என் மலர்
கரூர்
- பால் பண்ணையில் பணியாற்றியவர்கள் மீது தாக்குதல்
- 4 பேர் மீது வழக்கு பதிவு
கரூர்,
நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் மனைவி வனிதா(வயது 43). இவர் கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகிலுள்ள ஜெகதாபி பகுதியில் உள்ளபால் பண்ணையில் இருந்து பால் சேகரித்து நாமக்கல் கொண்டு சென்று அங்கிருந்துபாலை பதப்ப டுத்தி தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வரும் தனியார் பால் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.ஜெகதாபி பகுதியில் உள்ள பால் பண்ணையில் கரூர் மாவட்டம் செல்லா ண்டி பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணகுமா ர் (வயது 31) மற்றும் வீரராக்கியம் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது 27 ) ஆகிய இரண்டு பேர் எட்டு மாதமாக இந்த பால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர்
கடந்த ஒரு மாதமாக இவர்கள் இரண்டு பேருக்கும் சம்பளம் தரப்படவில்லை என கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து பால் பண்ணைக்கு வந்த பால்பண்ணை உரிமையாளர் வனிதாவிடம் அவர்கள் இது குறித்து கேட்டு உள்ளனர்இதில் உரிமையாளர் மற்றும் தொழிலாளிகளுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.தொடர்ந்து வனிதா மற்றும் அவருடன் வந்த மூன்று நபர்கள் சேர்ந்து சரவணக்குமார் மற்றும் கோகுலை கடுமையான வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கூலி தொழிலாளிகளான சரவணகுமார் மற்றும் கோகுல் இருவரும் உள் காயம் அடைந்து மயங்கி விழுந்தனர் இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்இது குறித்து வெள்ளியணை போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும், தலைமறைவாக உள்ள வனிதா மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
- வீட்டுக்கு திரும்புகிறேன் என்று கூறியவர் காணாமல் போனார்
- இண்டர்வியூ சென்ற வாலிபரும் மாயம்.
கரூர்,
திருநெல்வேலி மாவட்டம், பண்ணகுடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40) . இவர் கரூர், முத்துவிநாயகர் கோவில் தெருவில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தார். கடந்த, 13ல் திருநெல்வேலிக்கு வருவதாக, மனைவி செல்வியிடம், போனில் தெரிவித்தார்ஆனால், ஆறுமுகம் திருநெ ல்வேலிக்கு செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வி, கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், வெங்கமேடு, கண்ணதாசன் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் நவீன்ராஜ் (வயது 25). பி.சி.ஏ., படித்துள்ளார். இவர் கடந்த, இன்டர்வியூவில் பங்கேற்க, திருச்சி சென்றார். ஆனால், அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து, தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
- வேகத்தடை மீது கோடுகள் அழிந்து போயின
- மீண்டும் வர்ண கோடுகள் வரைய பொதுமக்கள் கோரிக்கை
கரூர்,
கரூர் மாநகரில் இருந்து புலியூர், தாந்தோணிமலை, ராயனூர், வெங் ககல்பட்டி, சணப்பிரட்டி, தொழிற்பேட்டை, நரிகட்டி யூர், வெள்ளாளப்பட்டி, ஐந்து ரோடு, அரசு காலனி, வாங்கல், உப்பிடமங்கலம், லிங்கத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகிறது. இதனால் இந்த சாலைகளில் அதிகளவு வாகன போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.இந்த பகுதிகளில் வாக னங்களின் வேகத்தை கட் டுப்படுத்திட வேகத்தடை கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சில பகுதிகளில் உள்ள வேகத்தடைகளின்வெ ள்ளை வர்ணம் அழிந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது வாகன விபத்துகளுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.எனவே, வேகத்தடை களில் அழிந்த நிலையில் உள்ள வெள்ளை சுவர் வர்ணத்தை பூசி, சாலைகளில் வாகனங்கள் எளிதாக செல் லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ள னர். துறை அதிகாரிகள் அதற்கான பணியாளர்கள் மூலம் வெள்ளை வர்ணம் பூச விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.
- பள்ளி மாணவியை திருமணம் செய்த சிறுவன் கைது செய்யபட்டான்
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்:
கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை, புலியூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளான். இது குறித்து, தான்தோன்றிமலை கிராம நல அலுவலர் விஜயா, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.
- மாயனூர் அருகே அரிவாளுடன் சுற்றிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்
- இவரது ஆடு திருடுபோனதாக கூறப்படுகிறது.
கரூர்:
மாயனூரை அடுத்த, பிச்சம்பட்டி, குடி தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 45), கூலி தொழிலாளி. இவரது ஆடு திருடுபோனதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 19ம் தேதி மதியம் 1:00 மணியளவில் பிச்சம்பட்டி, சின்ன வாய்க்கால் பாலம், சுந்தரராஜ் என்பவரின் தென்னந்தோப்பு பகுதியில், வீரப்பன் அரிவாளுடன், பொதுமக்களை தகாத வார்த்தை களால் திட்டிக்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த மாயனூர் சப் இன்ஸ்பெக்டர் காளிமுத்து, வீரப்பனை கைது செய்து, அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.
