search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் சுற்றுலா படகு ரூ.10 லட்சம் செலவில் சீரமைப்பு
    X

    விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் சுற்றுலா படகு ரூ.10 லட்சம் செலவில் சீரமைப்பு

    • சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணி தீவிரம்
    • படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒருவாரகாலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 2மாதங்களாகதிருவள்ளு வர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப் பட்டவில்லை.

    இதற்கிடையில் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதனை கரையேற்றி ரூ.10லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக்கழகம் முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து குகன் படகு கன்னியாகுமரி யில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குகன் படகு கரையேற்றப் பட்டு ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒருவாரகாலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு குகன் படகு புதுபொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன்பிறகு தசரா விடுமுறை சீசனையொட்டி அடுத்த வாரம் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர்மண்டபத்து க்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப் படலாம் என்று தெரிகிறது.

    Next Story
    ×