என் மலர்
கன்னியாகுமரி
- வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்
- 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதி மொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஜெரிபா ஜி.இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகு தியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர்க ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1-10-2023 முதல் 31-12-2023 வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான ந டவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 30-9-2023 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். 31-12-2023 அன்று உச்ச வயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு 45 வயதுக்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் முடிவடையாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகைப்படா மல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து 30-9-2023 தேதியில் ஒரு ஆண்டு முடிவுற்றி ருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயது வரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
பொதுப்பிரிவு பதிவு தாரர்களைப் பொறுத்த வரை பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாத வர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ. 750-ம், பட்டதாரிகளுக்கு ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பயின்று வரும் பதிவுதாரர்களுக்கும், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலை வாய்ப்பற்றோர் நிவாரணம் பெற இயலாது.
தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ், மாற்றுக் கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக் கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. 3 ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பெற்று வரும் பயனாளிகள் இந்த உதவித் தொகையினை தொடர்ந்து பெற வேண்டுமானால் (மாற்றுத் திறனாளிகள் பொறுத்தவரையில் 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதி மொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை கேரளாவுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
- புகாரின் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் :
பூதப்பாண்டி அருகே உள்ள வீரவநல்லூர் பகுதி யைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவர் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை கேரளாவுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிவக்குமார் மீது நாகர்கோவில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவக்குமார் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக அவரை பாளையங்கோட்டை ஜெய லில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். மருத்துவ பரிசோத னைக்கு பிறகு பாளையங்கோட்டைக்கு அழைத்து செல்வதற்காக போலீசார் சிவகுமாரை வடசேரி பஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அப்போது அவர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. போலீ சார் அவரை தேடினார்கள். அப்போது சிவக்குமார் தப்பி ஓடி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பின்னர் போலீசார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. சிவக்குமாரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், சிவக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் தப்பி ஓடிய சிவகுமார் மீது போலீஸ் ஏட்டு பிரேம்குமார் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவட்டார் :
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நாளை மறுநாள் (14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் தொடர்ந்து காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. இரவில் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.
2-ம் நாள் (15-ந்தேதி) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி, 3ம் நாள் (16-ந் தேதி) காலை 8 மணிக்கு நாரணீய பாராயணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி ஆகியவை நடக்கிறது. நான்காம் நாள் (17-ந்தேதி) இரவு.7.30 மணிக்கு நடன நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் ஆகியனவும் 5-ம் நாள் (18-ந்தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடி யேற்றமும், 9 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பவனியும், 10 மணிக்கு நள சரிதம் கதகளி ஆகியவையும், 6. ம் நாள் (19-ந்தேதி) இரவு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு தேவயானி சரிதம் கதகளி ஆகியன நடக்கிறது. 7-ம் நாள் (20-ந்தேதி) இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனியும், தொடர்ந்து தோரண யுத்தம் கதகளியும் நடைபெறுகிறது.
8-ம் நாள் (21-ந்தேதி) இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு துரியோதன வதம் கதகளி, 9-ம் நாள் (22-ந்தேதி) இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது. 10-ம் நாள் (23-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக் கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சுவாமி எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
- போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதி
- நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் உள்ளது
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காகவும் குடிநீர் திட்ட பணிகளுக்காகவும் சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டுள்ளது.
நகரின் பிரதான சாலை களான கேப் ரோடு, அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் சாலை, செட்டிகுளம் சாலை மற்றும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலை யிலும் குழிகள் தோண்டப் பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செட்டிகுளம் சந்திப் பில் சாலை நடுவே மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு அரசு பஸ் சிக்கியது. இதைத் தொடர்ந்து மாநக ராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை காங்கிரீட் கலவை களால் சரி செய்தனர்.
