என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே பெண்ணை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு
- 2 தரப்பினருக்கும் வாய்தகராறு முற்றியது
- போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவட்டார் :
திருவட்டார் அருகே வடக்குவிளை, குட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் றோஸ்மேரி (வயது 63). அதே பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (42), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவர்களுக்கிடையே வழிப்பாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று றோஸ் மேரி வீட்டில் இருக்கும்போது புஷ்பராஜ், ராசு (43), சுபாஷ் (35) ஆகியோர் வந்து அவதூறு பேசியதாக கூறப் படுகிறது. இதை றோஸ்மேரி தட்டிகேட்டதால் 2 தரப்பினருக்கும் வாய்தகராறு முற்றியது. உடனே புஷ்பராஜ், றோஸ்மேரியை பிடித்து கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அவர் தக்கலை அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். றோஸ்மேரியின் கணவர் தட்டி கேட்கவே அவரை 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்த னர். றோஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






