என் மலர்tooltip icon

    கரூர்

    • வேலாயுதம்பாளையம் அருகே ஆற்றில் பிணமாக மிதந்த பெண் பிணத்தால் பரபரப்பு ஏற்பட்டது
    • பிணத்தை கைப்பற்றி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் மரவாபாளையம் சுடுகாடு அருகே காவிரி ஆற்றில் தண்ணீரில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கரை ஓரமாக ஒதுங்கியது. அதேபோல் சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஆற்றின் நடுப்பகுதியில் இருந்த திட்டில் மிதந்தது. போலீசார் பிணங்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காவிரி ஆற்றில் நடு திட்டில் சிக்கிக்கொண்ட வாலிபர் நாமக்கல் மேட்டுத் தெருவை சேர்ந்த ஜெகநாதன் ( 32) என்பது தெரியவந்தது. இவர் நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரின் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும்அவரது உறவினர்கள் 15 பேருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் காவேரி ஆற்று தடுப்பணை குளித்தனர். அப்போது ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த ஜெகநாதனை காணவில்லை. இந்நிலையில் ஜெகநாதனின் உடல் மரவாபாளையம் சுடுகாடு அருகே காவிரி ஆற்றுப்பகுதியில் ஒதுங்கியிருப்பது தெரியவந்தது.

    அதேபோல் காவிரி ஆற்றின் ஓரத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் யார், அவர் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா? அல்லது தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? யாரேனும் இவரை கொலை செய்து காவிரி ஆற்று தண்ணீரில் வீசி சென்று விட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சுமார் 35 வது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெணை கடந்த 3 நாட்களாக காணவில்லை. எனவே கொடுமுடி அருகே காணாமல் போன பெண்ணின் பிணமா? என்பது அவரது உறவினர் வந்த பிறகு தெரியவரும். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையம்
    • குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    குளித்தலை, 

    கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட கணேசபுரத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டிடமும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புத்தூர் ஊராட்சி பகுதிகளான வேங்கடத்தான் பட்டியில் புதிய நாடக மேடையும், சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஆதனூரில் புதிய நாடக மேடையும், வேப்பங்குடியில் 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையமும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ள பாளையம் ஊராட்சியில் காந்தி நகர் காலனியில் புதிய நாடக மேடையும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.பேட்டையில் புதிய நாடக மேடையும் கட்டுவதற்கான பூமி பூஜையை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார், தொடர்ந்து சிவாயப் ஊராட்சி வேப்பங்குடியில் 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தில் கட்டப்பட்ட தானிய கிடங்கு அமைத்தல், பெருமாள் பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் திறந்து வைத்தார்.

    விழாவில் கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், தோகைமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், விவசாய அணி துணை அமைப்பாளர் சசிகுமார், மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர், மருதூர் பேரூராட்சி அலுவலர் சரவணன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், புத்தூர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சந்திரன், சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி, ஊராட்சி செயலாளர் அருள், கே.பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி கதிர்வேல் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புகழூர் நகராட்சி பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் மண் சாலைகளை தார் சாலையாக மாற்றும் பணிகள், பழுதடைந்த காங்கிரீட் சாலைகளை புதுப்பிக்கும் பணிகள், பழுதடைந்த தார் சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தார் சாலையின் தரம் குறித்தும், தார்சாலை அமைப்பதற்கு ஜல்லிகள், தார் கலவைகள் போடப்படும் விதம் குறித்தும் கேட்டறிந்தார். சாலைகள் அமைக்கும் போது தரமற்ற சாலையாக இருக்கக் கூடாது என்றும், தரமான உறுதியான சாலைகளை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    ஆய்வின் போது நகராட்சி நிர்வாக அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல்
    • தலை நசுங்கி புகளூர் நகராட்சி ஊழியர் பலி

     நொய்யல் 

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 58) .இவர் கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சியில் பம்பு ஹவுசிங் ஆப்பரேட்டராக (குடிநீர் மோட்டார் இயக்குபவர்) கடந்த 30 வருடங்களாக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊரான காட்டுப்புத்தூருக்கு சென்று விட்டு காலை தனது மோட்டார் பைக்கில் காட்டுப்புத்தூரில் இருந்து புறப்பட்டு புகளூர் நகராட்சி அலுவலகத்திற்கு செல்வதற்காக சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக்போஸ்ட் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார் .

    அப்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாமக்கல்லில் இருந்து பழனிக்கு லாரியில் தவிட்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி அதிவேகமாக வந்து தங்கவேல் ஒட்டிச் சென்ற மோட்டார் பைக் மீது மோதியதில் தங்கவேல் சாலையில் கீழே விழுந்தார். இதனால் லாரி டயர் தங்கவேல் தலையில் ஏறி நின்றது. இதில் தங்கவேலின் தலை நசுங்கி தங்கவேல் துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சவடமுத்து ( 40) என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் மீது வழக்கு
    • கோபால் (வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      வேலாயு தம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ப்படு வதாக வேலாயுத ம்பாளை யம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் தலைமையி லான போலீசார் சம்பந்த ப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த கோபால் (வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோம்புப்பாளையம்சீனிவாச பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனை
    • பக்தர்களுக்கு துளசி இலை , தீர்த்தம் , அன்ன தானம் வழங்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கோம்பு ப்பாளை யத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவா சபெருமாள் கோவி லில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .

    அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்ட ப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .

