என் மலர்
கரூர்
- குளித்தலையில் லாரி மோதி தொழிலாளி பலி; உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்
- விபத்து ஏற்படுத்திய வாகனம் வழக்கில் சேர்க்கவில்லை என்று குற்றச்சாட்டு
கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயக்கூலித் தொழிலாளி. இவர், மேட்டு மருதூரில் இருந்து பணிக்கம்பட்டிக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.அப்போது அந்த வழியாகவந்த டிராக்டர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்த நிலையில் போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆறு முகம் இறந்ததாக வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் வழக்கில் சேர்க்கப்பட்டது என கூறியதை அடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
- விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா விளையாட்டு சைக்கிள் போட்டி நடைபெற்றது
- மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
கரூர்,
கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியை கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்தார்.கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மொத்தம் 562 பேர் கலந்து கொண்டார்கள். போட்டி 3 பிரிவுகளாக நடத்தப்பட்டு வெற்றி வெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், தடகள பயிற்றுநர் சபரிநாதன், மல்யுத்த பயிற்றுநர் மெய்ஞானமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் மகாமுனி, சதிஸ், மணிமாறன் உட்பட கலந்து கொண்டனர்.
- குளித்தலை அருகே நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது
- இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளி த்தலை சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட பகுதி களில் சுற்றுச்சூழல் மற்றும் காலநி லையை பாதுகா க்கின்ற வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை சேமித்து வைக்கின்ற மரங்களில் முக்கிய மானதாக விளங்கு கின்ற பனைமரத்தை நடுகி ன்ற முயற்சியில் விதைகள் அறக்கட்டளை மூலம் தாளியாம்பட்டி குளம் பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றா ண்டு விழாவையொ ட்டியும், தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் விதைகள் அறக்க ட்டளை, காருண்யா பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவ, மாணவி கள், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி சமூக பணித்துறை மாணவ, மாணவிகள் இணைந்து 10,000 பனை விதை நடும் நிகழ்ச்சி குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமையேற்று, பனை விதையை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழாவில் விதைகள் அறக்கட்டளை நிறுவன இயக்குனர் ஜெயந்தி வரவேற்றார், விதைகள் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்துரு நிகழ்ச்சி குறித்து வாழ்த்துரை வழங்கினார், வைகைநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி கோ பால் சிறப்புரையாற்றினார், தேசிய சமூக குடிமை பணி பொறுப்பாளர் பிரபாகரன் பனை விதை நடவு குறித்த உறுதிமொழி வாசித்தார், முசிறி அரசு கலைக்கல்லூரி சமூக பணித்துறை பேராசி ரியர் மார்சல் நன்றியு ரையாற்றினார்,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு தாளியா ம்பட்டி குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனை விதைகளை நட்டனர். இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
- கரூரில் லியோ திரைப்படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது
- வலைதளத்தை வேண்டுமென்றே முடக்கி வைப்பதாக குற்றச்சாட்டு
கரூர்,
கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 7 திரையரங்குகளில், 5 திரையரங்கங்களில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற 19-ந் தேதி வெளியாக உள்ளது.கரூர் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் கரூர் சினிமாஸ் என்ற இணையதளம் மூலம் ரசிகர்கள் புதிய திரைப்படங்களுக்கு ஆன்லைன் வழியாக புக்கிங் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கான புக்கிங் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் வெளியானது. ஆனால், 10 நிமிடத்திற்குள் வலைத்தளம் முடக்கப்பட்டது. இரவு 10 மணிக்கும், அதைத்தொடர்ந்து 11 மணிக்கும் புக்கிங் ஓபன் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை வெப்சைட் இயங்கவில்லை. மேலும், 19-ந் தேதி வரை படத்திற்கான டிக்கெட் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவித்துள்ளனர்.ரசிகர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும், வேண்டுமென்றே இணையதளத்தை முடக்கி வைத்துவிட்டு, மறைமுகமாக திரையரங்க ஊழியர்கள் டிக்கெட் விற்பனை செய்வதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த பதிவுகள் வைரலாகி வருகிறது.இது தொடர்பாக திரையரங்க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டபோது, ஒரே நேரத்தில் ஏராளமான நபர்கள் வலைதளத்தை பயன்படுத்துவதால் இவ்வாறு பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
- விடிய விடிய பெய்த கனமழையால் வீடு இடிந்து வாகனங்கள், பொருட்கள் நாசமானது
- தொழிலாளி குடும்பத்தினர் உயிர் தப்பினர்
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் கலைச்செல்வன் . இவர்கள் அந்த பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்கள்.இவர் குடியிருந்து வரும் வீடு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக நள்ளிரவு சுமார் 3 மணியளவில் திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது குமாரசாமி அவரது மகன் கலைச்செல்வன் மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்த வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுவதை சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது அந்த வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக் மீதும் சுவர் விழுந்து இருந்தது .அதிர்ஷ்டவசமாக குமாரசாமியின் குடும்பத்தினர் அந்த வீட்டிற்குள் படுத்து தூங்காமல் பக்கத்து வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததால் உயிர்த்தப்பினார்கள். வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டிவி, உணவு பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமாயின . இது குறித்து புகளூர் தாசில்தார் முருகன், வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த புகளூர் தாசில்தார் முருகன்,கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறையினர்,வேட்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டு உடனடியாக ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு இடிந்து விழுந்த சுவர்களை அகற்றினார்கள்.பின்னர் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
- புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது
- 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டனர்
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம் வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமையில் நடைபெற்றது. முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் புகளூர் தாலுகாவிற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம்,புதிய குடும்ப அட்டை கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் மொபைல் எண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர். அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்தனர். முகாம்காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
- முத்தனூர் தனியார் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
- அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினார்கள்.
