.பி ஆர்லியஸ் ரொபோனி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் 3 இடங்களை வென்றோருக்கு சான்றி தழ்களும், பதக்கங்களும், கோப்பை களும் வழங்கப்பட்டது. போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நடைபெற்ற போட்டியில் முதல் 2 இடங்களை வென்றவர் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாவட்டத்தின் சார்பில் கலந்து கொள்கிறார்கள். சைக்கிள் பந்தயத்தை ரோட்டின் இருபுறமும் சைக்கிள் பந்தய ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.
- போலீசார் ஆட்டோவில் கடத்தப்பட்ட கருப்பையாவை தேடி வந்தனர்.
- முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மதுரை:
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள நடுமுதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். வழக்கம்போல் இன்று காலை வீட்டில் இருந்து டீக்கடைக்கு புறப்பட்டு சென்றார். டீ தயாரிப்பதற்கான பணியில் மும்முரமாக இருந்தார்.
அப்போது அங்கு ஆட்டோ ஒன்று மின்னல் வேகத்தில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் கருப்பையாவை, குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவுக்குள் போட்டனர். பின்னர் அந்த ஆட்டோ அங்கிருந்து சென்று மறைந்தது. இதைப் பார்த்த அங்கு டீ குடிக்க வந்தவர்கள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து செக்கானூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் ஆட்டோவில் கடத்தப்பட்ட கருப்பையாவை தேடி வந்தனர். இதற்கிடையே செக்கானூரணி அருகேயுள்ள பன்னியான் கண்மாய் பகுதியில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தது இன்று காலை மர்ம நபர்களால் ஆட்டோவில் கடத்தப்பட்ட கருப்பையா என்பது தெரியவந்தது. அவர் கட்டையால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். மேலும் அவருக்கு அருகிலேயே கட்டை ஒன்றும் ரத்தக்கரை படிந்தவாறு கிடந்தது.
கொலையுண்ட கருப்பையாவின் உடலை கைப்பற்றிய போலீசார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு, இன்ஸ்பெக்டர் திலகராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாகவும், நிலத் தகராறு தொடர்பாக சிலருடன் முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் செக்கானூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர் ஆட்டோவில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாதுகாப்பு கருதி இரும்பு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
- ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளின் வெப்பநிலை மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பாகவும் சோதனை செய்தனர்.
மதுரை:
மதுரை ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். விதிமுறைகளை மீறி அந்த ரெயில் பெட்டியில் கொண்டு வரப்பட்ட கியாஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கோர சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் தீயில் எரிந்து கிடந்த ரெயில் பெட்டிக்குள் கிடந்த பொருட்களை வெளியே கொண்டு வந்து போட்டனர்.
அப்போது ஒரு இரும்பு பெட்டியை உடைத்து பார்த்தபோது, அதில் 500 ரூபாய் கட்டுகள் இரண்டும், 200 ரூபாய் கட்டுகள் ஏராளமாகவும் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வழிச்செலவுக்காக யாத்ரீகர்கள் இந்த பணத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும், பாதுகாப்பு கருதி இரும்பு பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை பத்திரமாக கொண்டு சென்றனர். அதேபோல் ரெயில் பெட்டியின் மேலே ஏறி ஆய்வு நடத்தினர். அப்போது அந்த ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளின் வெப்பநிலை மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பாகவும் சோதனை செய்தனர்.






