என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire Charity Day Week Festival"

    • குளித்தலையில் தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழா நடைபெற்றது
    • ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடக்கூடாது, கம்பளி, கனமான போர்வை போன்றவற்றை போர்த்தி தரையில் உருட்ட வேண்டும் என்றார்.

    கரூர்:

    குளித்தலை பஸ் ஸ்டாண்டில், முசிறி தீயணைப்பு துறையினர் சார்பில், நேற்று மாலை, தீ தொண்டு நாள் வார விழா நடந்தது. நிகழ்ச்சியில், தீயணைப்பு துறை அலுவலர் பேசியதாவது: அடுப்பு எரியும் போது மண்ணெண்ணெய் நிரப்பக் கூடாது, மின்சார பொருட்கள், மின் இணைப்புகள் குழந்தைகளுக்கு எட்டும் நிலையில் இருக்கக் கூடாது, குழந்தைகளை சமையலறையில் தனியாக விட்டு வெளியே செல்லக்கூடாது, துாங்குவதற்கு முன் அகல் விளக்கையும் அடுப்பையும் அணைத்து விட வேண்டும், ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடக்கூடாது, கம்பளி, கனமான போர்வை போன்றவற்றை போர்த்தி தரையில் உருட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின், தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.




    ×