என் மலர்
உள்ளூர் செய்திகள்

ேவலை வாங்கி தருவதாக ரூ.10.42 லட்சம் மோசடி
- டி.என்.பி.எல் காகித ஆலையில் ேவலை வாங்கி தருவதாக ரூ.10.42 லட்சம் மோசடி நடைபெற்று உள்ளது
- தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் ஆர்ஜி நகர் பகு தியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மீனாட்சி.இவர்களது மகன் தினேஷ், மகள் சிந்துஜா.புகளூர் அருகே உள்ள நானப்பரப்பு ரோடு பகு தியை சேர்ந்த ஜாபர் உசேன் மகன் முகமது அராபத் (27) என்பவர் இவர்களிடம் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது அவர்கள் முகமது அராபத்திடம் புக ளூர் காகித ஆலையில் வேலை உள்ளது. அதனை வாங்கி தருவதாக கூறி ரூ10 லட்சத்து 42 ஆயிரத்தை வாங்கியுள்ளனர்.நீண்ட நாட்கள் ஆகியும் வேலை கிடைக்காததால் தான் கொடுத்த பணத்தை திரும்பி தந்துவிடுமாறு முகமதுஅராபத் கேட்டு ள்ளார்.ஆனால் பணத்தை கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றி வந்தனர். பல்வேறு முறை பணத்தை கேட்டு கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது அராபத் இது குறி த்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வேலாயுத ம்பாளையம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற அடிப்படையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் பணம் பெற்று க்கொண்டு வேலை வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு வந்த தங்கவேல், அவரது மனைவி மீனாட்சி, மகன் தினேஷ், மகள் சிந்துஜா ஆகியோர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்.






