என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • “சாகர்கவாச் ஆபரேஷன்” என்ற பாதுகாப்பு ஒத்தி கையை 2 நாட்கள் நடத்தினர்.
    • 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு- பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்

    கன்னியாகுமரி :

    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் கடலோர பகுதியில் உள்ள மாவட் டங்கள் ஆகும். இதனால் இந்த மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அடிக்கடி கடலில் படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    அதேபோல தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார், இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தமிழ கத்தின் கடலோரப் பகுதியில் "சாகர்கவாச் ஆபரேஷன்" என்ற பாதுகாப்பு ஒத்தி கையை 2 நாட்கள் நடத்தினர்.

    கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதி நவீன ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் 2-வது நாளாக ஈடுபட்டனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்த பாது காப்பு ஒத்திகை நடந்தது. சின்ன முட்டம் துறை முகத்தில் இருந்து கூடங்கு ளம் கடல் பகுதி வரை ஒரு குழுவினரும், குளச்சல் கடல் பகுதி வரை ஒரு குழுவினரும் அதி நவீன படகில் சென்று கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது தவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்து உள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீ சார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்கணித்த னர். நெல்லை, குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு- பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். அதேபோல லாட்ஜ்களிலும் சந்தேகப் படும் படியான நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனை நடத்தினார்கள்.

    • குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்
    • இன்று அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    நாகர்கோவில், அக்.11-

    குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக இருந்த ராஜேஷ், நெடுஞ்சாலைத்துறை தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார். சமூக பாதுகாப்புத்துறை தனித் துணை வட்டாட்சியர் ராஜா சிங், அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    • குளச்சல் மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்துள்ளார்.
    • ஒரு வாலிபரை, மாணவி காதலித்து வந்ததாகவும் இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    குளச்சல் : 

    வில்லுக்குரியை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மாணவி மாயமாகி விட்டார். இவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காதால் குளச்சல் மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் மாணவி மாயம் குறித்து குளச்சல் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அழகிய பாண்டிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை, மாணவி காதலித்து வந்ததாகவும் இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை செய்துவிட்டு ஊருக்கு திரும்பினார்.
    • வழக்கு பதிவு செய்து மாயமான அபியை தேடி வருகின்றனர்.

    என். ஜி. ஓ. காலனி :

    தெங்கம்தூர் அருகே உள்ள பணிக்கன் குடியி ருப்பை சேர்ந்தவர் செந்தில் குமார் என்ற செல்வகுமார். இவரது மூத்த மகன் பிரமிஷ் குமார் என்ற அபி (வயது 29), கட்டிட தொழிலாளி.

    இவர் கடந்த 2 வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை செய்துவிட்டு ஊருக்கு திரும்பினார். கடந்த 7-ந் தேதி மாலை பணிக்கன் குடியிருப்பைச் சேர்ந்த நண்பர் சிவாவுடன் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று உள்ளார்.

    8-ம் தேதி காலையில் நாகர்கோவில் வரும்போது அபி, மற்றொரு நண்பரை பார்த்து விட்டு வருகிறேன். நீ ஊருக்கு செல் என்று சிவாவிடம் கூறி சென்றுள்ளார்.

    அதன்பிறகு அபி வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடியும் கண்டு பிடிக்க முடியாததால் அபியின் தந்தை செந்தில்குமார் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சுப்பையா சப்-இன்ஸ்பெக்டர் கருணா கரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான அபியை தேடி வருகின்றனர்.

    • 65-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
    • சுழற்கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மார்த்தாண்டம் :

    குமரிக் கலைக்கழகத்தின் சார்பாக, மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கி டையேயான கலைத்திறன் போட்டிகள் நாகர்கோ விலில் நடைபெற்றது. அதில் 65-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. கருங்கல் பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணாக்கர்கள் போட்டியில் பல பிரிவுகளில் முதல் பரிசு பெற்றனர். ஆங்கில பேச்சுப்போட்டியில் 8-ம் வகுப்பு பிரிவில் ஜெரிக் பிரைட் என்ற மாணவனும், தனிநபர் பாடல் மற்றும் தமிழ் பேச்சுப் போட்டியில் ஷவின் என்ற மாணவனும், 3 முதல் 5-ம் வகுப்பு பிரிவில் தமிழ் பேச்சுப் போட்டியில் லோபிகா என்ற மாணவியும், குழு நடனப்போட்டியில் மழலையர் மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவு மாணாக்கர்களும் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு குமரிக் கலைக்கழகத் தலைவர் டாக்டர் சண்முகம் தலைமையில் சுழற்கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணாக்கர்கள் பல குறிப்பிடத்தக்கது. பரிசுகள் பெற்றது சுழற்கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வென்ற மாணவர்களை பள்ளித் தலைவர் டாக்டர் தங்கசுவாமி, முதுநிலை முதல்வரி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி னார்கள்.

