என் மலர்tooltip icon

    கரூர்

    கூடலூர் ஊராட்சிகுழந்தையுடன் பெண் மாயம்

    கரூர்,  

    குளித்தலை அடுத்த, கூடலூர் ஊராட்சி ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் (வயது 37), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (22).

    இவர்களுக்கு விகா என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த, 5-ந் தேதி காலை, 11 மணியளவில் பாக்கியலட்சுமி தன் குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை.

    பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம், ராயனுார் வேலக வுண்டனுாரை சேர்ந்தவர் ஆனந்த் பொன்ராஜ் (வயது 41). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளில் தேடிய போது அவர் அங்கும் செல்லவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • முன்னாள் அமைச்சர், கரூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு
    • ரசாயனம் கலந்த இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவி வருகிறது.

    கரூர்,  

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரை, முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அவர் அளித்த அந்த மனுவில்,

    வேடசந்தூர் வழியே கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில், குடகனாறு கலக்கிறது. தற்போது குடகனாறில் இருந்து வரும் தண்ணீரில் ரசாயன கழிவு நீரும் கலந்து அமராவதி ஆற்றில் சேருகிறது. ஆண்டாள் கோவில் கிழக்கு, மேற்கு, பள்ளபாளையம், கருப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பொது மக்களின் குடிநீர் ஆதாரமாக அமராவதி ஆறு உள்ளது. இப்பகுதியில் பல குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரசாயனம் கலந்த இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவி வருகிறது. ஆண்டாள் கோவில் தடுப்பணையில் மீன்கள் செத்து மடிகின்றன. எனவே கழிவு நீர் கலப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அமலாக்கத்துறையினர் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 2 கார்கள் மற்றும் வேன்களில் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு வந்தனர்.
    • துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக மணல் குவாரிக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக அமலாக்கத்துறையினர் புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும் கரூர் மல்லம்பாளையம் மணல் குவாரியில் இன்று சோதனை மேற்கொண்டனர்.

    இன்று காலை அமலாக்கத்துறையினர் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 2 கார்கள் மற்றும் வேன்களில் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு வந்தனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் வந்த அவர்கள், அதிரடியாக மணல் குவாரிக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் அங்கிருந்த பணம், பில் புத்தகம் உள்ளிட்ட அலுவலக ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் மணல் குவாரியில் இருந்து, கடந்த மாத சோதனைக்கு பின்னர் இதுவரை அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்தும் அவர்கள் கணக்கிட்டனர்.

    இதற்காக பிரத்யேக தொழில்நுட்ப வல்லுனர்களையும் அவர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் மணல் அள்ளப்பட்ட அளவை நவீன கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் இந்த மணல் குவாரி மூடப்பட்டது, தடையை மீறி யாரும் மணல் அள்ளாமல் இருப்பதற்காக, அகழிகள் வெட்டப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் மணல் அள்ளியதாக அமலாக்கத்துறையினருக்கு புகார்கள் சென்றது.

    இதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. அதை வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறையினரின் இந்த சோதனை காரணமாக கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இரவு பிரிதிவிராஜ் மற்றும் குடும்பத்தினர் தோட்டத்தில் இருந்துள்ளனர்
    • தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் குந்தாணிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாதகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் அருகே குடியிருந்து வருபவர் பொன்னுசாமி. இவரது மகன் பிரதிவிராஜ்(வயது 40). இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. நேற்று இரவு பிரிதிவிராஜ் மற்றும் குடும்பத்தினர் தோட்டத்தில் இருந்துள்ளனர். அப்போது மூன்று வாலிபர்கள் பிரதிவிராஜின் வீட்டு கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். மூன்று வாலிபர்கள் வீட்டுக்குள் புகுவதை பார்த்த அவரது குடும்பத்தினர் தோட்டத்தில் இருந்து ஓடி வந்து சத்தம் போட்டுள்ளன. சத்தம் கேட்டதும் மூன்று வாலிபர்களும் வீட்டுக்குள் இருந்து தப்பி ஓடி உள்ளனர். வீட்டை சுற்றி கம்பிவேலி போடப்பட்டு இருந்ததால் 2 பேர் கம்பி வேலி தாண்டி தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.

    இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை செய்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர். 

    • க.பரமத்தி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
    • க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    கரூர்,  

    கரூர் மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48) இவர், அதே பகுதியில் உள்ள, முத்து காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த, 7 -ந்தேதி மாலை பூஜை முடிந்த பிறகு, கோவிலை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று விட்டார்.

    மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற போது, கதவு திறக்கப்பட்டிருந்தது.மேலும், உண்டியலில் இருந்த, 20 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து, ரவிச்சந்திரன் கொடுத்த புகார் படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • கேன்டில் டிரஸ்ட் காப்பகத்தில் கடந்த, 2022 முதல் தங்கியிருந்தான்.
    • தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர், 

    கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் கரூர் அருகே காந்தி கிராமத்தில் உள்ள கேன்டில் டிரஸ்ட் காப்பகத்தில் கடந்த, 2022 முதல் தங்கியிருந்தான். இந்நிலையில் கடந்த, 6-ந்தேதி காப்பகத்தில் இருந்து வெளியே சென்ற அவன், திரும்பி வரவில்லை. இதுகுறித்து, காப்பகத்தின் இயக்குனர் தர்மராஜ், கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாங்கல், மாயனுார், சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • 92 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கரூர். 

