search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் சுமந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுந்தரேசுவரர்
    X

    புட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் காட்சியளித்த சுந்தரேசுவரர்- சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்.

    மண் சுமந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுந்தரேசுவரர்

    • மண் சுமந்த கோலத்தில் சுந்தரேசுவரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • இரவு சுவாமி-அம்மன் கோவிலை வந்தடைந்த பின்னர் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கடந்த13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 19-ந்தேதி முதல் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் 7-வது நாள் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான புட்டுத்திருவிழா விமரிசையாக நடந்தது.

    காலை 5 மணிக்கு சுவாமி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக பழைய சொக்கநாத சுவாமி கோவில் முன்னுள்ள விருது நகர் இந்து நாடார்கள் உறவின்முறை பரிபாலன சபை திருக்கண் மண்டபம், திருமலை ராயர் படித்துறை என்.எல்.பி. அக்ரஹாரம், அனுமார் கோவில் படித்துறை, குருசாமி சாஸ்திரிகள் மண்டபப்படி, சாரதா வித்யா பவனம் மெட்ரிக் மேல்நிலைபள்ளி திருக்கண் மண்டபம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், பேச்சியம்மன் படித்துறை வழியாக, ஒர்க் சாப் ரோட்டில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு எழுந்தரு ளினர்.

    பின்பு வணிக வைசியர் மண்டபத்தில் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்த மதியம் 1 மணியளவில் மண் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 3 மணிக்கு மீண்டும் சுவாமி-அம்மன் மண்ட பத்தில் இருந்து புறப்பட்டனர். ஆரப் பாளையம் பொன்னம்மாள் மண்டபத்திற்கு எழுந்தருளினர். பின்னர் பொன்னகரம் பிராட்வே, ஒர்க் ஷாப் ரோடு, நாயக்கர் புது தெரு, வக்கீல் புது தெரு, கீழ வெளி வீதி அம்மன் சன்னதி வழியாக கோவிலை சென்றடைவர்.

    இன்று காலை சுவாமி -அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பின்னர் நடை சாத்தப்பட்டது. இரவு சுவாமி-அம்மன் கோவிலை வந்தடைந்த பின்னர் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    Next Story
    ×