    இது மாணாக்கர்களின் தனித்திறன்களை வெளி க்கொணரும் வகையிலும் மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டி களில் கலந்து கொண்டு பரிசுகளை பெறுவதற்கு ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்திருந்தது.

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கலைப் போட்டிகள்
    • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    நாகர்கோவில் :

    குமரி கலைக்கழகத்தின் 37-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கலைப் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி நுண்கலை மன்ற மாணவ-மாணவிகள் பெரு வாரியான போட்டிகளில் வெற்றி பெற்று கல்லூரிக்கான ஒட்டு மொத்த வெற்றிக்கோப்பையை பெற்றனர். பரிசுகள் வென்ற மாணவ - மாணவி களை கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், முதல்வா் டாக்டர் மகேஸ்வரன், காப்பாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

    • கலந்தாய்வு கூட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
    • 15-வது தேசிய மாநாடு நிகழ்வுகள் பற்றி பேசப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக நிறுவன தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டார்.கழகத் தலைவர் அசோக் குமார், பொதுச் செயலாளர் செந்தில் குமார், துணை தலைவர் சிவா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வு கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 10-ந் தேதி வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் 15-வது தேசிய மாநாடு நிகழ்வுகள் பற்றி பேசப்பட்டது.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில துணை பொதுச்செயலாளர் லாரன்ஸ், மாவட்ட தலைவர்கள் சுரேஷ்குமார், பச்சைமால், மாவட்ட துணை தலைவர்கள் தாஸ், ரமேஷ், மாவட்ட செயலாளர்கள் செல்வின் பாபு, செந்தில்குமார், நஜ்முதீன், ராஜகுமார், கிங்ஸ்லி, ஜெரால்ட், குளச்சல் தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீ பிரபி மற்றும் குமரி மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் செய்து இருந்தனர். கூட்ட முடிவில் மோகனகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • வெற்றிபெற்ற இருவருக்கும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது
    • இந்திய அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    மார்த்தாண்டம் :

    தமிழ்நாடு பிக்கிள் பந்து அசோசியேஷன் நடத்திய 2 வது மாநில அளவிலான பிக்கிள் பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருவர் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று தேசிய போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    3-வது வகுப்பு படிக்கும் மாணவர் அபினித் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார். மேலும் இதே பள்ளியில் 7 வது வகுப்பு படிக்கும் மாணவர் ஆதர்ஷ் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். வெற்றிபெற்ற இருவருக்கும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    இவர்கள் இருவரும் மார்த்தாண்டம் சில்வர் சுரேஷ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் ஆவார். மேலும் இவர்கள் இருவரும் சமீபத்தில் கோவாவில் வைத்து நடைபெற்ற தேசிய போட்டியிலும், கடந்த வருடம் மும்பையில் வைத்து நடைபெற்ற பிக்கிள் பந்து உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மார்த்தாண்டம் சில்வர் சுரேஷ் ஸ்போர்ட்ஸ் அகாடமி உரிமையாளர் சுரேஷ்குமார் மற்றும் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இருவரையும் பாராட்டினார்கள்.

    • பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தொடங்கி வைத்தார்
    • 1 முதல் 18 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான இலவச பொது மருத்துவ முகாம்

    கன்னியாகுமரி :

    மகாராஜபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட 1 முதல் 18 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான இலவச பொது மருத்துவ முகாம் கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. முகாமை மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து தொடங்கிவைத்தார்.

    பஞ்சாயத்து துணைத்தலைவர் பழனிகுமார், வார்டுஉறுப்பினர்கள் அனீஸ்வரி, சுயம்பு லிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். குழந்தைகள் மருத்துவர் ஜாம்ஷீர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் சிகிச்சை பெற்றனர்.

    • சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணி தீவிரம்
    • படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒருவாரகாலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 2மாதங்களாகதிருவள்ளு வர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப் பட்டவில்லை.

    இதற்கிடையில் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதனை கரையேற்றி ரூ.10லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக்கழகம் முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து குகன் படகு கன்னியாகுமரி யில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குகன் படகு கரையேற்றப் பட்டு ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒருவாரகாலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு குகன் படகு புதுபொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன்பிறகு தசரா விடுமுறை சீசனையொட்டி அடுத்த வாரம் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர்மண்டபத்து க்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப் படலாம் என்று தெரிகிறது.

    • சட்டமன்றத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • முஞ்சிறை, கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் சரி செய்ய வேண்டும்

    மார்த்தாண்டம் :

    முஞ்சிறை, கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் சிதலமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

    கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் சட்டசபையில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியும், கொல்லங்கோடு நகராட்சியில் கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளியும் உள்ளன. இங்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் படித்து தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனால் அந்த 2 பள்ளிகளிலும் கட்டிடங்கள் மிகவும் சிதலமடைந்திருக்கிறது. அந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் அதை சரி செய்து தர வேண்டும்.

    இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், நான் ஏற்கனவே சொன்ன மாதிரிதான் 418 பள்ளிக்கூடம் இல்லாமல் மேலும் 173 பள்ளி கூடங்களுக்கு கிட்டத்தட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களுக்கு இன்றைக்கு 215 கோடி ரூபாய்க்கு உட்கட்டமைப்பு வசதிக்கு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் கூடுதலாக இன்னும் 252 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் கணக்கீடுகள் செய்யப்பட்டு அதற்கென்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

    அந்தந்த பகுதியை சேர்ந்து இருக்கிற கல்வி அலுவலர்கள் மற்றும் அந்த பகுதியில் இருக்கின்ற அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுக்கின்ற அந்த தகவல்களையும் நாங்கள் பெற்று கொண்டு மேலும் பத்திரிகை செய்தி மூலமாக வருகின்ற தகவல்களுக்கும் நாங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அதற்கும் இன்றைக்கு தனியாக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மிக விரைவாக இந்த நிதி எல்லாம் வரவர அதற்கான வேலைகள் உடனடியாக நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சரிடம் எடுத்து சொல்லி ஏனென்றால் 2 வாரத்திற்கு முன்னாடி அவர்கள் துறை சார்ந்து ஒரு கூட்டமே போட்டிருக்கிறார்கள்.

    இத்தனை மாதத்திற்குள் இத்தனை கட்டிடங்கள் இத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் அதை நம்முடைய முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இன்னும் விரைவாக அந்த பணிகளை முடிக்கின்ற பணியில் நாங்களும் எங்களை ஈடுபடுத்தி கொள்வோம். அதன் அடிப்படையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.

    • களியலில் 71 மில்லி மீட்டர் பதிவு
    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.களியல் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 71 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அருவியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிபாறை பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை பெய்து வருகிறது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிபாறை பெருஞ்சாணி அணை களுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணை யின் நீர்மட்டம் வெகுவாக உயர தொடங்கியுள்ளது.

    நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. தடிக்காரங்கோணம் கீரிப்பாறை குலசேகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்தது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 34.79 அடியாக உள்ளது. அணைக்கு 980 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.80 அடியாக உள்ளது.அணைக்கு 621 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1-அணைநீர்மட்டம் 14.73 அடியாகவும் சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 14.83 அடியாகவும் உள்ளது.பொய்கை நீர்மட்டம் 9.10 அடியாகவும் மாம்பழத் துறையார் அணை நீர்மட்டம் 35.76 அடியாகவும் முக்கடல் நீர்மட்டம் 16.10 அடியாகவும் உள்ளது.

    மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு பேச்சிபாறை 46 பெருஞ்சாணி 43.4 புத்தன் அணை 44.2 சிற்றார் 1-41.2சிற்றார்2-22.4 பூதப்பாண்டி 6.2 களியல் 71 கன்னிமார் 2.2 குழித்துறை 12.8 சுருளோடு 11.2 தக்கலை 1 குளச்சல் 8.6 இரணியல் 6 பாலமோர் 12.2 திற்பரப்பு 65.2 கோழிபோர்விளை 3.4 முள்ளங்கினாவிளை 4.2 முக்கடல் 8.2.

    ×