search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rail box"

    • வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    சென்னை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மென்ட் பெங்களூர் சிட்டி ஜங்ஷன் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது.

    வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    360 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் டபுள் டக்கர் ரெயில் சென்றடைகிறது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என மாறிய டபுள் டக்கரில் பொது பிரிவு என்று அழைக்கப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க வேண்டும்.

    ஏசி இல்லாத சேர் கார் பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரெயில்வே நிர்வாகம் டபுள் டக்கர் ரெயிலில் புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

    அதன்படி டபுள் டக்கரில் ஏசி வசதி இல்லாத 5 சாதரண பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர சரக்குகளை கையாள ஒரு பெட்டி என மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வசதியுடன் இன்று முதல் சென்னை பெங்களூர் டபுள் டக்கர் ரெயில் இயக்க படுகிறது.

    குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள்.
    • அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முக்கியமான ரெயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்றாகும்.

    கன்னியாகுமரியிலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு இந்த ரெயில் 12.30 மணி நேரத்தில் சென்றடையும். தினமும் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலையில் 6.30 மணிக்கு சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    இதேபோல் சென்னை எக்மோர் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலையில் 5.35 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்து அடையும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், ஏசி பெட்டிகள், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி வருபவர்களும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்பவர்களும் பெரும்பாலும் அதிகமானோர் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே முன்பதிவு தொடங்கிய உடனே இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் நிரம்பிவிடும். தக்கல் டிக்கெட்டை பொறுத்தமட்டில் ரெயில் பயணத்தின் முந்தைய நாள் முன்பதிவு செய்யப்படும். தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.

    ஆன்லைன் மூலமாகவும் தக்கல் டிக்கெட் எடுப்பதற்கு பலரும் முயற்சி மேற்கொண்டும் ஒரு சிலருக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்து வருகிறார்கள். தினமும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    பண்டிகை காலங்கள் கோடை விடுமுறை தினங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும். கோடை விடுமுறையான மே மாதத்தில் முன்பதிவு செய்வதற்கு தற்பொழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    அனைத்து ரெயில்களிலும் மே மாதத்திற்கான முன்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது. அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் நிலை உள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி மே 22-ந்தேதி வரை முன்பதிவு செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும்.

    மே 2-ந்தேதிக்கு பிறகு முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ரெயில்வே நிர்வாகமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்ய முடியவில்லை என்ற விவரத்தை முறையாக தெரிவிக்கவில்லை.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்பட இருப்பதால் முன்பதிவு வசதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டு வருவதாலும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    பயணிகள் எந்த ஒரு குழப்பமும் இன்றி இருக்கும் வகையில் தென்னக ரெயில்வே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்யப்பட வில்லை என்ற முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ரெயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெங்களூருக்கு செல்வதாக அதிகாரிகள் தகவல்
    • உறுதியான பெயர் பலகை வைக்க வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    சென்னை - பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டது. இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு காலை 8. 45-க்கு வந்தது.

    இந்த ரெயிலின் கடைசி பெட்டியில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கோவை எக்ஸ்பிரஸ் என்றும், மற்ற பெட்டிகளில் பெங்களூர்- சென்னை-கோவை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் என்றும் இருந்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

    அந்த ரெயில் கோவைக்கு செல்கின்றதா அல்லது பெங்களூருக்கு செல்கின்றதா என தெரியாமல் குழப்பத்துக்கு ஆளாகினர். பின்னர் அருகே இருந்த அதிகாரிகளியிடம் கேட்டபோது:-

    அந்த ரெயில் பெங்களூருக்கு செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து பெங்களூர் செல்லும் பயணிகள் அந்த ரெயிலில் ஏறினர்.

    இதுபோன்று ரெயில் பெட்டிகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் பலகைகள் வைப்பதால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவர்.

    எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயணிகளின் குழப்பத்தை நீக்கும் வகையில் அவர்களுக்கு இந்த ரெயில் எங்கு செல்கின்றது என்ற உறுதியான பெயர் பலகையை வைத்து ரெயிலை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரெயில் பெட்டிகள் எரிந்து கொண்டிருக்கும்போது பயணிகள் ரெயில் கடந்து சென்றது.
    • உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரை ெரயில் நிலையம் அருகே நின்றிருந்த ரெயில் பெட்டிகளில் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலா வந்த வடமாநிலத்தவர்கள் 9 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர்.

    ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடி லைன் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்து டன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

    இதில் ரெயில் பெட்டி முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரெயில் பெட்டிகள் முழுவதுமாக எரிந்தன.

    அப்போது அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற பயணிகள் ரெயில் கடந்து சென்றது. அப்போது அதிலிருந்த பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

    தீ விபத்து நடந்த தண்ட வாளம் அருகே பயணிகள் ரெயில் கடந்து சென்றபோது தீ அந்த ரெயிலை தொட்டுவிடும் வகையில் கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதுபோன்ற பெரும் விபத்து நடக்கும்போது அந்த பகுதியில் பாதுகாப்பை கருதி ரெயில் போக்கு வரத்தை நிறுத்துவது வழக்கம். ஆனால் இன்று காலை தீ பற்றி எரிந்து கொண்டிருந்த ரெயில் பெட்டி அருகே உள்ள தண்டவாளத்தில் மற்றொரு ரெயில் செல்ல அனுமதி அளித்தது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது.

    இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய விசார ணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×