மாவட்ட கைப்பந்து போட்டி புனித அல்போன்சா கல்லூரிக்கு முதலிடம்

மாவட்ட அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.போட்டியினை கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சீலன், அனிஷா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
மாவட்ட கைப்பந்து போட்டி புனித அல்போன்சா கல்லூரிக்கு முதலிடம்
Published on

கருங்கல் :

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்லூரிகள் பங்கேற்றன. தொடக்க விழாவில் லட்சுமிபுரம் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெறின்ஜோஸ் வாழ்த்துரை வழங்கினார்.போட்டியில் முதல் பரிசை புனித அல்போன்சா கல்லூரியும், 2-வது பரிசை லட்சுமிபுரம் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவவர்களுக்கு கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, கேம்பஸ் மினிஸ்டர் அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவ னேசன் ஆகியோர் பரிசு களையும், கேடயங்களையும் வழங்கியதோடு தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர். போட்டியினை கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சீலன், அனிஷா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com