என் மலர்tooltip icon

    கரூர்

    • சாலைப்புதூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.38 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது
    • வியாபாரிகள், எண்ணெய் முகவர்கள் கலந்து கொண்டனர்

     கரூர்

    கரூர் மாவட்டம், சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 72.47½ குவிண்டால் எடை கொண்ட 19 ஆயிரத்து 475 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.85-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.10-க்கும், சராசரி விலையாக ரூ.18.71-க்கும் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 428-க்கு விற்பனையானது. அதேபோல் 130.52½ குவிண்டால் எடை கொண்ட 290 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.01-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.35-க்கும், சராசரி விலையாக ரூ.76.69-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.75.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.57.05-க்கும், சராசரி விலையாக ரூ.70.10-க்கும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்து 142-க்கு விற்பனையானது. 197.58 குவிண்டால் எடை கொண்ட 266 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.140.11-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.125.99-க்கும், சராசரி விலையாக ரூ.134.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.125.52-க்கும், சராசரி விலையாக ரூ.144.59-க்கும் என மொத்தம் ரூ.27 லட்சத்து 31 ஆயிரத்து 758-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.37 லட்சத்து 92 ஆயிரத்து 328-க்கு விற்பனையானது.

    • கரூரில் இருசக்கர வாகனம் திருட்டு
    • போலீசார் விசாரணையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்

    கரூர், 

    கரூர், பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 42) இவர் கடந்த, 15-ந்தேதி கரட்டுப்பாளையம் கன்னிமார் கோவில் அருகே, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கரூர் ராயனூரை சேர்ந்த பிரசாந்த் (21) வெங்கமேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

    • குளித்தலையில் வீட்டில் இருந்த பள்ளி மாணவி மாயமானார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, மாயனுார், கீழ மாயனூரை சேர்ந்த, 'சென்ட்ரிங்' தொழிலாளியின், 16 வயது மகள், அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 28ந்தேதி இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்த சிறுமி, அதிகாலையில் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்களை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது
    • போலீசார் எச்சரித்தும் கேட்காததால் கைது செய்யப்பட்டார்

    கரூர்,

    குளித்தலை,வெள்ளப்பட்டி, சின்ன தேவன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). இவர் தோகைமலை பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு, ஆபாச வார்த்தைகளில் பேசி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினார். தோகைமலை போலீசார் எச்சரிக்கை விடுத்தும், அவர் கேட்கவில்லை. இதையடுத்து போலீசார், கோவிந்தராஜை கைது செய்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வேகத்தடையில் தவறி விழுந்து பலியானார்
    • காயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

    கரூர்,

    விஸ்வநாதபுரி 'அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தனசுந்தரம் (64) இவர் தனது டி.வி.எஸ்., ஸ்கூட்டியில், மனைவி தங்கமணி (51) என்பவருடன், சின்னதாராபுரம்-கரூர் சாலை குளத்துார் பகுதியில் சென்று கொண் டிருந்தார். அப்போது, வேகத்தடைமீது மொபட் ஏறி இறங்கிய போது, நிலை தடுமாறி தனசுந்தரமும், தங்கமணியும் கீழே விழுந்தனர். அதில், தலையில் காயம் அடைந்த தங்கமணி, கரூர் அரசு மருத்துவ கல் லுாரி மருத்துவமனைக்கு கொண்டு. செல்லும் வழியில் உயிரிழந்தார். கணவன் தனசுந்தரத்துக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் மீது பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலி
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கலைவாணர் தெருவை சேர்ந்தவர் ராஜா (39). இவரின் மகன் லாபியரசு (13). இவர் அரவக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், 8-ம் வகுப்பு படித்து வந்தார். ராஜா தனது மகன் லாபியரசுடன், திண்டுக்கல்-கரூர் சாலை வாங்கலைபுதுார் பகுதியில், வேனில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக, கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆனந்து (30) ஓட்டி வந்த, ஆம்னி பஸ், வேன் மீது மோதியது. அதில், வேனில் பயணம் செய்த லாபியரசு, தலையில் அடிப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிந்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

    • வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்
    • இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் குளித்தலை அருகே உள்ள மேலவதியம் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மனைவி சின்னபிள்ளை (வயது 65). இவர் சம்பவத்தன்று அதிகாலை நடுவதியத்தில் இருந்து வதியம் பகுதிக்கு டீ குடிக்க சென்றுள்ளார். வதியம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த சின்ன பிள்ளையை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ைச ெபற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சின்னபிள்ளை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் விழுந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் புலியூர் அருகே உள்ள வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 32) கார் டிரைவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக நோய் பாதிப்பு அதிகரித்து பெரும் அவதிக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த தமிழ்மணி நேற்று வெங்கடாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த பசுபதிபாளையம் போலீசார் தமிழ் மணியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • கரூரில் 24,913 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
    • கரூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 913 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங் கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.க்ஷ இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் வட்டத்தில் 7,095 பயனாளிகளுக்கும், அரவக்குறிச்சியில் 1,974, மண்மங்கலம் வட்டத்தில் 1,650, புகளூர் வட்டத்தில் 3,091, குளித்தலை வட்டத்தில் 3,318, கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 3,935, கடவூர் வட்டத்தில் 3,850 என மொத்தம் 24 ஆயிரத்து, 913 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் கரூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • ரெயிலில் அடிபட்டவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், புகலூர் ஹோம் சிக்னல் அருகே உள்ள ரெயில்பாதையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், அவ்வழியாக சென்ற ரெயிலில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த ரெயில்நிலை அதிகாரி சீனிவாசன், கரூர் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு வேலாயுதம்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை-வருகின்ற 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியும் ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு 8- ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அறக்கொடை அறக்கட்டளை சார்பில் 2014- ஆம் ஆண்டு முதல் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய பயிற்சிக் குழும அங்கீகாரம் பெற்ற இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியும், வெல்டர் பிரிவு மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியும் ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு 8- ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    இதில் சேர விரும்புவோர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற அனைத்து வேலை நாட்களிலும் நேரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், விபரங்களை தொழிற்பயிற்சி நிலையத்தின் 04324 - 296442 / 9486505953 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் ஜூன் 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு காகித நிறுவன அறக்கொடை தெரிவித்து கொள்கிறது.

    • சாலை விபத்தில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    தூத்துக்குடி தனியார் ரசாயன நிறுவனத்தில் இருந்து இன்று காலை 8.30 மணி அளவில் டாரஸ் லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பேப்பர் மில்லுக்கு சுண்ணாம்பு கல் பாரம் ஏற்றிக் கொண்டு வந்தது. அந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வாரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பெத்தான்கோட்டை பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் மொபட்டில் முன்னால் சென்றவர் திடீரென பெத்தான் கோட்டை வலது பகுதியில் திரும்பினார். இதனால் எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த மொபட் மீது டாரஸ் லாரி மோதியது. இதில் மொபட் சுக்குநூறாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் மொபட்டை ஓட்டி வந்த பெத்தான்கோட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (80) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த அவரது பேரன் கார்த்தி (14) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×