என் மலர்
கன்னியாகுமரி
- நெல்சனை அரிவாளால் வெட்டி ரிச்சர்டு கொலை செய்தார்.
- ரிச்சர்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுப டுபவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள். சமீபகாலமாக பிடி வாரண்டு குற்றவாளிகள் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தலைமறைவு குற்றவாளி களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகிறார்கள். இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூதப்பாண்டி அருகே நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (வயது 57), தொழிலாளி. இவரு க்கும், அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்டு என்ற நிச்சர் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் நெல்சனை அரிவாளால் வெட்டி ரிச்சர்டு கொலை செய்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிச்சர்டை கைது செய்து ஜெயிலில் அடை த்தனர். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்து ரை செய்தார்.
இதையடுத்து ரிச்சர்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை போலீசார் இன்று பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
- டிரைவர், கண்டக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
- நாகரில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி நகைகளை பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. வெளியூர்களில் இருந்து டிப்-டாப் உடையில் வரும் பெண்கள் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விடுகிறார்கள்.
சமீபகாலமாக நடந்து வரும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடி க்கைகளை மேற்கொண்டார். வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் பகுதிகளில் பெண் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறா ர்கள்.
மேலும் சந்தேகப்ப டும்படியாக பஸ்களில் பெண்கள் யாராவது பயணம் செய்தால் தகவல் தெரிவிக்குமாறு டிரைவர், கண்டக்டருக்கு அறிவுறுத்த ப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார். டிரைவர், கண்டக்டரிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பஸ்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது இருந்தால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டுஅறை அல்லது ஹெல்ப் லைன் நம்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பஸ்களில் அதிகமான கூட்டங்களை ஏற்றி செல்லக்கூடாது. படிக்க ட்டில் யாரையும் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என்று அறிவுரைகளை வழங்கினார். இதை த்தொடர்ந்து அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்ததுடன் அறிவு ரைகளை வழங்கினார். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கி ஓட்டும்போது நமது உயிரை பாதுகாக்க கூடிய ஹெல்மெட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்று வாலிபர்களுக்கு அறிவுரை களை கூறினார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதா வது:-
குமரி மாவட்டத்தில் தற்பொழுது திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது. ஆனால் ஓடும் பஸ்சில் நகை பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
இது தொடர்பான குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு வியூகங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பஸ் டிரைவர், கண்டக்டர்க ளுக்கும் பல்வேறு அறிவு ரைகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பஸ்சில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் பெண்கள் கைது செய்யப்படுவார்கள்.
இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான மக்கள் ஹெல்மட் அணிய தொடங்கி விட்டனர். சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்ப ட்டவர்கள் ஹெல்மெட் அணிந்து வருகிறார்கள்.
ஒரு சிலர் ஹெல்ெமட்டை மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து ஓட்டி செல்கிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன் ஹெல்மெட்டை அணிந்து வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும்.
ஹெல்மெட் அணியாத வர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செல்போனில் பேசிக்கொண்டு வாகன ங்கள் ஓட்டக்கூடாது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும். ஒரே மோட்டார் சைக்கிள்களில் 3 பேரை ஏற்றி செல்வதும் குற்றமாகும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்காணிக்க நவீன எந்திரம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் சப்-டிவி ஷனுக்குட்பட்ட பகுதியில் அந்த நவீன எந்திரம் மூலமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதில் நாம் வாகனத்தை எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுகிறோம் என்ற விவரம் தெரிந்துவிடும். ஒரு சாலையில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் செல்ல வேண்டுமோ அந்த வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.
கூடுதல் வேகமாக செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதியிலும் இந்த நவீன எந்திரத்தை வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். கார்களை ஓட்டும்போது கட்டாயம் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். முன் இருக்கையில் இருப்பவ ர்களும் சீட் பெல்ட் அணி வது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த பிரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.
- ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
என்.ஜி.ஓ.காலனி:
சுசீந்திரம் அருகே சி.டி.எம்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 64). மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
இவரது மனைவி சாந்தி (57). இவர்களது மகன் அஜித் நிவாஸ் (34). நேற்று இரவு ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த பிரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.
இதில் ராமகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ராமகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
- வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிரேம்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தக்கலை:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதுதொடர்பான புகைப்படங்களை விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
- பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் மாநாடு நடைபெற்றது.
- மாநாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகாசியில் நடைபெற்ற தென்காசி விருதுநகர் மாவட்ட வாக்குச்சாவடி காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி பாசறை மாநாட்டில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் மனு
- 45-வது வார்டில் அமைந்துள்ள பிராய்லர் கோழிப்பண்ணையால் சுகாதாரக்கேடு
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து, தங்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
மனு கொடுக்க வந்தவர்களை, கலெக்டர் அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே மனு கொடுக்க அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். பழவிளை அருகே உள்ள மறுகால்தலைவிளை பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், நாகர்கோவில் மாநகராட்சி 45-வது வார்டில் அமைந்துள்ள பிராய்லர் கோழிப்பண்ணையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம், ஈக்கள் தொல்லை போன்றவற்றால் மக்கள் அவதிப்படுவதால், அதனை மாற்ற வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. மழைக்காலங்களில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டதால் பிராய்லர் பண்ணைகளைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் கணேசன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் குமரி மண்டல தலைவர் அன்புகிருஷ்ணன், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் பெல்லார்மின் தொடங்கி வைத்தார்.
- விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி வழங்க வேண்டும்
நாகர்கோவில் :
மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் மாநில அளவில் இன்று நடைபெற்றது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விக்னேஸ்வரி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் பெல்லார்மின் தொடங்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி மற்றும் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோர் தன்னார்வலர்கள் என்பதை ஊழியர்கள் என பெயர் மாற்றி அங்கீகரிக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
- கல்வி உரிமையை மத்திய அரசு பறித்துள்ளதாக திராவிடர் கழகம் குற்றம் சாட்டி வருகிறது
- மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
நாகர்கோவில் :
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும் மாணவர் சேர்க்கைக்கும் தடை ஏற்படுத்தி கல்வி உரிமையை மத்திய அரசு பறித்துள்ளதாக திராவிடர் கழகம் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் வெற்றிவேந்தன் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் நல்லபெருமாள், மாநகர செயலாளர் ராஜசேகர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் ராஜேஷ், மகளிர் அணி தலைவர் இந்திரா மணி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க. மனு
- 5 ஆண்டுகளில் சுமார் 10 மருத்துவ மாணவ-மாணவிகள் மர்மமாக இறந்துள்ளனர்.
நாகர்கோவில் :
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி என்ற அரிகரன் தலைமையில் கட்சியினர், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில், குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தா தற்கொலைக்கு காரணமானவர்களை காப்பாற்றவும் குற்றத்தை மூடி மறைக்கவும் கல்லூரி நிர்வாகம் முயல்கிறது. இந்த விஷயத்தில் குலசேகரம் போலீஸ் விசாரணையும் நம்பும் படி இல்லை என மாணவியின் உறவினர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். இங்கு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 மருத்துவ மாணவ-மாணவிகள் மர்மமாக இறந்துள்ளனர்.
மேலும் கல்லூரி நிர்வாகம் தங்கள் செல்வாக்கால், மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடலில் தத்தளித்த 16 பேரில் 13 பேர் மீட்கப்பட்டனர்
- பிரேத பரிசோதனைக்கு பின்பே உடல் யாருடையது என தெரியவரும்.
குளச்சல் :
குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆ ரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த 28-ந்் தேதி நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் கடலில் எதிர்பாராதவிதமாக மூழ்கியது.
இந்த சம்பவத்தில் கடலில் தத்தளித்த 16 பேரில் 13 பேர் மீட்கப்பட்டனர். மீனவர்கள் பயஸ், ஆராக்கியம் மற்றும் ஆன்றோ கடலில் மூழ்கினர். இவர்களில் பயசின் உடல் கடந்த 30-ந் தேதி மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்றோ, ஆரோக்கியத்தை மீனவர்கள் தேடி வந்தனர்.மேலும் கப்பல் மூலம் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதற்காக விசாகப்பட்டணத்திலிருந்து கப்பற்படை கப்பல் நேற்று மணப்பாடு கடல் பகுதிக்கு சென்றது.
பின்னர் வீரர்கள் தேடும் பணியில் ஈடு்பட்டனர். அப்போது மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. அது யார் என அடையாளம் காணமுடியவில்லை.
மீட்கப்பட்ட உடல் விசைப்படகு மூல மாக குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திற்கு இன்று(திங்கள்கிழமை)காலை கொண்டு வரப்பட்டது. பின்னர் குளச்சல் மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மீட்கப்பட்ட உடலை காண குளச்சல் துறைமுகத்தில் உறவினர்கள் திரண்டிருந்தனர்.பிரேத பரிசோதனைக்கு பின்பே உடல் யாருடையது என தெரியவரும்.
ஒருவேளை பிரேத பரிசோதனையில் அடையாளம் காண முடியாவிட்டால்.டி.என்.ஏ.சோதனை மூலம் அடையாளம் காணலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- மாவட்ட அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
- போட்டியினை கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சீலன், அனிஷா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
கருங்கல் :
கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்லூரிகள் பங்கேற்றன. தொடக்க விழாவில் லட்சுமிபுரம் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெறின்ஜோஸ் வாழ்த்துரை வழங்கினார்.போட்டியில் முதல் பரிசை புனித அல்போன்சா கல்லூரியும், 2-வது பரிசை லட்சுமிபுரம் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவவர்களுக்கு கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, கேம்பஸ் மினிஸ்டர் அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவ னேசன் ஆகியோர் பரிசு களையும், கேடயங்களையும் வழங்கியதோடு தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர். போட்டியினை கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சீலன், அனிஷா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
- சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் அய்யப்பன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டனர்
- குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க புதியதாக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி வேண்டுமென கோரிக்கை
என்.ஜி.ஓ.காலனி :
பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் அறிவு றுத்தலின் பேரில் நாகர் கோவில் மாநகராட்சிக்குட் பட்ட பொட்டல்விளை பிரதீஷ், சிவகுமார் ஆகியோர்கள் ஏற்பாட்டில் பொட்டல்விளை பா.ஜ.க தொண்டர்கள் அறிமுக கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி பா.ஜ.க. பொரு ளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர் கோவில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட பொட்டல்விளை அம்மன் கோவில் அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் அய்யப்பன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இணைந்து கொண்ட அனைவரும் கவுன்சிலர் அய்யப்பனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் பாரதிய மஸ்தூர் சங்கம் மூலம் கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளர் நலவாரிய அட்டை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கவுன்சிலர் அய்யப்பன் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் விதமாக புதியதாக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலா ளர் வக்கீல் ஜெகநாதன் கலந்துகொண்ட அனை வரையும் சால்வை அணி வித்து வரவேற்று பேசினார். ராஜாக்கமங்கலம் ஒன்றிய பார்வையாளர் சொக்க லிங்கம், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ், தோவாளை ஒன்றிய பார்வையாளர் வக்கீல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மாநில பிரசார பிரிவு செயலாளர் எஸ்.எஸ்.மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி மனோகர்லால், ஒன்றிய தரவு மேலாண்மை பிரிவு தலைவர் பிரவின், 50-வது வார்டு தலைவர் ஆறுமுகம், கிளை தலைவர்கள் கணேஷ், அச்சுதன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.






