என் மலர்tooltip icon

    கரூர்

    • நடன கலைஞரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் ராயனூர் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் லிவிங் (வயது 22). நடன கலைஞர். இவர் கடந்த 31-ந்தேதி நடைபெற்ற கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழாவை பார்வையிட்டார். பின்னர் அமராவதி ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்டினம் ஒன்றில் ஏறுவது தொடர்பாக லிவிங்க்கும், கரூரை சேர்ந்த கவின், நவீன், லிங்கமாணிக்கம் ஆகியோருக்கும் இடையே ராட்டினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லிவிங்கை, கவின், நவீன், லிங்கமாணிக்கம் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கரூர் டவுன் போலீசார் கவின், நவீன், லிங்கமாணிக்கம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் மோதி 4 பேர் காயம் அடைந்தனர்
    • இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி மோகனசுந்தரி (வயது 32). இவர் குளித்தலை காவிரி நகர் பகுதியில் தள்ளுவண்டியில் பானி பூரி உள்ளிட்ட தின்பண்டங்களை விற்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வழக்கம்போல தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வேன் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிகள்கள் மற்றும் மோகனசுந்தரி வைத்துள்ள தள்ளு வண்டியில் மோதியதி உள்ளது.

    இந்த விபத்தில் தள்ளுவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. மேலும் மோகனசுந்தரி, குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்த (பாலாஜி 19), வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (57), கவுசல்யா (22) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். இதைக்கண்ட அங்கிருநு்தவர்கள் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த கவுசல்யா மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
    • இந்த விபத்து தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கரூர்:

    தென்னிலை அருகே உள்ள வைரமடையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 69). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தென்னிலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக நேற்று காலை கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரூரில் இருந்து தென்னிலை நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ராமசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ராமசாமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வரத்து அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று டன் ஒன்று ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையானது

    கரூர்:

    நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிசெல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் மரவள்ளிகிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். தற்போ ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று டன் ஒன்று ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரித்துள்ளதாலும் மரவள்ளி கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வைகாசி விசாகத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்:

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று காலை பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 108 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் மாலை 7 மணியளவில் படிபூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி விநாயகர் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து முதல்படியில் வேல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஒவ்வொரு படியிலும் வாழை இலையில் தேங்காய், பழங்கள், பூக்கள், வெற்றிலை வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிடட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கரூர் அண்ணாசாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனையொட்டி பாலமுருகனுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம் உளளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாலமுருகனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணியர், பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி, நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவில் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • கொத்தனார் சரமாரியாக வெட்டி கொலை செய்யபட்டார்
    • இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லடை ஊராட்சி பகுதியான கல்லடைையை சேர்ந்தவர மருதை. இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் தீர்ந்து விட்டது என செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்.

    மேலும் பெட்ரோல் வாங்க அவரை நண்பர்கள் நள்ளிரவில் அழைத்துள்ளனர். அப்போது அவருடைய மனைவி இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்? நள்ளிரவு வெளியே போகக்கூடாது என கூறினார். இருந்த போதிலும் மனைவி சொல்லை கேட்காமல், பெட்ரோல் வாங்க வெளியே தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலை மோகன்ராஜ் திருச்சி- தோகைமலை மெயின் ரோட்டில் கைகாட்டி பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவலை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், முன்விரோதத்தில் பெட்ரோல் வாங்க வேண்டும் என்று பொய் சொல்லி அழைத்து நண்பர்களே அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மோகன்ராஜ்க்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். நள்ளிரவில் கொத்தானர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • பணியாளர்கள் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "உலக புகையிலை ஒழிப்பு தினம்" உறுதிமொழி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் உறுதிமொழி ஏற்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு முதன்மை பொது மேலாளர் வரதராஜன், எலக்ட்ரிக்கல் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன் உற்பத்தி பொது மேலாளர்கள் ராஜலிங்கம், மகேஷ், பாதுகாப்பு துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், ஐடி உதவி பொது மேலாளர் பாலமுருகன் மற்றும் மனிதவளம் முதுநிலை மேலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.



    • நள்ளிரவில் கொத்தானர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லடை ஊராட்சி பகுதியான கல்லடைையை சேர்ந்தவர மருதை. இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் கொத்தனார் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் தீர்ந்து விட்டது என செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் பெட்ரோல் வாங்க அவரை நண்பர்கள் நள்ளிரவில் அழைத்துள்ளனர். அப்போது அவருடைய மனைவி இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்? நள்ளிரவு வெளியே போகக்கூடாது என கூறினார்.

    இருந்த போதிலும் மனைவி சொல்லை கேட்காமல், பெட்ரோல் வாங்க வெளியே தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை மோகன்ராஜ் திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் கைகாட்டி பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவலை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

    முன்விரோதத்தில் பெட்ரோல் வாங்க வேண்டும் என்று பொய் சொல்லி அழைத்து நண்பர்களே அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த மோகன்ராஜ்க்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். நள்ளிரவில் கொத்தானர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 8-வது நாளாக நேற்றும் கரூரில் 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • சோதனையின் முடிவில் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.

    கரூர்:

    கரூரில் கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர். பின்னர் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் 8-வது நாளாக நேற்றும் கரூரில் 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கரூரில் ஒரு அலுவலகத்தில் இருந்து 2 அட்டை பெட்டிகளை எடுத்து சென்றனர். இதுகுறித்து கேட்டபோது வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    இதேபோல் மற்றொரு அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது கம்ப்யூட்டர் சி.பி.யு.வை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்நிலையில் கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த சோதனையின் முடிவில் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கரூர்:

    தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கல்லடை அண்ணாநகரில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி ஜல்ஜா (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.தென்னிலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செஞ்சேரிவலசை சேர்ந்த சதீஷ்குமார் ( 37) என்பவர் அப்பகுதியில் உள்ள காட்டுபகுதியில் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • குளித்தலையில் நர்சிங் மாணவி மாயமானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., ஈச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மகள் மேனகா தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் எழுந்து பார்த்த போது மேனகாவை காணவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து காமாட்சி, தன் மகளை காணவில்லை என கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகிளிப்பட்டி கிராமத்தில் வெண்டைக்காய் சாகுபடி தீவிரம் அடைந்து வருகிறது
    • வெண்டைக்காய்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள் வெண்டைகாய்களை பறித்து உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். தற்போது கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காய்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×