என் மலர்
கன்னியாகுமரி
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவு
- கடைவீதிகளில் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாதாந்திர குற்ற தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.க்கள் சுப்பையா, மதியழகன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள் அரசு வழக்கறிஞர்கள், டாக்டர்கள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. மேலும் போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திறம்பட பணியாற்றிய குளச்சல் மகளிர் இன்ஸ்பெக்டர் மற்றும் தலை மறைவு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண்பிரசாத் பேசியதா வது:-
விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து அதிகாரிகள், போலீசாருக்கு பாராட்டுகள் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த கட்டமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளன. இனிவரும் காலம், பண்டிகை காலம் என்பதால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் .
குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்களில் பெண்களிடம் நகை பணம் பறிக்கும் சம்ப வங்கள் அதிகரித்துள்ளது. இது தொடர்பான குற்ற வாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டு சம்ப வங்களை தடுக்கும் வகை யில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகப்படும் படியாக நபர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். வடசேரி, அண்ணா பஸ் நிலை யங்களில் பெண் போலீசார் மப்டி உடையில் கண் காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பண்டிகை காலம் வருவதை யடுத்து கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
எனவே கடை வீதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து ஜவுளிக் கடைகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்களில் கண் காணிப்பு கேமரா முழுமை யாக இயங்க வேண்டும். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார். நாகர்கோவில் ஆயுதப் படை மைதானத்தில் போலீ சாருக்கான இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு செய்தார்.
- அறங்காவலர் குழுவினர் ஆய்வு
- பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
மணவாளக்குறிச்சி :
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. கடந்த 2021 ஜூன் 2-ந்தேதி இக்கோவிலின் கருவ றைக்கூரை திடீரென தீப்பி டித்து எரிந்தது.
இதையடுத்து கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 14- ந்தேதி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து இதற்காக தேவசம் பள்ளி வளாகத்தில் மர தச்சு தொழிலாளர்கள் முழு மூச்சில் மரப்பணி செய்து வந்தனர். மேற்கூரை பணிக்கு உத்திரம்,பட்டியல் கூட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. இதையடுத்து மூலஸ்தான மேற்கூரைக்கு திருப்பணிகள் திருக்கோயில் வளாகத்தில் நடந்து வருகிறது. வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள மர அழிகள் மற்றும் 9 அடி உயரத்தில் 14 கல் தூண்கள் நிறுவும் பணிகள் கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கி யது. தூண்கள் நிறுவும் பணிகள் நிறை வடைந்து உள்ளது. தொடர்ந்து பழமை மாறாமல் மர அழிகள் அமைக்கும் பணி களும் நடந்து வருகிறது. அழிகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததும், அதன் மேல் உத்திரங்கள் நிறுவப் பட்டு, அதற்கு மேல் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கும். இதற்கு பயன்படுத்தும் மரங்கள் தேக்கு மரத்தி லானது என்பது குறிப்பி டத்தக்கது.
இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தச்சுப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கோயில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார், மராமத்து பொறி யாளர் அய்யப்பன், அறங்கா வல் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். அவர் குமரி மாவட்டத்தில் நடை பெறும் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொள்கிறார். நாகர்கோவிலில் மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற் குழுக் கூட்டம் நாளை (12-ந்தேதி) மாலை 4 மணிக்கு ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வா கிகள், தலைமைச் செயற் குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலா ளர்கள், சார்பு அணிகளின் அமைப்பா ளர்கள், மாவட்ட மற்றும் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் அழைப்பு விடுத் துள்ளார்.
- ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
- ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி கள் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு நடத்தப் பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக வருகிற 14-ந்தேதி காலை 8 மணிக்கு புத்தேரி-அப்டா மார்க்கெட் அணுகு சாலை யில் நடைபெற உள்ளது.
13 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவி களுக்கு 10 கிலோ மீட்டரும், 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும், 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 20 கிலோ மீட்டரும் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
போட்டியில் வெற்றி| பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 என்றும் பரிசு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டிகளின் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளுக்கு விளை யாட்டு அலுவலகம் பொறுப் பேற்காது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும்.
சொந்த சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும். போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்க னைகளுக்கு பரிசு தொகை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ மட்டுமே வழங்கப் படும். எனவே போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களுடைய வங்கி புத்தக நகலினையும், ஆதார் நகலினையும் கொண்டு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விருப்ப முள்ள மாணவ-மாணவி கள் விதி களை பின்பற்றி புத்தேரி அப்டா அணுகு சாலையில் 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- 15-ந் தேதி தொடங்குகிறது
- அஷ்டமங்கள் தேவபிரசன்ன பரிகார பூஜைகள் நடக்கிறது.
கொல்லங்கோடு :
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இதுதவிர கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா, வித்யாரம்பம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு வழக்கமான பூஜைகளான லலிதா சகஸ்ர நாமம், லட்சார்ச்சனை, மாலை 5.30 மணிக்கு சங்கீதார்ச்சனை சங்கீத சதஸ் மற்றும் நவராத்திரி விசேஷ பூஜைகள் நடக்கிறது.
