என் மலர்
கன்னியாகுமரி
- இந்திரா காந்தி சிலைக்கு அம்மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மாலை அணிவித்தார்.
- எம்.பி விஜய் வசந்த் வாகனத்தில் நன்றி தெரிவித்தபடி ஊர்வலமாக சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊரம்பு சந்திப்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு அம்மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மாலை அணிவித்தார்.
இதைதொடர்ந்து, காங்கிரஸ், இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நன்றி தெரிவிக்கும் பயணத்தை மேற்கொண்டனர்.
அப்போது, எம்.பி விஜய் வசந்த் வாகனத்தில் நன்றி தெரிவித்தபடி ஊர்வலமாக சென்றனர். வழிநெடுகிலும் பொது மக்கள் நின்று வரவேற்றனர்.
இதுதொடர்பாக விஜய் வசந்த் தனது இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- மாணவர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் ஏற்கனவே முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
- கன்னியாகுமரி மாவட்ட எம்.பி விஜய் வசந்த் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
தமிழகத்தில் கடந்த 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வசந்த் & கோ சார்பில் வசந்த் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் ஏற்கனவே முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விதமாக இன்று இரண்டாம் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வசந்த் & கோ சார்ப்பில் "வசந்த் விருதுகள்" வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எம்.பி விஜய் வசந்த் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
கன்னியாகுமரி:
பாராளுமன்ற உறுப்பினர் விஜய வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வருகிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
- பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார்.
- பாஜக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை.
பங்குச்சந்தை மோசடிகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் எதிரே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த போராட்டத்தில் தேசிய செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், விஜய் வசந்த், டாக்டர் விஷ்ணுபிரசாத், வக்கீல் சுதா உள்ளிட்ட எம் பிக்கள், விளவங்கோடு தொகுதி எம் எல் ஏ தாரகை கத்பர்ட், மாநில துணைத் தலைவர் கோபண்ணா, செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், டி.செல்வம், பி.வி.தமிழ்செல்வன், காண்டீபன், மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஹசீனா சையத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் பங்குச்சந்தை மோசடியை ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பும், பின்பும் பங்குச்சந்தை செயற்கையான ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதனால் ரூ,35 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதன் பின்புலத்தில் செபியின் தலைவர் மாதபி பூரி புச் இருந்து, அதானி நிறுவனங்களின் பங்குகளை செயற்கையான முறையில் ஏற்ற, இறக்கம் காணச் செய்தார்.
இது குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு மறுத்து வருகிறது. அதுபோல சமூக நீதி மீது நம்பிக்கை இல்லாத பாஜக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது.
- கிராம மக்கள் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது.
நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. இரவும் கனமழை கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாலமோரில் அதிகபட்சமாக 70.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கோழிப்போர் விளை, குழித்துறை, ஆணைக்கிடங்கு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மலையோர பகுதிகளில் கொட்டிய மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மோதிரமலை-குற்றியாறு தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. ஏற்கனவே அந்த பகுதியில் பழைய பாலத்தை மாற்றிவிட்டு புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தற்காலிக பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது.
தற்காலிக பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றதால் குற்றியாருக்கு சென்ற பஸ் திரும்பி வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. கிழவி ஆறு, தச்சைமலை உள்பட 12 மலையோர கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தற்காலிக பாலத்தை சீரமைத்தால் மட்டுமே கிராம மக்கள் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குற்றியாறில் நிறுத்தப்பட்டுள்ள பஸ் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் ரம்யமான சூழல் நிலவுகிறது.
அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான குளிர் காற்று வீசுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.42 அடியாக இருந்தது. அணைக்கு 1346 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 579 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீராக 753 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.05 அடியாக உள்ளது. அணைக்கு 605 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1-நீர்மட்டம் 13.87 அடியாக உள்ளது. அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 48.2, பெருஞ்சாணி 15.4, கன்னிமார் 7.2, கொட்டாரம் 3.4, மயிலாடி 2.4, நாகர்கோவில் 8.2, ஆரல்வாய்மொழி 8.2, பூதப்பாண்டி 15.2, முக்கடல் 17.6, பாலமோர் 70.4, தக்கலை 13.2, குளச்சல் 2, இரணியல் 8.4, அடையாமடை 12, குருந்தன் கோடு 10.4, கோழிப்போர்விளை 8.2, மாம்பழத்துறையாறு 24, களியல் 10.2, குழித்துறை 2.4, புத்தன்அணை 12.6, சுருளோடு 25.2, அடையாமடை 26.6, திற்பரப்பு 21.3, முள்ளங்கினாவிளை 7.4.
- மாவணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்று மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ராஜீவ் காந்தி பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்.
- தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலி.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவை மறுமலர்ச்சியின் பாதையில் வழிநடத்தி, நவீன இந்தியாவை உருவாக்கிய எழுச்சி நாயகன் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலி.
- அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது.
- திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.
திருவட்டார்:
குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத நிலையிலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 772 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதகுகள் வழியாக 478 கனஅடியும், உபரி நீராக 378 கன அடியும் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக கோதையாறு ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது.
இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று மாலை தடை விதிக்கப்பட்டது.

இன்று காலையும் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் குளிக்க தடை நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு ஆனந்த நீராட வந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
பேச்சிப்பாறை அணை பகுதியில் நேற்று சாரல் மழை பெய்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 44.46 அடியாக உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.2 அடியாக உள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 625 கன அடி தண்ணீர் வநம் சூழலில் 460 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- அஞ்சுகிராமம் பகுதியில் பணம் பறிப்பு சம்பவத்தில் செல்வம் ஈடுபட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
- போலீசாரை கண்டதும் செல்வம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான்.
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக ஏ1 என்பது உள்பட 4 வகைகளில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
அதன்படி குமரி மாவட்டம் தென் தாமரை குளம் அருகே உள்ள கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் என்பவரையும் போலீசார் தேடி வந்தனர். அவன் மீது 6 கொலை உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலிலும் அவன் உள்ளான். இதனால் அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அஞ்சுகிராமம் பகுதியில் பணம் பறிப்பு சம்பவத்தில் செல்வம் ஈடுபட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர் ஆனால் அதற்குள் செல்வம் தப்பிச் சென்று விட்டார்.
தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பகுதியில் செல்வம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.
போலீசாரை கண்டதும் செல்வம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். அதற்கு பலன் கிடைக்காததால் அவன் கத்தியால் போலீசாரை தாக்க முயன்றான். இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜூக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் ஆதம்அலி பாதுகாப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ரவுடி செல்வத்துக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவனை பிடித்த போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜூம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி செல்வம், குமரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்றாலும் தற்போது நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் வசித்து வந்துள்ளான்.
இவன் தூத்துக்குடியில் தான் பெரும்பாலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். இதனால் அவனை தூத்துக்குடி செல்வம் என்றே அழைத்து வந்துள்ளனர்.
- மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் , பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.
- வசந்த் & கோ நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் ரோகிணி பொறியியல் கல்லூரியில் வசந்த் & கோ நிறுவனம் சார்பில் 10 , 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி, கலந்துகொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
- கபடி வீரர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. பரிசு வழங்கி கவுரவித்தார்.
- முழங்குளி முத்தமிழ் ஆர்ட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முழங்குளி முத்தமிழ் ஆர்ட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இதில் வெற்றிபெற்ற கபடி வீரர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. பரிசு வழங்கி கவுரவித்தார்.
- சுபாஷ் நகரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப் பணி.
- மேம்பாலப் பணிகள் குறித்து விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி சுபாஷ் நகரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப் பணிகள் குறித்து விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு பணிகளை விஜய் வசந்த் ஆய்வு செய்தார்.