    பக்தர்களுக்கு துளசி இலை , தீர்த்தம் , அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மோட்டார் பைக் மீது கார் மோதி விபத்து அரசு வங்கி ஊழியர் படுகாயம்

     வேலாயு தம்பாளையம், 

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா பத்தினம்பட்டி அருகே மேல் காண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணா (வயது 21). இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மத்திய அரசுக்கு சொந்த மான அரசுடை மையாக்க ப்பட்ட வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் குணா தனது நண்பர்களுடன் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நானப்பரப்பு பிரிவு அருகே தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கரூரிலிருந்து சேலம் நோக்கி அதி வேகமாக வந்த கார் நிலை தடுமாறி குணா ஓட்டிச் சென்ற மோட்டார் பைக் மீது மோதியது. இதில் குணா மோட்டார் பைக்குடன் சாலையில் கீழே விழுந்தார் .இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டம் கபிலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
    • 46 மது பாட்டில்களை பறிமுதல்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் அரசு மதுபான கடைக்கு பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு ஒருவர் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதன் அடிப்படையில் புங்கோடை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 56) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்உணவு திருவிழா
    • ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    வேலா யுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் அறிவியல் மற்றும் வானவில் மன்றத்தின் சார்பாக உணவுத் திருவிழா நடை பெற்றது.

    உணவு த்திருவிழாவில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயார் செய்து கொண்டு வந்திருந்த பல்வே று வகையான உணவுகளை கண்காட்சியில் வைத்தி ருந்தனர். உணவு திருவி ழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியை வளர்மதி தலைமை தாங்கி உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். அறிவியல் மன்றத்தின் பொறுப்பாசிரியை, பிரியா, மற்றும் வானவில் மன்றத்தின் பொறு ப்பாசிரியை தீபா ஆகியோர் உணவுத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . இதில் பள்ளியின் ஆசிரிய ,ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? எப்படி மாயமானார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தும் ரேவதியை கண்டுபிடிக்க முடியவில்லை

     வேலா யுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே குட்டைக்கடை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் தனபாலன் (வயது 67) .இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ரேவதி (48). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தனபாலனின் மகள் சற்று மன வளர்ச்சி குன்றியவராக இருந்து வருகிறார். மனவளர்ச்சி குன்றிய மகளை தாயார் ரேவதி கவனித்து வந்தார். இந்நிலையில் ரேவதி தனது மனவளர்ச்சி குன்றிய மகளை தன்னால் இனி பார்த்துக் கொள்ள முடியா து என்று தொடர்ந்து கூறி வந்தார்.

    அதற்கு விரைவில் ஒரு முடிவு செய்வதாகவும், மாற்று ஏற்பாடு செய்வ தாகவும் அவரது கணவர் தனபாலன் தெரி வித்துள்ளார். இந்நிலையில் தனபாலன் வீட்டிலிருந்து வெளியில் சென்று விட்டு பின்பு வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டில் இருந்து அவரது மனைவி ரேவதியை காணவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரித்தும் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விசாரித்தும், பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தும் ரேவதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    ரேவதி வீட்டிற்கும் வரவில்லை .அதனால் அதிர்ச்சி அடைந்த தனபாலன் இதுகுறித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரேவதி வீட்டில் இருந்து தானாக எங்காவது சென்று விட்டாரா ? அல்லது வீட்டில் இருந்தபோது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? எப்படி மாயமானார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர்.
    • சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர்.

       வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம், வேட்டமங்கலம் ,குந்தாணி பாளையம், நல்லி க்கோவில்,ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், புன்னம் சத்திரம், பேச்சிப்பாறை, நடையனூர், கொங்கு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர்.

    10 மாதங்களில் மரவள்ளிக்கிழங்கு விளை ந்தவுடன் உள்ளூர் பகுதிக்கு வரும் புரோக்கர்கள் மூலம் மரவள்ளிக்கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர் .மர வள்ளிக்கிழங்குகளை வாங்கிய புரோக்கர்கள் புது ச்சத்திரம், நா மகி ரிப்பேட்டை, புதன்சந்தை, மல்லூர், கீரனூர் ,சின்ன சேலம் ,ஆத்தூர் , மல வேப்பங்கொட்டை உள்ளி ட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் . வாங்கிய மரவள்ளி கிழங்கு களை சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக சவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர் .

    மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    அதே போல் சவ்வரிசி விலை உயரும் போதும், விலை வீழ்ச்சி அடையும் போதும் சேகோசர்வ் மூலம் மரவள்ளி கிழங்கு களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் ரூ 12 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர்.

    சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒருடன்மரவள்ளிக்கிழங்கை ரூ13000 க்கு வாங்கிச் சென்றனர் .நேற்று சவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ 12 எழுநூறுக்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர். மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கூலித் தொழிலாளி மாயம்

       வேலாயுதம்பா ளையம், 

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ ராமாபுரம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மணிமுத்து( வயது 35). இவர் கரூரை சேர்ந்த ஒரு தனியார் தார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது மணிமுத்து, கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே சின்ன ரெங்க ம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    அந்தப் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாய்த்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக கோபித்துக் கொண்டு மணி முத்து விட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மணி முத்துவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர் வீடுகளிலும், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மணி முத்துவை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமுத்து தானாக எங்காவது சென்று விட்டாரா ? அல்லது வேறு காரணத்தால் அவரை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×