வெள்ள பாதிப்புகளின் போது பழைய பொரு ட்களைக் கொண்டு மீட்பு பணிகள் மேற்கொ ள்வது, தீவிபத்தின் போது தற்காப்பு நடவடிக்கை உள்ளிட்ட வைகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்த னர். மேலும் கட்டிட இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பெரிய வள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் வேலாயுதம் பாளையம் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது தனக்கு சொந்தமான பேட்டரி ஸ்கூட்டரில் தளவாபாளையம் அருகே மலையம்மன் திருமண மண்டபம் எதிரில் வந்து கொண்டிருந்த போது பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று ஸ்கூட்டரில் வேகமாக எழுந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் பேட்டரி ஸ்கூட்டர் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
- கரூர் ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67) அரிசி கடை உரிமையாளர். கடந்த 11-ந்தேதி வீட்டில் இருந்து அரிசி கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள், நண்பர்களது வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வராஜின் மனைவி மணிமேகலை, போலீசில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாயனூர் காவிரி ஆற்றின் கரையில்பலவீனமடையும் கும்பக்குழி பாலம்
- பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
மாயனூர் காவிரி ஆற்றின் கரையில், அமராவதி பாசன வா ய்க்கால் கடைமடை தண்ணீர் வடிந்து செல்லும் வடிகா லாக, கும்பக்குழி பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக, மாயனூரில் இருந்து கட் டளை, ரெங்கநா தபுரம் ஆகிய பகுதிக்கு மக்கள் சென்று வருகி ன்றனர். கடந்தாண்டு பெய்த மழையால், பாலத்தின் தடுப்பு சுவர் உடைந்தது. அப் போது, நீர்வளத்துறை சார்பில் தற்காலிகமாக மணல் மூட்டைகள், குச்சிகள் வைத்து சரி செய்ய ப்பட்டது. பின், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. டூவீலரில் மக்கள் செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரிய வாகனங் களும் தடையை மீறி சென்று வருகின்றன. இதனால், பாலம் பலவீனமடையும் நிலை உள்ளது. எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள், அறிவிப்பு பலகை வைத்து, எச்சரிக்கை விடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கரூர் தெற்கு காந்தி கிராமம்பெண்ணை ஏமாற்றிய போலீஸ்கார
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பாரத் (வயது 36) குளித்தலையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர் கரூர் திருமாநிலையூரை சேர்ந்த பெண் ஒருவரை, திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 2012-ம் ஆண்டு ரூ. 3.40 லட்சம், 16 பவுன் தங்க நகையை பாரத் பெற்றுள்ளார். மேலும், இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த வீடியோவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக, அந்த பெண்ணை பாரத் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, பெண் கொடுத்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் பாரத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி ஆற்றில் இறந்த அடையாளம் தெரியாத பெண்
- பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அடக்கம்
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை அருகே உள்ள காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடல் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தது.
வேலாயுதம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுவரை அந்த பெண்ணின் பிரேதத்திற்கான உறவினர்கள் யாரும் வராததால் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர் . இதை தொடர்ந்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையில் ஏட்டு சரவணராஜா ஆகியோர் அந்தப் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர்






