search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்தேகப்படும்படியான நபர்கள் பயணம் செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்
    X

    சந்தேகப்படும்படியான நபர்கள் பயணம் செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்

    • டிரைவர், கண்டக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
    • நாகரில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி நகைகளை பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. வெளியூர்களில் இருந்து டிப்-டாப் உடையில் வரும் பெண்கள் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விடுகிறார்கள்.

    சமீபகாலமாக நடந்து வரும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடி க்கைகளை மேற்கொண்டார். வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் பகுதிகளில் பெண் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறா ர்கள்.

    மேலும் சந்தேகப்ப டும்படியாக பஸ்களில் பெண்கள் யாராவது பயணம் செய்தால் தகவல் தெரிவிக்குமாறு டிரைவர், கண்டக்டருக்கு அறிவுறுத்த ப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார். டிரைவர், கண்டக்டரிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பஸ்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது இருந்தால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டுஅறை அல்லது ஹெல்ப் லைன் நம்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பஸ்களில் அதிகமான கூட்டங்களை ஏற்றி செல்லக்கூடாது. படிக்க ட்டில் யாரையும் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என்று அறிவுரைகளை வழங்கினார். இதை த்தொடர்ந்து அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்ததுடன் அறிவு ரைகளை வழங்கினார். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கி ஓட்டும்போது நமது உயிரை பாதுகாக்க கூடிய ஹெல்மெட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்று வாலிபர்களுக்கு அறிவுரை களை கூறினார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதா வது:-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது. ஆனால் ஓடும் பஸ்சில் நகை பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

    இது தொடர்பான குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு வியூகங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பஸ் டிரைவர், கண்டக்டர்க ளுக்கும் பல்வேறு அறிவு ரைகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பஸ்சில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் பெண்கள் கைது செய்யப்படுவார்கள்.

    இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான மக்கள் ஹெல்மட் அணிய தொடங்கி விட்டனர். சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்ப ட்டவர்கள் ஹெல்மெட் அணிந்து வருகிறார்கள்.

    ஒரு சிலர் ஹெல்ெமட்டை மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து ஓட்டி செல்கிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன் ஹெல்மெட்டை அணிந்து வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும்.

    ஹெல்மெட் அணியாத வர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செல்போனில் பேசிக்கொண்டு வாகன ங்கள் ஓட்டக்கூடாது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும். ஒரே மோட்டார் சைக்கிள்களில் 3 பேரை ஏற்றி செல்வதும் குற்றமாகும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்காணிக்க நவீன எந்திரம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் சப்-டிவி ஷனுக்குட்பட்ட பகுதியில் அந்த நவீன எந்திரம் மூலமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதில் நாம் வாகனத்தை எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுகிறோம் என்ற விவரம் தெரிந்துவிடும். ஒரு சாலையில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் செல்ல வேண்டுமோ அந்த வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

    கூடுதல் வேகமாக செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதியிலும் இந்த நவீன எந்திரத்தை வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். கார்களை ஓட்டும்போது கட்டாயம் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். முன் இருக்கையில் இருப்பவ ர்களும் சீட் பெல்ட் அணி வது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×