என் மலர்tooltip icon

    கரூர்

    • பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
    • வேலாயுதம் பாளையம் பகுதிகளில்கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனை போல புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள நந்தி பெருமான் ,திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான் ,குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • செவந்திபாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு
    • கால்நடை விழிப்புணர்வு மருத்துவ முகாம்

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் செவந்திபாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாந்தி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட கால்நடை துறை உதவி இயக்குநர் லில்லி அருள்குமாரி முன்னிலை வகித்தார்.

    கால்நடை மருத்துவர்கள் திருமுருகன், சிவானந்தம் ,சேகர்மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல்,நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல் மற்றும் சிகிச்சைப் பணிகளை மேற்க்கொண்டனர்.

    மேலும் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து விழி்ப்புணர்வு ஏற்படுத்தினர். கால்நடை பராமரிப்பு குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு ஆலோசனை வழங்கினர்.சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது. இதில் செவந்திபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பயன் பெற்றனர்.

    • பல்கலைக்கழக அளவிலான வில்வித்தை போட்டி
    • புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரி 2-ம் இடம்
    • வில்வித்தை போட்டியில் 2-ம் இடம்

     வேலாயுதம்பாளையம் ,

    பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடை யேயான ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான வில்வி த்தை போட்டி இந்தியன், ரிக்கோவ் மற்றும் காம்பவுண்ட் போன்ற 3 பிரிவுகளில் புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விளை யாட்டுத்துறை செயலாளர் காளிதாசன்,ஹோலிகிராஸ் கல்லூரி பெண்கள் ஒருங்கிணைப்பாளர் திரவியா கிளாடி ,திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆண்கள் ஒருங்கி ணைப்பாளர் பால்ராஜ் , ஆகியோர் முன்னிலையில் போட்டி நடைபெற்றது.ஆண்கள் பிரிவில் பெரம்ப லூர் தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரி , திருச்சி ஜமால் முகமது கல்லூரி , திருச்சிபிஷப் ஹூபர் கல்லூரி , தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரி , திருச்சி பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி , திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி,திருச்சி தேசியக் கல்லூரி, பெண்கள் பிரிவில் கரூர் அன்னை மகளிர் கல்லூரி ,திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரி , கரூர் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, போட்டியில் பங்கு பெற்றனர்.

    போட்டியின் முடிவில் பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரி முதல் இடத்தையும், கரூர் அன்னை மகளிர் கல்லூரி, 2-ம் இடத்தையும் , கரூர் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, 3-ம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். ஆண்கள் பிரிவில் திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரி முதலிடத்தையும், திருச்சிதேசிய கல்லூரி 2-ம் இடத்தையும் ,திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, மற்றும் தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரி, 3-ம் இடத்தையும் பெற்று கோப்பையைக் கைப்பற்றி னர்.

    போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற வெற்றியாளர்களை அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மலையப்பசாமி , தலைவர் தங்கராசு, செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி , அறக்கட்டளை உறுப்பினர்கள் , முதல்வர் சாருமதி, உடற்கல்வி இயக்குனர் கலா, பயிற்று னர்கள் கார்த்தி கேயன்,சத்யா, வில் வித்தை பயிற்றுனர், துணை முதல்வர், கலை புலத்தலை வர், ஆசிரியர்கள் , அலு வலர்கள் மற்றும் மாணவி யர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    • நலநிதி செலுத்தும் தொழிலாளர்கள் கல்வி உதவித்தொகை
    • கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

    கரூர், 

    கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை 31.1.2024-க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் ப்ரீ-கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த உதவித்தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.25,000-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2023 ஆகும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு 31.12.2023-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • கரூரில் வியாபாரி உள்பட 2 பேர் மாயம்
    • பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், தரகம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38), கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி மனைவி சித்ராதேவி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை தேடிவருகின்றனர். இதே போல் கரூர் சணப்பிரட்டி அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 43), துணி வியாபாரியான இவர், சம்பவத்தன்று வியாபாரத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி யசோதை கொடுத்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.என்.பி.எல் காகித ஆலையில் ேவலை வாங்கி தருவதாக ரூ.10.42 லட்சம் மோசடி நடைபெற்று உள்ளது
    • தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் ஆர்ஜி நகர் பகு தியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மீனாட்சி.இவர்களது மகன் தினேஷ், மகள் சிந்துஜா.புகளூர் அருகே உள்ள நானப்பரப்பு ரோடு பகு தியை சேர்ந்த ஜாபர் உசேன் மகன் முகமது அராபத் (27) என்பவர் இவர்களிடம் அறிமுகமாகியுள்ளார்.

    அப்போது அவர்கள் முகமது அராபத்திடம் புக ளூர் காகித ஆலையில் வேலை உள்ளது. அதனை வாங்கி தருவதாக கூறி ரூ10 லட்சத்து 42 ஆயிரத்தை வாங்கியுள்ளனர்.நீண்ட நாட்கள் ஆகியும் வேலை கிடைக்காததால் தான் கொடுத்த பணத்தை திரும்பி தந்துவிடுமாறு முகமதுஅராபத் கேட்டு ள்ளார்.ஆனால் பணத்தை கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றி வந்தனர். பல்வேறு முறை பணத்தை கேட்டு கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது அராபத் இது குறி த்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வேலாயுத ம்பாளையம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற அடிப்படையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் பணம் பெற்று க்கொண்டு வேலை வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு வந்த தங்கவேல், அவரது மனைவி மீனாட்சி, மகன் தினேஷ், மகள் சிந்துஜா ஆகியோர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்.

    • குளித்தலையில் வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை தொடங்கப்பட்டது
    • கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் குளித்தலை சரகத்தில் குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில் அயன் சிவாயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் "வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை மற்றும் விற்பனையகம்" கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குளித்தலை சரக துணைப்பதிவாளர் பொறுப்பு ஆறுமுகம் , கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் சந்திரன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய களஅலுவலர் ரமேஷ், தோகைமலை கள அலுவலர் குமார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    • கரூர் நொய்யல் பகுதியில் திருட்டு கும்பலுடன் வந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பொதுமக்களிடம் சிக்கி கொண்டார்
    • போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், நொய்யல் குந்தாணி பாளையம் பாதகாளியம்மன் பகுதியைச் சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவரது வீட்டில் 3 நபர்கள் வீட்டிற்கு உள்ளே புகுந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த தோட்டத்தி லிருந்த பிரிதிவிராஜ் குடும்பத்தினர் சத்தம் போடவும் வந்த 3 பேரில் 2 பேர் கம்பிவேலியைத் தாண்டி க்கொண்டு தப்பியோ டிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.

    அவர் வேலாயுத ம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மதுரை மாவ ட்டம் நாகாபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கேஷ் என்பதும் தெரியவந்தது. இவர் மதுரையிலிருந்து பழநி சென்று பின் அங்கிருந்து கரூர் வந்ததும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து சாந்திவனம் நிர்வாகத்திற்கு, சப் - இன்ஸ்பெக்டர் ரெங்க ராஜிடம் தகவல் தெரிவித்தார். சாந்திவனம் மீட்புக்குழுவினரான ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் சித்ரா மற்றும் ஓட்டுநர் அருள்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் மனநலம் பாதிக்க ப்பட்டவரை அழைத்து சென்று, திருச்சி தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு, ஆத்மா மனநல மருத்துவமனையின் இயக்குநரும், சாந்திவனம் மனநலக் காப்பகத்தின் பொதுக்குழு உறுப்பினரும், மனநல மருத்துவருமான டாக்டர் ஸ்ரீதர் அந்நபரை பரிசோதித்து மனநல சிகிச்சை அளித்து வருகிறார்.

    • புகழூர் நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணி தொடங்கியது
    • புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பணியினை தொடங்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டுக்கு உட்பட்ட மாத்யூ நகர் முதல் ராம் நகர் வரை (மாத்யூ நகர் விரிவாக்கம்) பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.புகழூர் நகராட்சி 16-வதுவார்டுக்கு உட்பட்ட செந்தூர் நகர், மீனாட்சி நகர், மோகனா நகர் பகுதி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் செல்வகுமரன், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

    • பூமாண்டம்பாளையம் பகுதியில் கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
    • இவர் வளர்த்த நாய் அருகில் இருந்த 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் பூமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). இவர் வளர்த்த நாய் அருகில் இருந்த 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து கந்தசாமி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று நாயை கயிற்றால் கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

    • கரூர் பசுபதிபாளையம்கிணற்றில் குதித்த வாலிபர் சாவு
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     கரூர்,  

    கரூர் பசுபதிபாளையம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சூர்யா(வயது 24). தனியார் நிறுவன ஊழியர்.

    இவரது மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த சூர்யா அப்பகுதியில் இருந்த ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது மேலேயிருந்து கிணற்றுக்குள் குதித்துள்ளார். மது போதையில் இருந்ததால் அவரால் நீந்த முடியாமல் மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குளித்தலை அருகே பைக் மோதி 3 பேர் காயம்

    கரூர்,  

    குளித்தலை அடுத்த, இனுங்கூர் ஊராட்சி காசா காலனியை சேர்ந்தவர் சுகனேஷ் (வயது 31). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் சொந்த வேலையாக பெட்டவாய்த்தலைக்கு சென்றார். அப்போது பங்களா புதுார் இனுங்கூர் நெடுஞ்சாலையில், இனுங்கூர் நோக்கி வந்த மற்றொரு பைக் நேருக்கு நேர் மோதியது.

    இதில் சுகனேஷ் பலத்த காயமடைந்தார். எதிரே வந்து மோதிய பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த யுவராஜ் (20), பைக் ஓட்டி வந்த அதே ஊரை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    3 பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×