- கிருஷ்ணராயபுரத்தில் முருங்கை சீசன் துவங்கியது
- ஒரு கிலோ முருங்கை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது
கரூர்:
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதியில் முருகைக்காய் சீசன் தொடங்கியுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம், புதுப்பட்டி, லட்சுமணம்பட்டி, பாப் பக்காப்பட்டி, மலையாண்டிப்பட்டி, கோரக்குத்தி, மணவாசி, சிவாயம், ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவ லாக, முருங்கைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது முருங்கை செடிகளில் பூக்கள் பூத்து வருகிறது.இதில் முருங்கை பிஞ்சுகள் அதிகமாக காய்க்க தொடங்கியுள்ளன.
நன்கு தரமாக வளர்ச்சியடைந்த முருங்கைக் காய்கள் அறுவடை செய்யப்பட்டு, கரூர், தோகைமலை, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் துவக்கம், வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ முருங்கை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது. வரும் வாரங்களில் முருங்கை விலை உயரும் என விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர்.
- குளித்தலையில் தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழா நடைபெற்றது
- ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடக்கூடாது, கம்பளி, கனமான போர்வை போன்றவற்றை போர்த்தி தரையில் உருட்ட வேண்டும் என்றார்.
கரூர்:
குளித்தலை பஸ் ஸ்டாண்டில், முசிறி தீயணைப்பு துறையினர் சார்பில், நேற்று மாலை, தீ தொண்டு நாள் வார விழா நடந்தது. நிகழ்ச்சியில், தீயணைப்பு துறை அலுவலர் பேசியதாவது: அடுப்பு எரியும் போது மண்ணெண்ணெய் நிரப்பக் கூடாது, மின்சார பொருட்கள், மின் இணைப்புகள் குழந்தைகளுக்கு எட்டும் நிலையில் இருக்கக் கூடாது, குழந்தைகளை சமையலறையில் தனியாக விட்டு வெளியே செல்லக்கூடாது, துாங்குவதற்கு முன் அகல் விளக்கையும் அடுப்பையும் அணைத்து விட வேண்டும், ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடக்கூடாது, கம்பளி, கனமான போர்வை போன்றவற்றை போர்த்தி தரையில் உருட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின், தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
- கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
- அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
கரூர்:
அமாவாசையை ஒட்டி கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதேபோல், வேலாயுதம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
- கரூர் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது
- கலெக்டர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்
கரூர்:
கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வாகனத்தை கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இருந்து கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள 46 பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்து வருகிறது. இதில், மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட ஒரு வாகனத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசு பள்ளிகளில் குறைவான எண்ணிக்கை உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும், என்றார்.
முன்னதாக நேற்று அரசு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு கலெக்டர் மாலை அணிவித்து அவர்களை வரவேற்று இனிப்பு மற்றும் பாட புத்தகங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) மணிவண்ணன், கரூர் மாநகராட்சியின் மூன்றாவது மண்டல குழு தலைவர் கோல்டு ஸ்பார்ட் ராஜா, மாமன்ற உறுப்பினர் நிவேதா, உதவி திட்ட அலுவலர்கள் சக்திவேல், உதவி திட்ட அலுவலர் சண்முகவடிவு (தொடக்கக்கல்வி) மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- கல்குவாரி நீரில் மூழ்கி தொழிலாளி பலியானார்
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், லிங்கமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 24). கட்டிட தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பிரகாஷ், அதே பகுதியில் கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில், நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, பிரகாஷ் குடிபோதையில் இருந்ததால், நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்து உள்ளார். உடலை கைப்பற்றி அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூரில் 17 ஆயிரம் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யபட்டது
- ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம், கிராம சுகாதார செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
கரூர்:
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுகாதார துறை பணி ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, உதிரம் உயர்த்துவோம் திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்ட, 17 ஆயிரம் மாணவியருக்கு வரப்பெற்ற முடிவை வகைப்படுத்தி, அவர்களுக்கு ரத்தசோகை தொடர்பாக சிகிச்சை அளிப்பது, சிசு மரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம், கிராம சுகாதார செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வு செய்து, பிறவி காதுகேளாமை போன்ற நோய்களை துரிதமாக கண்டறிய வேண்டும். அனைத்து மருத் துவமனைகளிலும் குறைந்தது 3 மாத இருப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார்.நிகழ்ச்சியில், இணை (மருத்துவ நலப்பணிகள்) இயக்குனர் ரமாமணி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சந்தோஷ்குமார், கரூர் அரசு மருத்து வமனை மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கரூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது
- முகாமை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசினார்.
கரூர்:
கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட் வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, 40 வயதிற்கு மேற்பட்ட இளம் வக்கீல்கள் தங்கள் உடலை முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உணவு, தூக்கம் எடுத்துக்கொண்டு உடலை பாதுகாக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் துணை சேர்மன் வேலு கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வழக்கறிஞர் காமராஜ், கரூர் வக்கீல் சங்க செயலாளர் தமிழ்வாணன், நிர்வாகிகள் சம்பத், கோபாலகிருஷ்ணன், சக்திவேல், பார்த்திபன், பாலாஜி காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






