என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே தங்கும் விடுதியில் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பஞ்சூர் கரியசெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). ஜவுளி வியாபாரி. இவருக்கும், இவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் சரவணன் கடந்த 2 மாதங்களாக கிருஷ்ணகிரியில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டுவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவருடைய பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தனர். இதில் நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 21) என்பவர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பர்கூர் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் போலீசார் ஜெகதேவி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற விநாயகமூர்த்தி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வரட்டனப்பள்ளியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விறற வெங்கடேசன் (50), பாரூர் அருகே மஞ்சமேட்டில் கடையில் புகையிலை பொருடகள் விற்ற மூர்த்தி (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 3 கடைகளில் இருந்தும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராயக்கோட்டை அருகே மொபட் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே உள்ள சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). சம்பவத்தன்று இவர் தனது நிலத்தில் மொபட்டை நிறுத்தி இருந்தார். அப்போது மர்ம நபர்கள் அந்த மொபட்டை திருடிச் சென்றனர். இதுகுறித்து வெங்கடேஷ் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் விசாரணை நடத்தியதில் உத்தனப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் (45), பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கணேசன் (50) ஆகிய 2 பேரும் மொபட்டை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஜி.டி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). டிராக்டர் டிரைவர். கருங்காலிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (55). விவசாயி. இவர் தனது நிலத்தை உழவு செய்ய சுப்பிரமணியை அழைத்து இருந்தார். இதையடுத்து அவர் டிராக்டரில் முருகேசன் நிலத்தில் உழவு செய்ய நேற்று சென்றார். உடன் உறவினரான வளர்மதி என்பவரின் மகன் தேவா (12) என்ற சிறுவனையும் அவர் அழைத்து சென்றார்.
நிலத்தில் வரப்பு மீது சென்ற போது திடீரென டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுப்பிரமணியம், தேவா ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் தேவா திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சுப்பிரமணி மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்பிரணி, சிறுவன் தேவா ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் போகசந்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த தாசப்பா (வயது 68) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தியபோது கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தாசப்பாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், “தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் ஓசூரில் நடந்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், “தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் ஓசூரில் நடந்தது. இதில், காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
முன்னதாக, கட்சியின் மூத்த நிர்வாகிகள் 250 பேருக்கு பொன்னாடை அணிவித்து, பொற்கிழி வழங்கப்பட்டது. இதில், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, ஓசூர் மாநகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா எம்.எல்.ஏ., முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, மாநகர துணை செயலாளர் திம்மராஜ், பொருளாளர் சென்னீரப்பா, தொழில் அதிபர் ஆனந்தய்யா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் நன்றி கூறினார்.
ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்திற்கு ரூ.2½ கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் நாரலப்பள்ளி ஊராட்சி கடைக்கோடி மலைக்கிராமமான ஏக்கல் நத்தம் கிராமத்திற்கு கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வனத்துறை பொறியாளர் பாஸ்கர், வனச்சரக அலுவலர்கள் சக்திவேல், முருகேசன், தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஷ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி உமாபதி, வனவர்கள் ரவிசந்திரன், சம்பத்குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி ஒன்றியம் நாரலப்பள்ளி ஊராட்சி மலைக்கிராமமான ஏக்கல்நத்தம் கிராமமக்களின் சாலை வசதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.2½ கோடி மதிப்பில் கலெக்டரின் விருப்ப நிதி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி நிதியில் இருந்து தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த தார்சாலை பைரேகவுண்டனூர் முதல் ஏக்கல் நத்தம் வரை சுமார் 4.25 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. தற்போது 2 அடுக்கு ஜல்லிகள் அமைக்கப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. சாலைகளில் மலையேற்ற பகுதிகளில் மழைநீர் சாலைகளை அரிக்காத வண்ணம் 254 மீட்டர் தூரத்திற்கு சிமெண்டு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 இடங்களில் மழைநீர் செல்லும் பாதையின் குறுக்கே கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகள் அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் இருளர் இன காலனியை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கலெக்டர் பொதுமக்களிடம் பேசுகையில், ஏற்கனவே 11 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்பட்டு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியை சேர்ந்த 6 இருளர் இன மக்களுக்கு பசுமை வீடு ஒதுக்க பெற்றுள்ளது. பசுமை வீடு கட்ட அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலை பணிகள் முடிவுற்ற பின்னர் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இங்குள்ள குடிநீர் திறந்தவெளி கிணறு ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

மத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கவுண்டனூரில் சங்கருக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. இவர் விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் சங்கரின் தாயார் ஒரு வீட்டை பூட்டிவிட்டு, அதன் அருகே உள்ள மற்றொரு வீட்டில் தூங்க சென்றார்.