இந்த நிலையில் நாகர் கோவில்- திருவனந்தபுரம் நெடுஞ்சாலை சந்திப்பில் நேற்று இரவு குடிநீர் குழா யில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதைத் தொடர்ந்து அதிகா ரிகள் அந்த பகுதியில் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி உடைப்பை சரி செய்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று காலை பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக தோண் டப்பட்டு மூடப்பட்ட பகுதி யில் சாலையின் நடுவே மிகப்பெரிய அள வில் பள்ளம் விழுந்தது. இதில் அந்த வழியாக வந்த ஆட்டோ சிக்கியது. மேலும் கார் ஒன்றும் அதில் சிக்கி யது.
சாலையின் நடுவே கிடந்த பள்ளத்தை தொ டர்ந்து வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்காமல் இருக்க அந்த பகுதியில் சாலையின் ஓரமாக சென்ற னர். சாலையில் பள்ளம் ஏற்பட்டதையடுத்து சாலை ஓரமாக வாகனங்கள் சென் றன. இதனால் அந்த பகுதி யில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட் டது. காலை நேரம் என்ப தால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளை இரு சக்கர வாகனங்களிலும் 4 சக்கர வாகனங்களில் அழைத்து சென்ற பெற்றோ ரும் போக்குவரத்து நெருக் கடியில் சிக்கித் தவித்தனர். அரசு பஸ்களும் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி தவித்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார் கள்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலை நடுவே கிடந்த பள்ளத்தை சுற்றியும் கற்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வேறு வாகனங்கள் சிக்காத வகையில் மரக் கிளைகளையும் பொது மக்கள் முறித்து வைத்துள்ள னர்.
மாநகராட்சி ஊழியர்கள் உடனடி நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள பள்ளத்தை சீரமைத்து சாலையை சரி செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பிரதான சாலைகளில் பள்ளங்கள் ஏற்படு வது வாடிக்கையாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாதாள சாக்க டைக்காக தோண்டப்பட்ட பிறகு சாலைகள் மூடப்படும் போது சரியான காங்கிரீட் கலவைகள் அமைக்கப்படாமல் சாலைகள் அமைக்கப் படுவது தான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மேயர் இதில் தனிக் கவனம் செலுத்தி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்படும் பள்ளங் கள் மூடப்படும் போது அதற்கான விதிமுறைக் குட்பட்டு காங்கீரீட் தளம் அமைத்து மூடப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
- மருத்துவ கழிவுகளை பெரிய பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்திருந்தார்கள்.
- டிரைவரிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு வண்டியை திருப்பி அனுப்பினர்.
திருவட்டார் :
குலசேகரம் அருகே அரசுமூடு பகுதியில் குலசேகரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அதிவேகமாக கேரளா விலிருந்து வந்த ஒரு மினி கன்டெய்னர் வண்டியை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் உணவு கழிவுகள் ஆடு, மாடு ஆகியவற்றின் கழிவுகளை பேரலில் அடைத்து வைத்திருந்தனர். மேலும் மருத்துவ கழிவுகளை பெரிய பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்திருந்தார்கள். வண்டியை திறந்து பார்த்த போது கடுமையான தூர்நாற்றம் வீசியது.
இந்த கழிவுகளை பொன்மனை மங்கலம் பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு கொண்டு வந்து இரவோடு இரவாக கொட்டி கொண்டு திரும்ப சென்று விடுவார்கள் என கூறப்படுகிறது. நேற்று கோழி கழிவுகள கொண்டு வந்த வண்டியை குலசேகரம் போலீசார், பேருராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து டிரைவரிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு வண்டியை திருப்பி அனுப்பினர்.
- கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது
- தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்
நாகர்கோவில், அக்.12-
கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை (13-ந் தேதி) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப் பொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், புதுகிராமம், காக்கமூர், பொற்றையடி, தோப்பூர், ஊட்டுவாழ்மடம், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர், மேலகருப்புக்கோட்ைட ஆகிய இடங்களிலும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சியும் நடந்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக்காரணமாயிற்று.
குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது. அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.
