search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூகாம்பிகா கல்லூரி மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்
    X

    மூகாம்பிகா கல்லூரி மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்

    • விசாரணையில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • குலசேகரத்தில் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் நீதி கேட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    திருவட்டார் :

    குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி சுஜிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண் டார். சுஜிர்தா தன் கைப்பட எழுதிய கடித்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட் டத்தை சேர்ந்த சுஜிர்தாவின் தந்தை சிவகுமார் குலசேக ரம் போலீசில் புகார் செய்தார். தற்கொலை செய்வதற்கு முன்பு சுஜிர்தா எழுதிய கடிதத்தில் டாக்டர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2 பேர் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறி இருந்தார்.

    இதையடுத்து குலசேகரம் போலீசார் 3 பேர் மீதும் பிரிவு 306 கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த பிரிவின் கீழ் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் குலசேகரம் போலீசார் 5 நாள் ஆன பிறகும் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை எதையும் விசா ரணை செய்யும் போலீஸ் அதிகாரிகள் பின்பற்ற வில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார் கள்.

    கல்லூரி மாணவி தற்கொலையில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டுவர வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்தால் தான் நேர்மையான முறையில் விசாரணை நடைபெறும் என்று பா.ம.க., நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    குலசேகரத்தில் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் நீதி கேட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆனால் இந்த வழக்கில் போலீசார் மவுனம் சாதித்து வருவது வேடிக்கையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    Next Story
    ×