என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி கொள்ளை"

    • ராயக்கோட்டை சாலையில் உள்ள துளசி பார்மசி மருந்து கடையிலும் ஷட்டர் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • அடுத்தடுத்து நடந்த இரண்டு கொள்ளை சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பகுதியில் சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான டிஎன் 24 என்கிற புதிய ஆண்களுக்கான ரெடிமேட் ஷோரூம் நேற்று திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்றிரவு புதிதாக திறக்கப்பட்ட ரெடிமேட் ஷோரூம் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் சுரேந்தருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் விரைந்து வந்து உடனடியாக ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விரைந்து வந்து சிசிடிவி ஆதாரங்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் ராயக்கோட்டை சாலையில் உள்ள துளசி பார்மசி மருந்து கடையிலும் ஷட்டர் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இரண்டு கொள்ளை சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 33 சவரன் தங்க நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது யார் என கண்டறிய கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசக்தி (வயது40). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சிவசக்திக்கு கமலா என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் சேலம் அருகே தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக சிவசக்தி பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 19-ம் தேதி திருவயலூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு கணவன், மனைவி இருவரும் சேலத்திற்கு சென்று அங்கேயே தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 33 சவரன் தங்க நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசில் சிவசக்தி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது யார் என கண்டறிய கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    ×