என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • 5-ந் தேதி அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து கல் பதித்தனர்.
    • ஆலோசனை கூட்டம் தொடர்பாக தன்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

    ஆரல்வாய்மொழி :

    தோவாளையில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கிருஷ்ண சாமி கோவில் உள்ளது. இதன் அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் எனும் குடியிருப்பு பகுதியும் அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் ஆகும். இங்கு 60 வீடுகளும் 2 காலிமனைகளும் உள்ளன. இந்த குடியிருப்பில் சுமார் 48 ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநி லையில் கடந்த 5-ந் தேதி அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து கல் பதித்தனர்.

    இதையடுத்து கோவில் நிலம் எடுப்பு தாசில்தார் சஜித், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ் ணன், உறுப்பினர்கள் சுந்தரி, ராஜேஷ், ஜோதீஸ்குமார், ஸ்ரீகா ரியம் சேர்மராஜா ஆகியோர் கோவில் இடத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு தரை வாடகை விதிப்பது சம்பந்தமாக குடியிருப்பு வாசிகளுடன் ஆலோசனை நடத்த வந்தனர். இந்த ஆலோசனை கூட்டம் தோவாளை கிருஷ்ணசாமி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் பொதுமக்கள் தாசில்தார் மற்றும் அதிகாரிக ளிடம் சரமாரி கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, 'கோவிலுக்கு சொந்த மான இடம் இதே ஊரில் பல உள்ளது. அந்த பகுதிகளில் நடவடிக்கை எடுத்துவிட்டு இங்கு வாருங்கள்' என்று வாதிட்ட னர். இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே அங்கு வந்த தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், ஆலோசனை கூட்டம் தொடர்பாக தன்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • இலவச மருத்துவ முகாம் அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்களும் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனை

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி கனி மருத்துவமனை மற்றும் அழகப்பபுரம் புனித வின்சென்ட் தே பவுல் சபையின் ஓசானாம் மருத்துவ சேவை மையமும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமை அழகப்பபுரம் பங்குத்தந்தை செல்வராயர் அடிகள், உதவி பங்குத்தந்தை அந்தோணி சேவியர் அடிகள், ஓசானாம் மருத்துவர் டாக்டர் மேஜர் ஹெலன் ரூபி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    தூத்துக்குடி மத்திய சபை முதன்மை பணியாளர் ஜீட்ரன், அழகப்பபுரம் பங்கு மேய்ப்பு பணிக்குழு துணை தலைவர் ராஜன், அழகை பேரூராட்சி தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

    முகாமில் பொதுமருத்துவத்திற்கு கனி மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜாப்பாவு சிகிச்சை அளித்தார். கனி மருத்துவமனை மகளிர் நல மருத்துவர் லில்லி, நரம்பியல் மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர் சஞ்சய் பிரதீப், குழந்தைகள் நல மருத்துவர் நியுஷா சஞ்சய், தோல் மருத்துவர் சஞ்சனா தீபா மற்றும் பி.எம்.சி. டென்டல் கேர் பல் மருத்துவர் பிரதீப் ஜீவதாஸ், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்களும் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை அழகப்பபுரம் புனித வின்சென்ட் தே பவுல் சபையின் ஓசானாம் மருத்துவ சேவை மையத்தினர் இணைந்து செய்திருந்தனர்.

    • திருத்தல மயான வளாகத்தில் ஆன்றோ உடல் அடக்கம் செய்யப்பட்டது.
    • புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி

    குளச்சல் :

    மணப்பாடு கடலில் மீட்கப்பட்ட குளச்சல் மீனவர் ஆன்றோ உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று பிற்பகல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. வீட்டுமுன் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின் ஆகியோர் ஆன்றோ உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சிவகுமார், கல்குளம் தாசில்தார் கண் ணன், குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, கிராம அலுவலர் ராஜேஷ், நகர பாரதிய ஜனதா தலைவர் கண்ணன், நகர்மன்ற துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் மற்றும் கவுன்சிலர்கள், பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தல மயான வளாகத்தில் ஆன்றோ உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • பொதுமக்கள் போராட்டம்
    • பொது மக்களுக்கு கதிர்வீச்சு அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

