search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puttkiririrvesha"

    • மதுரை புட்டுத்திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டார்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் முக்கிய விழாவான புட்டு திருவிழா நாளை (27-ந்தேதி) நடைபெற உள்ளது.

    மதுரையில் நடைபெறும் திருவிழாக்களில் புட்டுத்திருவிழாவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், புட்டுத்திருவிழா ஆகிய 2 திருவிழாக்களுக்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்ரமணிய சுவாமி, தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி நாளை நடைபெற உள்ள புட்டுத்திரு விழாவில் பாண்டிய மன்ன னாக பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி இன்று காலையில் மதுரைக்கு புறப்பட்டார்.

    முன்னதாக சுப்பிர மணியசுவாமி, தெய்வா னைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி-தெய்வானை பல்லக்கில் புறப்பட்டனர். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண்களில் எழுந்தருளி மதுரைக்கு செல்வர்.

    புட்டுத்திருவிழாவில் பங்கேற்கும் சுப்பிரமணிய சுவாமி வருகிற 31-ந்தேதி வரை மதுரை ஆவணி மூல வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 31-ந்தேதி மாலை பூப்பல்லக்கில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மீண்டும் திருப்பரங்குன்றத்தை வந்தடைவார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×