இதையொட்டி காலை யில் கணபதி ஹோமமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவத்திலும் ஓம் வடிவத்திலும் வடிவமைத்து வைத்து அதில் புனித நீர் நிரப்பி சங்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் பிறகு குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் அலங்கார தீபாரதனையும் வாகன பவனியும் நடந்தது.
அதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சியும் நடந்தது. அதன்பிறகு பக்தர்களுக்கு அருட்பி ரசாதம் வழங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- சுமார் 20 லாரிகள் மூலம் அரிசி மூடைகள் திங்கள் நகர் கிட்டங்கிக்கு வந்தது
- தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
இரணியல் :
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு கிட்டங்கியிலும் தொழிலாளர்கள் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தி ல் கல்குளம் தாலுகாவிற்கு உடையார்வி ளை, திங்கள்நகர் ஆகிய இடங்க ளில் நுகர்பொருள் வாணி கம் கிட்டங்கி உள்ளது.
நேற்று காலை கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 லாரிகள் மூலம் அரிசி மூடைகள் திங்கள் நகர் கிட்டங்கிக்கு வந்தது. அப்போது ஒப்பந்த தினக்கூலி தொழிலாளர்கள் தங்களுக்கு ஒப்பந்த படி கூலி வேண்டும் என்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் லாரி ஓட்டுனர்கள் மற்றும் தினக்கூலி தொழிலா ளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை லாரி உரிமையா ளர்கள் சங்கம் சார்பில் வெளி ஆட்கள் மூலம் லாரியில் இருந்து அரிசி மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டதாக தெரி கிறது. இதனை தினக்கூலி தொழிலாளர்கள் சங்க தலைவர் மணிகண்டன் மற்றும் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
சங்க தலைவர் மணிகண்டன் மூட்டை மீது ஏறி அமர்ந்து கொண்டு, இந்த சம்பவம் முடியும் வரை கீழே இறங்கி வர மாட்டேன் என்று கூறினார். பின்னர் இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரி வித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் சப்- இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக திங்கள் நகர் பஸ் நிலையம் அருகே உள்ள நுகர் பொருட்கள் வாணிகம் கிட்டங்கி சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
- 15-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது
- அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி :
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான நவ ராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்கு கிறது. இந்த திருவிழா 24-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் அதி காலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
11.30 மணிக்குஅலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை யும் நடக்கிறது. 1-ம் திருவிழாவான 15-ந்தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
8 மணிக்கு பஜனையும், மாலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு ஆன்மீக அருள் உரையும், இரவு 7 மணிக்கு வயலின் இசையும், இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலை மான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.
2- ம்திருவிழாவான 16-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீகஅருள் உரையும் இரவு 7மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 3-ம் திருவிழாவான 17--ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும், 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாக னத்தில்எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 4-ம் திருவிழாவான 18-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் காமதேனு வாக னத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.
5-ம் திருவிழாவான 19-ந் தேதி மாலை 6 மணிக்குஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பரத நாட்டியமும், 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்காம தேனு வாகனத்தில் எழுந்த ருளி பவனி வருதலும் நடக்கிறது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் தலைமையில் இலங்கை பக்தர்கள் அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனத்தின் மீது கூடை-கூடையாக மலர் தூவி வழிபடுவார்கள்.
6-ம் திருவிழாவான 20-ந்தேதி காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு பரத நாட்டியமும் 9 மணிக்கு அம்மன் வெள்ளி க்காம தேனு வாகனத்தில் எழுந்த யருளி பவனி வருதலும் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 21-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும், 9 மணிக்கு அம்மன் வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்திருளி பவனி வருத லும் நடக்கிறது. 8-ம் திருவிழாவான 22-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.
9-ம் திருவிழாவான 23-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும் 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கி றது.
அதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்கா ரத்துடன் மகாதான புரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கி றது. கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவே கானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமாத்தலிங்கபுரம், தங்க நாற்கரசாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதான புரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை மாலை சென்றடைகிறது.
அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்க புரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப் பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்க மத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவே சிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணை யர் ரத்தினவேல் பாண்டி யன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார், சுந்தரி, துளசிதரன் நாயர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வரு கிறார்கள்.
- சிற்றார் 2-ல் 37.4 மில்லி மீட்டர் மழை பதிவு
- மாம்பழத்துறையாறு, அடையாமடை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவ லாக மழை பெய்து வரு கிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவ லாக மழை பெய்தது.
பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணைப்ப குதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையோர பகு தியான பாலமோர் பகுதி யில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மாம்பழத்துறையாறு, அடையாமடை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.
சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 37.4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகியுள்ளது. பேச்சி பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.06 அடி யாக இருந்தது. அணைக்கு 660 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. 281 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ்சாணிஅணை நீர்மட்டம் 64.05 அடியாக உள்ளது. அணைக்கு 445 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது.
சிற்றார்-1 நீர்மட்டம் 14.79 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 14.89 அடியாகவும் உள்ளது. பொய்கை நீர்மட்டம் 9.10 அடியாகவும், மாம் பழத்துறையாறு நீர்மட்டம் 36.42 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 16.20 அடியாக உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்கனவே 53 வீடுகள் இடிந்து விழுந்து இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 6 வீடுகள் இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வ ரம் தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்து உள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக தாழக்குடி, தோவாளை பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை மழை நீர் சூழ்ந்திருந்தது. அந்த மழை நீர் சற்று வடிந்திருந்த நிலை யில் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- தபால் நிலையத்தில் கிடந்த பார்சல்கள் அனைத்தையும் பரிசோதித்து பார்த்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நாகராஜா கோவில் வடக்கு ரத வீதியில் மாவட்ட தலைமை தபால் நிலையம் உள்ளது. நேற்று காலை தலைமை தபால் நிலையம் என குறிப்பிட்டு வந்த கடிதத்தில் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை வெடித்து சிதறும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து மாவட்ட தபால் துறை அலுவலர் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தபால் நிலையத்தில் கிடந்த பார்சல்கள் அனைத்தையும் பரிசோதித்து பார்த்தனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து தலைமை தபால் நிலைய சீனியர் போஸ்ட் மாஸ்டர் செல்வராஜ் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது வடிவீஸ்வரம் தபால் நிலையத்திலிருந்து வந்ததாக அஞ்சல் முத்திரை பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் வடிவீஸ்வரம் தபால் நிலைய பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்தநிலையில் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சுசீந்திரம் அருகே மருங்கூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது முதலில் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்பு அவர் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய கடிதத்தை ஒப்புக்கொண்டார். அசோக்குமார் எதற்காக வெடிகுண்டு கடிதத்தை அனுப்பினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அசோக்குமார் கடந்த சில ஆண்டுகளாக தலைமை தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அவரை பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பணி நிரந்தரம் செய்யவில்லை.
இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அசோக்குமார் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக கூறினார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 11-வது வார்டுக்குட்பட்டயாதவர் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சி 45-வது வார்டுக்கு ட்பட்ட தம்மத்துக்கோணம் ஏ.டி. அம்பிகா சாலையில் (அரசு நடுநிலைப் பள்ளி அருகில்) ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 14-வது வார்டுக்குட்பட்ட பெரியார் தெருவில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.
11-வது வார்டுக்குட்பட்டயாதவர் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை மாநக ராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, கவுன்சி லர்கள் சதீஷ், கலாராணி, ஸ்ரீலிஜா, ஜெயவிக்ரமன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலை வர் ஜவகர், பகுதி செயலா ளர்கள் ஜீவா, சேக் மீரான், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், தொண்டர் அணி ராஜன், மாநகர திமுக தலைவர் பன்னீர் செல்வம் வட்டச் செயலாளர் சிவ குமார், வேல்முருகன், புனித பிரசாத் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






