பொதுமக்களை அச்சுறுத்திய விஷ கதண்டுகள்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷ கதண்டுகள் அகற்றப்பட்டது விஷ கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்கள்
பொதுமக்களை அச்சுறுத்திய விஷ கதண்டுகள்
Published on

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே நல்லிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது45).விவசாயி.இவரது தென்னந்தோப்பில் இருந்த ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இது அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுத்தி வந்தது. இது குறித்து சுந்தரராஜன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் கோரிக்கை புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்கள் .இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com