search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் அய்யப்பன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
    X

    பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் அய்யப்பன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்

    • சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் அய்யப்பன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டனர்
    • குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க புதியதாக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி வேண்டுமென கோரிக்கை

    என்.ஜி.ஓ.காலனி :

    பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் அறிவு றுத்தலின் பேரில் நாகர் கோவில் மாநகராட்சிக்குட் பட்ட பொட்டல்விளை பிரதீஷ், சிவகுமார் ஆகியோர்கள் ஏற்பாட்டில் பொட்டல்விளை பா.ஜ.க தொண்டர்கள் அறிமுக கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி பா.ஜ.க. பொரு ளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர் கோவில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட பொட்டல்விளை அம்மன் கோவில் அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் அய்யப்பன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இணைந்து கொண்ட அனைவரும் கவுன்சிலர் அய்யப்பனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

    மேலும் வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் பாரதிய மஸ்தூர் சங்கம் மூலம் கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளர் நலவாரிய அட்டை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கவுன்சிலர் அய்யப்பன் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் விதமாக புதியதாக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலா ளர் வக்கீல் ஜெகநாதன் கலந்துகொண்ட அனை வரையும் சால்வை அணி வித்து வரவேற்று பேசினார். ராஜாக்கமங்கலம் ஒன்றிய பார்வையாளர் சொக்க லிங்கம், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ், தோவாளை ஒன்றிய பார்வையாளர் வக்கீல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மாநில பிரசார பிரிவு செயலாளர் எஸ்.எஸ்.மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி மனோகர்லால், ஒன்றிய தரவு மேலாண்மை பிரிவு தலைவர் பிரவின், 50-வது வார்டு தலைவர் ஆறுமுகம், கிளை தலைவர்கள் கணேஷ், அச்சுதன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×