    குழித்துறை :

    குமரி மாவட்டம் மேல்புறத்தை அடுத்த மதில்தாணி என்னும் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளதால் தக்க நட வடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதுபோல செல்போன் டவர் அமைக்க முறையான அனுமதியும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

    மேலும் அவர்கள் கூறும் போது, சிட்டுக்குருவிகள் செத்து மடிவதாகவும், அயனி மரங்கள் பட்டு போவதாகவும், பொது மக்களுக்கு கதிர்வீச்சு அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் அப் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் திடீர் என இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் பொதுமக்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியை விட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையெழுத்துக்கள் போட்டு மீண்டும் புகார் அளிக்க உள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பொதுமக்களை ஒன்று கூட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

    • 120 அடி உயரம் 60 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம்
    • கட்டுமான பணிகளுக்கான மண் பரிசோதனை, கோபுரம் அமைப்பு உள்ளிட்டவை ஆராய்ந்து ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில் :

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும்ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்நிலையில் அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதனைத் தெடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம் 60 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டு வதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதேபோல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்தில் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்க பல்வேறு ஆயுத்த பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் செய்து வரு கின்றனர். இந்நிலையில், மாநில வல்லுனர் குழு வடிவமைப்பு பொறியாளர் முத்துச்சாமி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கோபுரம் அமையவிருக்கும் இடத்தில் ஆய்வு செய்தனர்.

    இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் ஆனந்த், உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்ட னர். இதில் கோவில் கோபுரம் கட்டுமான பணிகளுக்கான மண் பரிசோதனை, கோபுரம் அமைப்பு உள்ளிட்டவை ஆராய்ந்து ஆய்வு செய்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • சிறப்பு மருத்துவ முகாம்களில் 1,041 மாற்றுத்திறனாளி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மாற்றுத்திற னாளிகளும் மற்ற நபர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் வலுபெற வேண்டுமென்று தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக் கான இலவச பேருந்து பயணச்சலுகை, பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலு கை, அரசு பஸ்சில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பஸ் பயணச்சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக் கான சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்று கோல் மற்றும் பிரெய்லி கை கடிகாரம், நவீன செயற்கை அவயம், செயற்கை அவயம், முட நீக்கு சாதனம் (காலிபர்), ஊன்றுகோல், கை, கால் பாதிக்கப்பட்டவருக்கான திருமண உதவித்தொகை, பார்வையற்றவருக்கான திருமண உதவித்தொகை, செவித்திறன் குறைவுடை யோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக் கான திருமண உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக் கான நடமாடும் சிகிச்சை பிரிவு போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2022 மற்றும் 2023 ஆண்டு வரை 31 பயனாளி களுக்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களும், 55 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திர மும், 60 பயனாளிகளுக்கு செவித்திறன் கருவியும், 20 பயனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலியும், 8 பயனாளி களுக்கு ரூ.8 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டோருக்கான நாற்காலியும் வழங்கப்பட்டது.

    60 பயனாளிகளுக்கு ஆக்சிலரி ஊன்றுகோல், 60 பயனாளிகளுக்கு கருப்பு கண்ணாடியும், 30 பயனாளி களுக்கு ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியும், 120 பயனாளிகளுக்கு பிரதி பலிக்கும் மடக்கு குச்சிகளும், 60 பயனாளிகளுக்கு துணை ஊன்றுகோல்களும், 30 பயனாளிகளுக்கு பிரெய்லி கைகடிகாரமும், 40 பயனாளிகளுக்கு எல்போ ஊன்றுகோல்களும், 300 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து மதிப்பிலான திறன் ேபசிகளும் வழங்கப்பட்டது.

    30 பயனாளிகளுக்கு நடைபயிற்சி சாதனங்களும், 6 பயனாளிகளுக்கு கோர்னர் இருக்கைகளும், 58 பயனாளி களுக்கு ரூ.48 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 17 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பி லான முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியும், 80 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பி லான சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது.