24-ந் தேதி காலை 8 மணி முதல் குழந்தைகளுக்கு முதன் முதலாக கற்பிக்கின்ற வித்யா ரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் 4-ம் திருவிழா, முதல் தந்திரி ஆலிவாசேரி நீலமன மடம் பிரம்மஸ்ரீ ஈஸ்வரன் போற்றி தலைமையில் அஷ்டமங்கள் தேவபிரசன்ன பரிகார பூஜைகள் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சீனிவாசன் தம்பி, துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், இணை செயலாளர் பிஜுகுமார். உறுப்பினர்கள் சுஜிகுமார். புவனேந்திரன் நாயர். ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர். பிஜு, சதிகுமாரன் நாயர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
- மழையால் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என இரு போக சாகுபடிகள் செய்யப் பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும் பாசன குளங்களை நம்பியும் விவ சாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 69 சதவீதம் பொய்த்து விட்ட காரணத்தி னால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் குறைவாக இருந்தது. பாசன குளங்களி லும் தண்ணீர் குறைவாகவே இருந்ததால் விவசாயிகள் கன்னி பூ சாகுபடி பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விவசா யத்திற்காக ஜூன் 1-ந் தேதி பேச்சிபாறை அணை திறக்கப்பட்டது.
அணை திறக்கப்பட்ட பிறகும் கடைமடை பகுதி களுக்கு தண்ணீர் வழங்காத தால் விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சாகு படி பணி தொடங்கிய பிறகும் கடைமடை பகுதி களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. பாசன கால் வாய்கள் தூர் வாரப்படாத தால் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடை மடை பகுதிகளுக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி னார்கள்.
ஆனால் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கின் கார ணமாக சானல்கள் தூர் வாருவதில் தாமதம் ஏற்படு வதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தூர்வாரும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். சானல்கள் தாமதமாக தூர்வாரப்பட்ட தால் விவ சாயிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இந்த நிலையில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
சாகுபடி பணிகள் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து மணவாள குறிச்சி உட்பட மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும் கன்னி பூ சாகுபடி செய்யப்பட்ட ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஹெக்டேர் நெற்பயிர்கள் அறுவடை ஆகாத நிலையில் உள்ளது. தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
ஒரு சில இடங்களில் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து முளைத்தது விவ சா ணயிகளுக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. வழக்க மாக இந்த தருணத்தில் 2-ம் போக சாகுபடியான கும்ப பூ சாகுபடி செய்யப்படும். ஆனால் கன்னி பூ சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் அறுவடை நடைபெறாத நிலையில் கும்ப பூ சாகுபடி பல்வேறு இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சுசீந்திரம் தேரூர் பூதப் பாண்டி பகுதிகளில் கும்ப பூ நடவு பணி நடைபெற்று வருகிறது. கும்ப பூ சாகுபடி நேரத்திலாவது பொதுப் பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக இருந்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையின் காரண மாக பல்வேறு இடங்களில் பாசன குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஏற்பட்டது. அந்த உடைப்பு கள் சாக்கு மூட்டைகள் அடுக்கி தற்காலி கமாக அடைக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த சாக்கு களை அப்புறப்படுத்தி விட்டு நிரந்தரமாக குளங்க ளில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். சானல்களில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக நாகர்கோவி லில் உள்ள பொதுபணிதுறை அலுவலகத்திற்கு விவசாயி கள் பொதுப்ப ணித்துறை அதிகாரிகளை பார்க்க வந்தால் அவர்களை அலட்சி யப்ப டுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
வேளாண் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றாததால் விவசா யம் பாதிக்கப்படு வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.எனவே இரண்டு துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து விவசாயிகள் நலன் கருதி அதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு
- புதிய அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி தொடக்க விழா நடந்தது.
கன்னியாகுமரி :
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் அலங்கார தரை கற்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரத்திடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதை தொடர்ந்து கொட்டாரம் பெருமாள்புரத்தில் ரூ.7 லட்சம் செலவில் புதிய அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி தொடக்க விழா நடந்தது.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், கொட்டாரம் பேரூர் செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருமாள்புரம் கிளை அ.தி.மு.க. செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஷ், ஊர்த்தலைவர் சுடலைமணி,செயலாளர் சந்திரகுமார், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் கமால், கொட்டாரம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் தங்ககுமார், அரசு ஒப்பந்ததாரர்கள் சுதாபாஸ்கர், செல்வகுமார், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சம்பூர்ண தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
- மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலந்தது
நாகர்கோவில் :
தமிழகத்தில் உள்ள மழை நீர் வடிகால்களில் வீட்டில் உள்ள கழிவு நீர் கலப்பதால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கழிவு நீரை மழை நீர் வடிகாலில் கலக்காமல் இருக்க வீடுகளில் உறிஞ்சி குழாய் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் உறிஞ்சி குழாய் அமைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்திலும் வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுநீர்களை உறிஞ்சி குழாயில் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியே வரும் செப்டிக் டேங்க் கழிவுகளை மழைநீர் வடிகாலில் விட்டால் அந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் செப்டிக் டேங்க் கழிவு நேரடியாக மழை நீர் வடிகாலில் வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார அதிகாரி ராஜாராம், சுகாதார ஆய்வாளர்கள் சத்யராஜ், பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அந்த நகை கடைக்கு வந்தனர். பின்னர் அந்த நகை கடையில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் மழை நீர் வடிகாலில் வரும் வகையில் மோட்டார் வைத்து பயன்படுத்துவதை அதிகாரிகள் பார்த்தனர்.
