என் மலர்
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள சின்ன நாகதோனை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 40). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் மதுபோதையில் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ஆனந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை ரத்து செய்ய ஆணை வழங்கிய மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை ரத்து செய்ய ஆணை வழங்கிய மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.
இதில், மேற்கு மாவட்ட பொருளாளர் மாயவன், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொகுதி செயலாளர் தியாகு, மன்னர்மன்னன், சிவா, சமூக ஊடக மைய மாநில துணை செயலாளர் அம்பேத்கர், மகளிர் அணி ஜெயலட்சுமி மற்றும் நிர்வாகிகள் திராவிட ராசா, அசோகன், குபேந்திரன், துரைவளவன், தொகுதி செயலாளர்கள் பிரபாகரன், துரைகுட்டி, முரளி, ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அருண், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீசார் பேவநத்தம் சிவன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அரசகுப்பம் அஜித் (வயது 24), கெலமங்கலம் கணேசா காலனி சசிகுமார் (24), மற்றொரு சசிகுமார் (23), அண்ணா நகர் முரளி (20), சின்னட்டி பாஸ்கர் (30) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் பேடரப்பள்ளி முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). கார் மெக்கானிக். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து சதீஷ் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள பீரேபாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 25). மளிகை கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கடன் பிரச்சினை காரணாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீசார் பேவநத்தம் சிவன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அரசகுப்பம் அஜித் (வயது 24), கெலமங்கலம் கணேசா காலனி சசிகுமார் (24), மற்றொரு சசிகுமார் (23), அண்ணா நகர் முரளி (20), சின்னட்டி பாஸ்கர் (30) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்தங்கரையில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களிடம் பேரூராட்சி பணியாளர்கள் அபராதம் விதித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஊத்தங்கரை நான்கு ரோட்டில் பேரூராட்சி செயல் அலுவலர் மதியழகன் தலைமையில் இளநிலை உதவியாளர் சேகர் தேர்வுநிலை பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அந்தந்த பகுதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக ஜிங்கலூர் ஏலகி (வயது 28), பாகலூர் நாராயணன் (53), போச்சம்பள்ளி மேக்லாம்பட்டி சீதாராமன் (36), ஆவத்தவாடி பெரியண்ணன் (55) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கடைகளில் விற்பனைக்கு வைத்து இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள பேயனூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மனைவி சத்தியா (வயது 30). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த சத்தியா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
அவரை குடும்பத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்தியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெலமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் அப்பகுதி கிராம மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டு யானை நேற்று கெலமங்கலம் அருகே உள்ள கோட்டட்டி கிராமத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு இருந்த முட்டைகோஸ் மலர்களை மிதித்து சேதப்படுத்தியது.
தொடர்ந்து அந்த யானை ஜக்கேரி, பொம்மதாத்தனூர், லட்சுமிபுரம், புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் சென்றது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று பட்டாசுகள் வெடித்து யானையை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினார்கள். காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.
குருபரப்பள்ளி அருகே ஆம்னி பஸ்சில் கொண்டு சென்ற ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
குருபரப்பள்ளி:
சேலம் சிவதாபுரத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 36). இவர் சேலத்தில் உள்ள வெள்ளி நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் 3 பைகளில் 26 கிலோ வெள்ளி நகைகளை சேலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செகந்திராபாத்துக்கு தனியார் ஆம்னி பஸ்சில் கொண்டு சென்றார்.
அந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் ஒரு ஓட்டலில் இரவு சாப்பாட்டுக்காக நிறுத்தப்பட்டது. பஸ் டிரைவர் மற்றும் வீரமணி உள்ளிட்ட பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சாப்பிட சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் பஸ்சுக்கு வந்தனர். அப்போது வீரமணி அமர்ந்து இருந்த இருக்கை அருகில் வைத்திருந்த 10 கிலோ வெள்ளி நகைகள் இருந்த ஒரு பை திருட்டு போனது. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமணி இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ்சில் வைத்திருந்த வெள்ளி நகை திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் இருந்து பர்கூர் வழியாக சென்னைக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பர்கூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் சரக குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய தகவலின் பேரில், பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் குழுவினர் பர்கூர் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் அந்த லாரியில் வந்தவர்கள் பர்கூரை அடுத்த கோட்டூரை சேர்ந்த டிரைவர் வடிவேல் (வயது 40), கிளீனர் வேல்முருகன் (30) என தெரிய வந்தது.
இவர்கள் குஜராத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு லாரியை ஓட்டி வந்த போது, பெங்களூரு நைஸ் ரோடு சுங்கச்சாவடி அருகே அந்த லாரியை மர்ம நபர்கள் நிறுத்தி அதில் பார்சல்களை ஏற்றி சென்னையில் இறக்கினால் ரூ.5 ஆயிரம் தருவதாக கூறியதும்,
அந்த பார்சல்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேல், வீரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.






