என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கரூரில் 24,913 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
By
மாலை மலர்29 May 2023 1:14 PM IST

- கரூரில் 24,913 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
- கரூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 913 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங் கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.க்ஷ இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் வட்டத்தில் 7,095 பயனாளிகளுக்கும், அரவக்குறிச்சியில் 1,974, மண்மங்கலம் வட்டத்தில் 1,650, புகளூர் வட்டத்தில் 3,091, குளித்தலை வட்டத்தில் 3,318, கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 3,935, கடவூர் வட்டத்தில் 3,850 என மொத்தம் 24 ஆயிரத்து, 913 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் கரூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X