ஆரல்வாய்மொழி கனி மருத்துவமனை-வின்சென்ட் தே பவுல் சபை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம் அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்களும் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனை
ஆரல்வாய்மொழி கனி மருத்துவமனை-வின்சென்ட் தே பவுல் சபை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
Published on

நாகர்கோவில் :

ஆரல்வாய்மொழி கனி மருத்துவமனை மற்றும் அழகப்பபுரம் புனித வின்சென்ட் தே பவுல் சபையின் ஓசானாம் மருத்துவ சேவை மையமும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முகாமை அழகப்பபுரம் பங்குத்தந்தை செல்வராயர் அடிகள், உதவி பங்குத்தந்தை அந்தோணி சேவியர் அடிகள், ஓசானாம் மருத்துவர் டாக்டர் மேஜர் ஹெலன் ரூபி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி மத்திய சபை முதன்மை பணியாளர் ஜீட்ரன், அழகப்பபுரம் பங்கு மேய்ப்பு பணிக்குழு துணை தலைவர் ராஜன், அழகை பேரூராட்சி தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

முகாமில் பொதுமருத்துவத்திற்கு கனி மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜாப்பாவு சிகிச்சை அளித்தார். கனி மருத்துவமனை மகளிர் நல மருத்துவர் லில்லி, நரம்பியல் மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர் சஞ்சய் பிரதீப், குழந்தைகள் நல மருத்துவர் நியுஷா சஞ்சய், தோல் மருத்துவர் சஞ்சனா தீபா மற்றும் பி.எம்.சி. டென்டல் கேர் பல் மருத்துவர் பிரதீப் ஜீவதாஸ், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்களும் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை அழகப்பபுரம் புனித வின்சென்ட் தே பவுல் சபையின் ஓசானாம் மருத்துவ சேவை மையத்தினர் இணைந்து செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com