    26 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான ஆவாஸ், 5 பயனாளிகளுக்கு ஸ்மாட் கேனும், 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளி வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகை என ஆக மொத்தம் 1,041 பயனாளி களுக்கு ரூ.1.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு மாற்றுதிறனாகளின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாற்றுத்திற னாளிகளும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • இதையடுத்து 8 போலீசாரையும், ஒரு கப்பல் படை வீரரையும் போலீசார் பிடித்தனர்
    • விசாரணையில் அவர்கள் மாறுவேடத்தில் வந்த கமாண்டோ படை போலீசார் என்பது தெரியவந்தது.

    நாகர்கோவில் :

    கடல் வழியாக தீவிரவாதி கள் மும்பையில் தாக்குதல் நடத்தியதையடுத்து கட லோர பாதுகாப்பு குழும போலீசார் கடல்பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவ்வப் போது சீ விஜில், சஜாக், அம்லா, சாகர் கவாச் என பல்வேறு பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் நாளை மாலை 7 மணி வரை "சாகர் கவாச்" என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று காலை சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். கட லோர காவல்படை இன்ஸ் பெக்டர் நவீன் தலைமை யிலான போலீசார் சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து 8 நாட்டிங்கல் தொலைவில் ரோந்து பணி சென்றபோது சந்தேகப் படும்படியாக படகு ஒன்று நடுக்கடலில் நின்று கொண் டிருந்தது. போலீசார் அந்த படகை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது படகில் இருந்தவர்கள் மீனவர்கள் என்று தெரிவித்தனர்.

    உடனே கடலோர பாது காப்பு குழும போலீசார் அவர்களது அடையாள அட்டையை காண்பிக்குமாறு தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் மீனவர் களுக்கான அடையாள அட்டை எதுவும் இல்லை. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மாறுவேடத்தில் வந்த கமாண்டோ படை போலீசார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 8 போலீசாரையும், ஒரு கப்பல் படை வீரரையும் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட 8 பேரையும் கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகிறார் கள். குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் கட லோர காவல் படை போலீ சார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    • மாம்பழத்துறையாறில் 32.5 மில்லி மீட்டர் பதிவு
    • மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங் கள், அணைகளின் நீர்மட் டம் கணிசமான அளவு உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று அணை பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு, மாம்ப ழத்துறையாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மாம்பழத் துறையாறில் அதிகபட்சமாக 32.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. களியல், கன்னிமார், ஆணைக்கிடங்கு, சுருளோடு பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது.

    இதையடுத்து அணை களுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 607 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 34.33 அடியாக இருந்தது.

    அணைக்கு 642 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 277 கன அடி தண்ணீர் வெளியிடப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது. அணைக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 130 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 14.63 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 14.73 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 35.27 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் இன்று காலை 16 அடியை எட்டியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 12.2, பெருஞ்சாணி 32.4, சிற்றார் 1-3.4, சிற்றார் 2-19, களியல் 8.2, கன்னிமார் 1.2, புத்தன் அணை 30, சுருளோடு 16.4, பாலமோர் 19.4, மாம்பழத்து றையாறு 32.5, திற்பரப்பு 8.4, ஆணைக்கிடங்கு 30.2.

    • விசாரணையில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • குலசேகரத்தில் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் நீதி கேட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    திருவட்டார் :

    குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி சுஜிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண் டார். சுஜிர்தா தன் கைப்பட எழுதிய கடித்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட் டத்தை சேர்ந்த சுஜிர்தாவின் தந்தை சிவகுமார் குலசேக ரம் போலீசில் புகார் செய்தார். தற்கொலை செய்வதற்கு முன்பு சுஜிர்தா எழுதிய கடிதத்தில் டாக்டர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2 பேர் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறி இருந்தார்.

    இதையடுத்து குலசேகரம் போலீசார் 3 பேர் மீதும் பிரிவு 306 கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த பிரிவின் கீழ் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் குலசேகரம் போலீசார் 5 நாள் ஆன பிறகும் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை எதையும் விசா ரணை செய்யும் போலீஸ் அதிகாரிகள் பின்பற்ற வில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார் கள்.