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரதியா சுரேஷ் உள்ளிட்ட போலீசார் குளித்தலை, தோகமலை, வாங்கல், மாயனுார், சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக செல்வராஜ் (வயது 42), காமராஜ் (54), குமார் (45), மற்றொரு குமார் (21), மாரிமுத்து (52), ராஜ்குமார் (37), குருவித் பீவி (65), கோவிந்தராஜ் (64), காமராஜ் (42), தெய்வீகன் (33), தமிழரசன் (26), உள்பட, 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 92 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கிருஷ்ணராயபுரம் அருகே இளம்பெண் திடீர் சாவு
    • லாலா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    கரூர்,  

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,வீரியபாளையம் ஊராட்சி, வெள்ளைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 38).கூலித்தொழிலாளி, இவரது மகள் திவ்யா பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திவ்யாவுக்கு நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் வீட்டில் வலிப்பு நோயால் துடித்துள்ளார். உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் திவ்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து லாலா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • வேலாயுதம்பாளையத்தில் குட்கா விற்பனை செய்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
    • பான் மசாலா, குட்கா, பான் பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் உள்ள ஆலமரத்து மேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான் பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது .அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்த ராஜூ (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் புகளூர் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடையில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்த புகழூர் நான்கு ரோடு பகுதியை சேர்ந்த இளங்கோவன் (67) ,அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (75) ஆகியோர் கடைகளில் விற்பனை செய்து வந்த பான் மசாலா, குட்காவை பறிமுதல் செய்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷ கதண்டுகள் அகற்றப்பட்டது
    • விஷ கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்கள்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே நல்லிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது45).விவசாயி.இவரது தென்னந்தோப்பில் இருந்த ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இது அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுத்தி வந்தது. இது குறித்து சுந்தரராஜன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் கோரிக்கை புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்கள் .இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • மாநில அளவிலான கோ-கோ போட்டி நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு பள்ளியில் நடைபெற்றது
    • தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு 12 பேர் தேர்வு

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய் யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நட த்திய 67-வது மாநில அள வில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில தேர்வு கோ-கோ போட்டி கள் நடைபெற்றது.போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.சென்னை, வேலூர், கடலூர், சேலம், கோவை, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய 8 மண்ட லங்களில் தேர்வு பெற்ற 72 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.அதில் 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடை பெற்ற இறுதிப்போட்டியில் 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் நைடைபெறும் கோ-கோ போட்டியில் பங்கேற்க உள்ளனர்.இதில், நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மனநலம் பாதித்த வாலிபரை போலீசாரும், மனித நேயத்தினரும் மீட்டு மறு வாழ்வு
    • பலரது கூட்டு முயற்சியால் மீட்கப்பட்டு சிகிச்சை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், திருக்காடுதுறை ஊராட்சி, பூலாங்காலனி, ஆலமரத்துமேடு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் சுற்றித்திரிந்தார். காலில் அடிபட்டு நடக்க இயலாமல் சாலையில் வாகனங்களுக்கு இடையூறாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் அவர் சுற்றியுள்ளார்.அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்று சாந்திவனம் மனநலக் காப்பகம் இயக்குநர் அரசப்பனுக்கு கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது.இதை தொடர்ந்து சாந்திவனம் மனநல காப்பகம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நந்த கோபால், ஏட்டு சுமித்ரா ஆகியோர் அங்கு சென்றனர்.இதனிடையே திருக்காடுதுறை கிராம நிர்வாக அலுவலர் ரவி அந்த நபரை மீட்டு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு காலில் இருந்த புண்ணிற்கு கட்டுப்போட்டுவிட்டு கரூர் வெண்ணமலையிலுள்ள கரூர் அன்புக் கரங்கள் - சிறார் மற்றும் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தார்.

    இதை அறிந்த சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், நிர்வாக செயலாளர் டாக்டர் ராமகிருஷ்ணன், மனநல மருத்துவர் டாக்டர் அருன்குமார் மற்றும் சாந்திவனம் இயக்குநர் அரசப்பன் ஆகியோர் மூலமாக கரூர் வெண்ணமலை சென்று அந்த நபரை மீட்டனர்.மீட்புக் குழுவில் செவிலியர் சித்ரா, அருள்குமார் ஆகியோரும் இடம்பெற்றனர். அவரை திருச்சி, தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆத்மா மனநல மருத்துவர் அஜய் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட நபர் கால் கீழ்பகுதி முழுவதும் புண் அதிகமாகி காலே அழுகும் சூழலில் இருந்தது. இன்னும் சிறிது நாள் சென்றிருந்தால் அந்தக் காலையே எடுக்கும் சூழல் வந்திருக்கும்.அந்தளவுக்கு கால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை ஆத்மா மனநல மருத்துவமனை செவிலியர்கள் சுத்தப்படுத்தி மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தளித்துள்ளனர், அதே நேரம் மனநல சிகிச்சையும் தொடங்கப்பட்டு உள்ளது.பலரது கூட்டு முயற்சியால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. மனித நேயம் இன்னும் மரித்துப்போகவில்லை என்பதை உணர்த்தும் விதமான இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட வி.ஏ.ஓ., மனநல காப்பகத்தினர், போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

    ×