என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
    X

    கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

    • கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    கரூர்:

    அமாவாசையை ஒட்டி கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதேபோல், வேலாயுதம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


    Next Story
    ×