search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnagiri robbery"

    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 33 சவரன் தங்க நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது யார் என கண்டறிய கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசக்தி (வயது40). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சிவசக்திக்கு கமலா என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் சேலம் அருகே தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக சிவசக்தி பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 19-ம் தேதி திருவயலூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு கணவன், மனைவி இருவரும் சேலத்திற்கு சென்று அங்கேயே தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 33 சவரன் தங்க நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசில் சிவசக்தி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது யார் என கண்டறிய கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    ராயக்கோட்டையில் தண்ணீர் கேட்பது போல் நடித்து பூசாரி மனைவி கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணம் பறித்துசென்ற 6 பேர் கொண்ட கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை கூட்டுரோடு தக்காளி மண்டி அருகே ஓசூர் செல்லும் சாலையில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது42). இவர் அங்குள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்களது வீடு மட்டும் தனியாக உள்ளது.

    கிருஷ்ணமூர்த்திக்கு சொந்த ஊரான கெலமங்கலம் அடுத்துள்ள யூ.புரம் கிராமம் ஆகும்.

    தற்போது இவர் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருவதால் ராயக்கோட்டையில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் கிருஷ்ண மூர்த்தி வீட்டின் கதவை மர்ம நபர்கள் தட்டினர். உடனே எழுந்து வந்து சுமதி கதவை திறந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் எங்களது லாரி ரிப்பேர் ஆகி விட்டது. அதனால் லாரியை உங்கள் வீட்டின் அருகே நிறுத்தி விட்டு காலை வந்து எடுத்து விடுகிறோம் என்று கூறினர். பின்னர் அவர்கள் குடிக்க தாகம் எடுக்கிறது. அதனால் குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கூறினர். அவர் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுக்க சென்றார்.

    திடீரென மர்ம நபர்கள் வீட்டிற்குள் சென்று சுமதியின் கழுத்தில் கத்தியை வைத்தனர்.

    பின்னர் அவரிடம் வீட்டில் உள்ள பணம், நகைகள் எல்லாம் எடுத்துவா? இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் பதறி போன சுமதி வீட்டில் பீரோவில் இருந்த 80 ஆயிரம் பணம், 3½ பவுன் தங்க நகைகளை எடுத்து கொடுத்தார். மர்ம கொள்ளையர்கள் நகை, பணத்தை பறித்து கொண்டு வெளியில் வந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை வெளி பக்கமாக பூட்டி விட்டு அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். திருடிய வீட்டில் இருந்து போலீசாருக்கு தகவல் கூறி விடுவார்கள் என்று கொள்ளையர்கள் செல்போனையும் பறித்து சென்றனர்.

    கிருஷ்ணமூர்த்தி, சுமதி ஆகியோர் கதவை வேகமாக தட்டி சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே வீட்டு கதவின் பூட்டை உடைத்து தம்பதியினரை மீட்டனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் கூறினர்.

    இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

    போலீசார் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் கேட்பது போல் நடித்து 6 பேர் கொண்ட கும்பல் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணம் பறித்து சென்றது தெரியவந்தது. அந்த கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து இன்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்கள் கைரேகை தடயங்கள் பதிவாகி உள்ளதா? என்று தடங்கள் சேகரித்து வருகின்றனர். தீரன் அதிகாரம் ஒன்று சினிமா படத்தில் லாரியில் வந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்வார்கள். அவர்களை கதாநாயகன் கார்த்தி கைது செய்வார். அதே போல தற்போது ராயக்கோட்டையில் லாரியில் வந்து கொள்ளை கும்பல் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
    ×