என் மலர்
நீங்கள் தேடியது "வரி-டெபாசிட்"
- குடிநீர் வரி-டெபாசிட் தொகை உயர்வுக்கு எதிர்ப்பு மதுரை மாநகராட்சியை கண்டித்து மக்களை திரட்டி போராடுவோம்.
- அ.தி.மு.க. குழுத்தலைவர் சோலைராஜா பேட்டிளித்தார்.
மதுரை
மதுரை மாநகராட்சி கூட்டம் கடந்த 25-ந் தேதி மேயர் இந்திராணி தலைமையில் கமிஷனர் பிரவீன் குமார் முன்னி லையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள், மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிக ளின் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மதுரை மாநகராட்சி சார்பில் விரைவில் குடியி ருப்பு மற்றும் வணிக நிறுவ னங்கள், தொழிற்சாலை களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது என்றும் இதற்காக குடிநீர் வரி மற்றும் டெபாசிட் தொகை நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த குடிநீர் வரி, டெபாசிட் தொகை அதிக அளவில் உயர்த்தப்பட்டதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சியின் அ.தி.மு.க. குழு தலைவரும், எதிர்க் கட்சித்தலைவருமான சோலைராஜா கூறியதா வது:-
மதுரை மாநகராட்சி எவ்வித அடிப்படை வசதிக ளையும் மதுரை மக்களுக்கு சரிவர செய்து கொடுக்க வில்லை 100 வார்டுகள் உள்ள மாநகராட்சியில் பல வார்டுகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீரில் சாக்கடையும் கலந்து வருவ தால் பொதுமக்கள் வீதிக ளில் வந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது.
பல பகுதிகளில் குப்பை கள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடுகளும் அதிகரித்துள்ளன. கோவில் மாநகரம் என்று அழைக்கப் பட்ட மதுரை தி.மு.க. நிர்வாக சீர்கேடு காரணமாக குப்பை நகரமாக மாறி உள்ளது.
தற்போது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முல்லை பெரி யாறு கூட்டு குடிநீர் திட்டம் முழுமை அடைந்து வரும் நிலையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாநகராட்சி அதிக அளவில் வரி மற்றும் டெபாசிட் தொகை வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி வீடுகளுக்கு 5 ஆயிரம் முதல் 12 ஆயிரத்து 500 வரை டெபாசிட் தொகையும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும் குடிநீர் டெபாசிட்டாக வசூலிக்க தீர்மானம் கொண்டுவரப் பட்டுள்ளது.
மேலும் மாதம் மாதம் செலுத்தும் குடிநீர் வரியாக வீடுகளுக்கு ரூ. 120 முதல் 210 வரையிலும், வணிகம் மற்றும் தொழிற்சாலை களுக்கு ரூ.360 முதல் 630 வரையிலும் குடிநீர் கட்ட ணமாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
ஏழை எளிய மக்கள் குடிநீருக்காக 5000 ரூபாய் டெபாசிட்டும் மாதந்தோறும் 120 கட்டணமும் எப்படி கட்ட முடியும். எனவே மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக அனைத்து கவுன்சிலர்களையும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் குடிநீர் டெபாசிட் மற்றும் வரி உயர்வுக்கு கட்சி தலைமை யின் அனுமதியுடன் மக்களை திரட்டி போராட வேண்டிய நிலை அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 150 சதவீத சொத்துவரி உயர்வால் மதுரை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் மீது வரி சுமை சுமத்தாமல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செயல்படுத்திட மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை அ.தி.மு.க. சார்பில் வேண்டு கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