    கல்லூரி மாணவி தற்கொலையில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்தால் தான் நேர்மையான முறையில் விசாரணை நடைபெறும் என்று பா.ம.க., நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    குலசேகரத்தில் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் நீதி கேட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆனால் இந்த வழக்கில் போலீசார் மவுனம் சாதித்து வருவது வேடிக்கையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சட்டசபையில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில் :

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றபோது முன்னா ள் அமைச்சரும், கன்னியா குமரி சட்டமன்ற உறுப்பி னருமான தளவாய்சுந்தரம் பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    அஞ்சுகிராமம் பேரூரா ட்சியில் பால்குளம் பகுதி யில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் பயின்று வருகி ன்ற அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரியில் சுமார் 90 சதவீதம் மாணவ, மாணவிகள் சட்டப்பேரவை சபாநாயகர் தொகுதியான ராதாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவ, மாணவிகளே அதிக அளவு பயின்று வருகின்றனர். கல்லூரியில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிபட்டு வருகின்றனர். அதனால் கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவ தற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வலியு றுத்தினார்.

    இதற்கு பதிலளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் அறிவித்ததன்படி காமராஜர் கல்வி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் இதுபோன்ற கல்லூரிகளில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வுக்கூடகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்தின் கோரிக்கை நிறை வேற்றப்படும் என பேசினார்.

    • டிச.15 கடைசி நாள்
    • கும்பப்பூ நெற்பயிருக்கான இழப்பீட்டுத்தொகை ஏக்கருக்கு ரூ.35,400 ஆகும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் விவசா யிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகா க்கவும் பண்ணை வருவா யை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழி ல்நுட்பங்களை கடை பிடிப்பதை ஊக்குவிக்கவும் 2023-ம் ஆண்டில் கன்னியா குமரி மாவட்ட கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விதைக்க இயலா மை மற்றும் விதைப்பு பொய்த்து போகும் பயிர்க ளுக்கு காப்பீடு செய்திட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில், கன்னி யாகுமரி மாவட்டத்தில் 11 பிர்க்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு திட்ட த்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், கன்னியாகுமரி மாவ ட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனமான பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூ ரன்ஸ் கம்பெனி லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் காமன் சர்வீஸ் சென்டர் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறாக கும்பப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிசம்பர் 15, 2023 ஆகும்.

    எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசா யிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு தொகை செலு த்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட் டுக் கொள்ளப்படு கிறார்கள். பயிர் காப்பீட்டு த்தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.531 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொ ழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண த்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும், பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம். கும்பப்பூ நெற்பயிருக்கான இழப்பீட்டுத்தொகை ஏக்கருக்கு ரூ.35,400 ஆகும். மேலும் நடப்பாண்டு அறிவி க்கைப்படி வெள்ளம், புயல் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இயலாது என்பதால் விவசாயிகள் கும்பப்பூ பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக அளவில் விவசாயிகள் கலந்துகொண்டு பயிர்க்காப்பீடு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
    • பொதுமக்கள் நடவடிக்கை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    இரணியல், அக்.10-

    இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை வேளையில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை நடப்பதாக இரணியல் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.

    இரணியல், திங்கள்நகர், பேயன் குழி, மைலோடு, தலக்குளம், செட்டியார் மடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள் ரகசியமாக கண்காணிக்கபட்டது.

    இந்த நிலையில் இரணியல் சந்திப்பில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அடுத்து கோழி இறைச்சி விற்பனை செய்த கடையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 54) என்பவர் எந்த விதமான அரசு அனுமதியின்றி மது ஊற்றி கொடுப்பது தெரியவ ந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.அதுபோல திங்கள்நகர் நேசமணி பூங்கா எதிராக உள்ள பெட்டி கடையில் அரசு அனுமதி இன்றி மது ஊற்றி கொடுத்த எழிலரசி (56) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகிய அதிகாரிகள் நடவடிக்கைக்கு வரவேற்பு அளித்த பொதுமக்கள் நடவடிக்கை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    ×