இதனை தொடர்ந்து அந்த நகை கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது நகைக்கடை தரப்பில் கடையில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் வெளியேறியதும் நகையில் உள்ள நகை இருப்புகளை சரி செய்து விட்டு வெளியே வருவதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் வெளியே வந்த பிறகு நகை கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனால் மீனாட்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- மீனவர்கள் விரைந்து சகாயராஜ் வள்ளத்தின் அருகே சென்றபோது வள்ளம் மட்டும் தனியாக நின்றது.
- கோடிமுனை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குளச்சல்:
குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 58). சம்பவத்தன்று நேற்று மாலை 5 மணி அளவில் தனது வள்ளத்தில் தனியாக மீன்பிடிக்க சென்றார். இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்த வள்ளத்தின் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் அவரிடம் போனில் தொடர்பு கொண்டபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. உடனே மற்ற மீனவர்கள் விரைந்து அவரது வள்ளத்தின் அருகே சென்றபோது வள்ளம் மட்டும் தனியாக நின்றது.
ஆனால் அவரை காணவில்லை. அவர் பிடித்து வைத்திருந்த மீன்கள் மட்டும் வள்ளத்தில் இருந்தது. உடனே மற்ற மீனவர்கள் சகாய ராஜை அருகில் சென்று தேடினர். அப்போது அவரது உடல் மிதந்த நிலையில் கடலில் கிடந்தது. உடனடியாக அவரது உடலை மீட்டு கோடிமுனை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சகாயராஜ் வள்ளத்தில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- சரமாரியாக தாக்கியதில் அபிஷேக்கின் பற்கள் முழுவதும் உடைந்துள்ளது.
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை :
மார்த்தாண்டம் அருகே நல்லூர் தேனாம்பாற தலவிளையை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 21), மீன்பிடி தொழிலாளி, இவருக்கும் குளக்கச்சி பகுதியை சேர்ந்த சஜி (19), சஜித் (21), சஜின் (19), கொல்லஞ்சி பகுதியை சேர்ந்த ஜெகன் (19) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று அபிஷேக் கொல்லஞ்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சஜி உள்ளிட்ட 4 பேரும் தடுத்து நிறுத்தி கத்தியாலும், இரும்பு கம்பியாலும், கையாலும் சரமாரியாக தாக்கியதில் அபிஷேக்கின் பற்கள் முழுவதும் உடைந்துள்ளது. மேலும் தாடைகளும் காயமடைந்துள்ளது.
கத்தியால் குத்தியதில் கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் முதுகை கடித்தும் காயப்படுத்தி உள்ளனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அபிஷேக், கத்தி அலறி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி உள்ளனர்.
இதை பார்த்த 4 பேரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். காயமடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 தரப்பினருக்கும் வாய்தகராறு முற்றியது
- போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவட்டார் :
திருவட்டார் அருகே வடக்குவிளை, குட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் றோஸ்மேரி (வயது 63). அதே பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (42), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவர்களுக்கிடையே வழிப்பாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று றோஸ் மேரி வீட்டில் இருக்கும்போது புஷ்பராஜ், ராசு (43), சுபாஷ் (35) ஆகியோர் வந்து அவதூறு பேசியதாக கூறப் படுகிறது. இதை றோஸ்மேரி தட்டிகேட்டதால் 2 தரப்பினருக்கும் வாய்தகராறு முற்றியது. உடனே புஷ்பராஜ், றோஸ்மேரியை பிடித்து கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அவர் தக்கலை அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். றோஸ்மேரியின் கணவர் தட்டி கேட்கவே அவரை 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்த னர். றோஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
குளச்சல் :
குளச்சலை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 25-ந்தேதி 16 மீனவர் கள் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகி யோர் மாயமாகி விட்டனர்.
அவர்களை மீனவர்களும் கடற்படையினரும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மீனவர் பயஸ் பிணமாக மீட்கப்பட்டார். 10 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர் ஆன்றோ உடல் மீட்கப்பட்டது.
ஆரோக்கியம் கதி என்ன? என்று தெரியாத நிலை நீடித்தது. இந்நிலையில் நேற்று மாலை ராமேசுவரம் அருகே உள்ள நடுத்துறை பகுதியில் ஒரு உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஆரோக்கியத்தின் உறவினர்கள் ராமேசுவரம் சென்றனர்.
இதற்கிடையில் கரை ஒதுங்கிய உடலை ராமேசு வரம் கடலோர காவல் படையினர் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அந்த உடல் ஆரோக்கியம்தான் என்பது உறுதியானது. அவரது கையில் ஏற்கனவே பிளேட் பொருத்தி இருந்ததன் மூலம் உடல் அடையாளம் காணப்பட்டதாக தெரிகிறது.






