வரத்து அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று டன் ஒன்று ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையானது
வரத்து அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி
Published on

கரூர்:

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிசெல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மரவள்ளிகிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். தற்போ ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று டன் ஒன்று ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரித்துள்ளதாலும் மரவள்ளி கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com