search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "neighbor"

    • காலை உணவு விரிவாக்க திட்டத்தை நகர்மன்றத்தலைவர் தொடங்கி வைத்தார்.
    • நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சியில் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி, முகமதுஷாபுரம் தொடக்கப்பள்ளி, வேங்கட சமுத்திரம் தொடக்கப் பள்ளி, தெற்குதெரு பள்ளி, சத்திரம் தொடக்கப்பள்ளி மற்றும் முஸ்லீம் பெண்கள் பள்ளி ஆகிய 6 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 209 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. திருமங்கலம் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகரப்பொருளாளர் சின்னச்சாமி, கவுன்சிலா்கள் திருக்குமார், ரம்ஜான் பேகம் ஜாகீர் உசேன், அமுதா சரவணன், நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், சுகாதார அலுவலர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டுக்குள் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதை அம்ஷத் கண்டு பிடித்தார்.
    • பொருட்களுடன் கொள்ளையன் தப்பிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்றான்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 38) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர், முன்பக்க கதவில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தான். பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பிக்க தயாரானான்.

    அந்த சமயம் பக்கத்து வீட்டில் வசிக்கும் அம்ஷத் என்பவர் எதேச்சையாக அருண்குமார் வீட்டை பார்த்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், வீட்டுக்குள் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதையும் கண்டு பிடித்தார். கொள்ளையனை பொறி வைத்து பிடிக்க அவர் முடிவு செய்தார். துரித நடவடிக்கையாக தனது வீட்டில் இருந்து பூட்டை எடுத்துச் சென்று அருண்குமார் வீட்டுக்கதவில் போட்டு பூட்டினார். இதனால் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையனால் தப்பிக்க முடியவில்லை. வசமாக சிக்கிக் கொண்டான்.

    இதுபற்றி அம்ஷத், ஆட்டோ டிரைவர் அருண்குமாருக்கும், பேரூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு திருடிய பொருட்களுடன் கொள்ளையன் தப்பிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்றான்.

    விசாரணையில் அவனது பெயர் விவேக் (வயது 23), திருப்பூர் அனுப்பர்பாளை யத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. விவேக்கை பேரூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையிலான போலீசார்கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ×