என் மலர்
கரூர்
- கரூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவி கோபிகாவை தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகள் கோபிகா. இவர் புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கோபிகா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை வேல்முருகன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவி கோபிகாவை தேடி வருகின்றனர்.
- க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
- சூடாமணியில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார்
கரூர்,
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்., பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். இதில் பெரியதாதம் பாளையத்தில் ரூ.1.05 லட்சம் மதிப்பில் நடந்து வரும் சமையல் கூடம் புனரமைக்கும் பணி, சூடாமணியில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் புனரமைக்கும் பணி, வீடுகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள 78 வீடுகளை ரூ.3.90 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி, தென்னிலை மேற்கில் ரூ.25.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஞ்., அலுவலக கட்டட பணிகளை பார்வையிட்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர்கள் இளஞ்சேரன், பூர்ணமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நீலகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சோதனையில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்:
கரூரில் கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர்.
இதனால் சோதனையை கைவிட்டு அதிகாரிகள் சென்றனர். இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தொடர்ந்து கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது ஒரு சில இடங்களுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர். மேலும் ஒருவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் 8-வது நாளாக இன்றும் கரூர் ராமகிஷ்ணபுரம், மாயனூர், ராயனூர் என பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தசோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் சோதனையின் போது அதிகாரிகளை தாக்கியதாக வந்த புகாரின் பேரில் போலீசார் 18 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 11 பேர் ஜாமீன் கேட்டு கரூர் ஜேஎம்கோர்ட் 1-லும், 7 பேர் ஜேஎம்கோர்ட் 2-லும் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 11 பேர் ராயவேலூரில் தங்கி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும், 7 பேர் கடலூரில் தங்கியிருந்து கடலூர் போலீஸ் நிலையத்திலும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
கரூர்:
நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள்உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ் பெருமள் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியகளால், அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
- புகழூர் பகுதியில் கரும்பு லோடுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைத்து கரும்புகளையும் தார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.
கரூர்:
கரூர் மாவட்டம் புகழூர் செம்படாபாளையம் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை வெட்டி செல்வதற்காக கரூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் பதிவு செய்து வெட்டும் தருவாயில் உள்ள கரும்புகளை சர்க்கரை ஆலை நிர்வாகம் கூலி ஆட்கள் மூலம் கரும்புகளை வெட்டி எடுத்து டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் சர்க்கரை ஆலைக்கு இரவு பகலாக கொண்டு வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு சுமார் 100 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் டிப்பர் மூலம் கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும்போது வாகனத்தை தளவாபாளையம் பிரிவு சாலையில்திருப்பும் பொழுது திடீரென எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி டிராக்டர் வாகனம் கரும்பு டிப்பருடன் தார் சாலையில் கவிழந்தது.
இதனால் டிராக்டர் டிப்பரில் இருந்த கரும்புகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் எனகொட்டியது.இதனால் அப்பகுதியில் தார் சாலை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் உடனடியாக ெபாக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தார் சாலையில் கொட்டி மலைபோல் குவிந்து கிடந்த கரும்பு குவியல்களை சிறிது சிறிதாக தார் சாலையின் ஓரத்திற்கு தள்ளப்பட்டது. நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைத்து கரும்புகளையும் தார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு அந்த வழியாக அனைத்து வாகனங்களும் சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.7 லட்சத்துக்கு விற்பனையானது
- இந்த வாரம் 297 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது.
கரூர்:
கரூர் ெநாய்யல் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்நிலக்கடலை 96.23 குவிண்டால் எடை கொண்ட 297 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.50-க்கும், சராசரி விலையாக ரூ.76.50-க்கும் என ரூ.6 லட்சத்து 91 ஆயிரத்து 310-க்கு விற்பனையானது.
- மின்சார வாரிய ஊழியர் உயிரிழந்தார்
- இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் புகழூர் மின்சார வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது 45). இவர் மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக (எல்ஐ) பணியாற்றி வந்தார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் மூலிமங்கலம் செல்லும் பிரிவு சாலையில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பிகா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது
- இதனை தொடர்ந்து கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் மா விளக்கு, பால்குடம், அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்டவை எடுத்து வந்து நேர்த்திக் கடன் ெசலுத்தினர்.
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி கம்பம் வழங்கல் மற்றும் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 19-ந் தேதி பூச்சொரிதல், 21-ந் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் மா விளக்கு, பால்குடம், அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்டவை எடுத்து வந்து நேர்த்திக் கடன் ெசலுத்தினர். 29-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவையொட்டி நேற்று மதியம் கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து கம்பத்துக்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பம் ஆற்றுக்கு செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையோரத்தில் காத்திருந்து கம்பததை தரிசனம் செய்தனர். அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில் கம்பம் விடப்பட்டது. பின்னர் அமராவதி ஆற்றில் வானவேடிக்கை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, எஸ்.பி. சுந்தரவதனம், மாநகராட்சி மண்டல குழுத்தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், கோல்ட் ஸ்பாட் ராஜா, வழக்கறிஞர் சுப்பிரமணியன், தீபா கண்ணன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராமசாமி, சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் நிரேஷ் கண்ணன், பழனி முருகன் ஜுவல்லரி பாலமுருகன், எஸ்.எஸ்.பாலிகிளினிக் டாக்டர் செந்தில் ஆண்டவன், விகேஏ பால் கருப்பண்ணன், கே.எம்.பி.மஹால் செந்தில்குமார், கல்யாண சக்கரவர்த்தி கேஸ் அங்கமுத்து , கே.எஸ். மெஸ் ராஜேந்திரன், திருமலா ஜுவல்லரி சுப்பிரமணி, மதன் கார்ஸ் மதன்குமார், பரமேஸ்வரி கேஸ் ரமேஷ், சாஸ்தா சீட்ஸ் செந்தில்குமார், கரூர் மாநகராட்சி 9-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு, பா.ஜ.க. மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார், வி.கே புட்வேர் தாந்தோணி குமார், கரூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெங்கடேஸ்வரன், வள்ளுவர் கல்லூரி நிறுவனர் செங்குட்டுவன், கரூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பேங்க் சுப்பிரமணி, கரூர் அன்பு கரங்கள் சேகர், வழக்கறிஞர் கரிகாலன், ஹோட்டல் சுப்பண்ணா ரவிச்சந்திரன், சுஜித், கரூர் மனநல மைய மருத்துவர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், புகழூர் நகராட்சி தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விசா.சண்முகம், 41-வது வார்டு மாமன்ற உறுப்பினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தண்டபாணி, ஸ்ரீ சண்முக ஜுவல்லரி சுப்பிரமணியன், இன்ஜினியர் நல்லுசாமி, ஜெய பிரதீக், கரூர் மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் சேரன் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசாமி, சேரன் பஸ் சர்வீஸ் ராஜேந்திரன், ஸ்ரீ டிராவல்ஸ் முருகேசன், கரூர் பயிற்சி மையத்தின் நிறுவனர் ரமேஷ், உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது
- அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம் நடைபெற்றது
கரூர்,
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 10-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடம் தனி நபருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.தற்போது அவர் ஆழ்துளை கிணறு தன்னுடைய இடத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் இங்கு தண்ணீர் பிடிக்க வரக்கூடாது என்று கூறுகிறார். இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த கங்கைகொண்ட சோழபுரம் 10-வது வார்டு பகுதி மக்களும், மகாத்மா காந்தி நகர் பகுதி மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் தேவி நாகராஜன் தலைமையில் கங்கைகொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பள்ளபாளையத்தில் கோழிகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
- கோழிகளை திருடும் போது செல்போனை விட்டு சென்றதால் மாட்டிக்கொண்டார்
கரூர்,
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள பள்ளபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்(வயது 60). இவர் தனது தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 3 கோழிகளை காணவில்லை என பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது கோழிக்கூண்டு அருகில் ஒரு செல்போன் இருந்துள்ளது. இதுபற்றி சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சின்னதாராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி சம்பவ இடத்திற்கு சென்று செல்போன் உரிமையாளர் பள்ளபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த பிரசாத்(31) என்பவரிடம் விசாரணை செய்தார். இதில் கோழிகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரை குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
- பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை, வெறிநாய் கடித்ததில் பலி
- நாய்களை கட்டுப்படுத்திட கோரிக்கை
கரூர்,
கரூர் மாவட்டம், வரவணை ஊராட்சி பாப்பணம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கதிர்வேல். இவர் தனது தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கதிர்வேல் தனது தோட்டத்தில் அமைந்துள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த வெறிநாய்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடிக்க முற்பட்டுள்ளன. அப்போது ஆடுகள் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். இதனால் வெறிநாய்கள் தப்பி ஓடி விட்டன. இதில் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளில் ஒரு ஆடு பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளது. இதேபோல் வரவணை ஊராட்சி பகுதியில் தொடர்ந்து வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் இறந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்தி கால்நடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடவூர் ஒன்றிய ஆணையர் சுரேஷிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
- கரூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா
- ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
கரூர்
கரூர் மாநகரில் வீற்றிருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் அம்மனாக இருப்பதால், பல்வேறு இடங்களில் இருந்தும் கரூர் மாரியம்மன் கோவிலுக்கு திருவிழா காலங்களில் பக்தர்கள் படையெடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 14-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதன் பின்னர் பக்தர்கள் பால்குடம் மற்றும் புனிதநீர் எடுத்து வந்து கம்பத்தில் ஊற்றி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
கடந்த 19-ந்தேதி பூச்சொரிதல் விழாவையொட்டி, கரூர் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் 47 பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். கடந்த 21-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேரோட்டம் நிகழ்ச்சியில் தேரில் வீற்றிருந்தபடியே முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். மேலும் நேற்றுமுன்தினம் முதல் இன்று (புதன்கிழமை) வரை திருவிழாவின் முக்கிய நாட்களாக கருதப்படுகிறது. விரதம் இருந்து வரும் பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்தி கொண்டு வந்து பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று காலை முதலே கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் ஜவகர்பஜார் வீதியில் மக்கள் அலைகடலென திரண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீராடி பக்தர்கள் நீண்ட அலகினை தங்களது கன்னத்தில் குத்தி கொண்டு பக்தி பரவசத்துடன் வந்து கோவில் முன்பு சாமி வந்து ஆடினர். இன்னும் சிலர் தங்களது முதுகில் வாள்களை குத்தி கொண்டும், கன்னத்தில் அலகு குத்தி கொண்டும் வந்தனர். அப்போது அவர்களை வரவேற்கும் விதமாக மேள, தாளங்கள் முழங்கப்பட்டன.
இதற்கிடையே பசுபதிபாளையம் அமராவதி ஆற்றிலிருந்து பொக்லைன் எந்திரம் மூலம் பறவைகாவடி தயார் செய்யப்பட்டது. பின்னர் அமராவதி ஆற்றில், தற்காலிகமாக வைக்கப்பட்ட குழாய் தண்ணீரில் புனித நீராடிய பக்தர்கள், தங்களது உடலில் இரும்பு கொக்கியை மாட்டி கொண்டனர். அப்போது பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடியே பறவை காவடி எடுத்து வந்தனர். அப்போது வழிநெடுகிலும் நின்றிருந்த பக்தர்கள் பறவை காவடியை வணங்கினர்.
பின்னர் கோவிலை வந்தடைந்ததும் பொக்லைன் எந்திரத்தில் தொங்கிய பக்தர்கள் கீழே இறங்கி நேர்த்திக் கடனை நிவர்த்தி செய்தனர். இதே போல் நாக்கில் வேல் குத்தி கொண்டும், அக்னி சட்டி ஏந்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தும் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதையொட்டி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
பக்தர்கள் கூட்டத்தை கண்காணிப்பதற்கு ஏதுவாக ஜவகர்பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. கோவிலின் எதிரே அமைக்கப்பட்டிருந்த கரூர் புறக்காவல்நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த கணினி திரையில் அதன் பதிவுகளை கண்காணித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவிலின் முன்புறத்தில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து, பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர். கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா இன்று (புதன்கிழமை) மாலை 5.15 மணிக்கு நடக்கிறது. பின்னர் இரவு 7.30 மணியளவில் ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற உள்ளது.






