நொய்யல் அருகே காவிரி ஆற்றில் இறந்த அடையாளம் தெரியாத பெண் பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அடக்கம்

நொய்யல் அருகே காவிரி ஆற்றில் இறந்த அடையாளம் தெரியாத பெண் பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அடக்கம்

காவிரி ஆற்றில் இறந்த அடையாளம் தெரியாத பெண் பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அடக்கம்
Published on

வேலாயுதம் பாளையம்,

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை அருகே உள்ள காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடல் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தது.

வேலாயுதம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுவரை அந்த பெண்ணின் பிரேதத்திற்கான உறவினர்கள் யாரும் வராததால் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர் . இதை தொடர்ந்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையில் ஏட்டு சரவணராஜா ஆகியோர் அந்தப் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com