அப்போது வீட்டு கதவின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.7 லட்சத்தை திருடி சென்றனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்கர், மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இதே போல் சங்கர் வீட்டின் அருகே வசிக்கும் கட்டிட மேஸ்திரி முருகன் என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 2 பவுன் நகைகளையும், மாது என்பவருடைய வீட்டில் ரூ.6 ஆயிரம் உண்டியல் பணம் ஆகியவற்றையும் திருடி சென்றனர். இதுகுறித்து அவர்கள் மத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மத்தூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே, சானமாவு காட்டில் இருந்து 30 யானைகள் போடூர்பள்ளத்துக்கு விரட்டப்பட்டன.
ஓசூர்:
தேன்கனிக்கோட்டை ஊடே துர்க்கம் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் அருகே சான மாவு காட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. பின்னர் இவை சுற்றுப்புறமுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்தவாறு இருந்தன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து நேற்று மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை சூளகிரி அருகேயுள்ள போடூர்பள்ளம் காட்டுக்கு விரட்டினர். மேலும் இந்த யானைகளை அங்கிருந்து, ஏ.செட்டிப் பள்ளி, அத்திமுகம், பேரிகை வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு ஓரிரு நாளில் விரட்ட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஓசூரில் காரில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளர் மீட்கப்பட்டார். அவரை கிருஷ்ணகிரி அருகில் மர்ம கும்பல் இறக்கி விட்டு சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா அண்ணாமலை நகர் மெயின் 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் லூயிஸ் (வயது 44). இவர் ஓசூர் சிப்காட்டில் உள்ள ஏசியன் டொபாக்கோ நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல தனது காரில் பணிக்கு சென்றார். இரவு 7 மணி அளவில் பணியை முடித்துக் கொண்டு காரில் தனது நிறுவனத்தில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 4 பேர், அவரை கத்தி முனையில் மிரட்டி காருடன் கடத்தி சென்றார்கள்.
இதை நிறுவன வாசலில் நின்ற சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் இது குறித்து அவரது மனைவி சுகன்யா பிரின்சிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
கடத்தப்பட்ட மேலாளர் பீட்டர் லூயிசை, அவர் ஓட்டிச் சென்ற காரிலேயே மர்ம நபர்கள் கடத்தி சென்றார்கள் என்பதால் அந்த கார் குறித்து மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த கார் எந்த வழியாக செல்கிறது? என போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் பார்த்தனர். அதே நேரத்தில் பீட்டர் லூயிசின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அவரை கடத்திய கும்பல் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் அவரை விடுவித்தனர். காரில் இருந்து இறங்கிய அந்த கும்பல் பின்னால் வந்த வேறு ஒரு காரில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதைத்தொடர்ந்து பீட்டர் லூயிஸ் கந்திகுப்பத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு காரில் சென்றார். அங்கிருந்து தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஓசூர் சிப்காட் போலீசார் அவரை மீட்டு வந்தார்கள்.
விசாரணையில் பீட்டர் லூயிசை கடத்திய கும்பல் அவரது கண் மற்றும் வாயில் துணியால் கட்டி அழைத்து சென்றது தெரிய வந்தது. அவரிடம் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியதாகவும், போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த அந்த கும்பல் அவரை இறக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது. பீட்டர் லூயிசிற்கு வேறு யாருடனும் பிரச்சினை இருந்ததா? அதனால் இந்த சம்பவம் நடந்ததா? என ஓசூர் சிப்காட் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா அருகே ஐ.டி.சி. என்ற பெயரில் சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு மனித வள மேம்பாட்டுத்துறை மேலாளராக பணிபுரிந்து வருபவர் பீட்டர் லூயிஸ் (வயது 45). இவருக்கு சுகன்யா பிரின்சி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் அண்ணாமலை நகர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை வேலையை முடித்து விட்டு பீட்டர் லூயிஸ் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அலுவலக வாசலில் மர்ம நபர்கள் 4 பேர், காரை வழிமறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை, கத்திமுனையில் காரிலேயே கடத்தி சென்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு, உதவி அதிகாரி கவுரி என்பவர் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து வேகமாக காரில் சென்று விட்டனர். அவர்கள் யார்? எதற்காக தனியார் நிறுவன மேலாளரை கடத்தி சென்றனர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும், பீட்டர் லூயிசின் செல்போனும் ஆப் செய்யப்பட்ட நிலையில் உள்ளதால், அலுவலர்கள் மற்றும் குடும்பத்தினர் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இதுகுறித்து ஒசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் பீட்டர் லூயிசை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.