search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா

    14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    திருவட்டார் :

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நாளை மறுநாள் (14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் தொடர்ந்து காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. இரவில் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.

    2-ம் நாள் (15-ந்தேதி) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி, 3ம் நாள் (16-ந் தேதி) காலை 8 மணிக்கு நாரணீய பாராயணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி ஆகியவை நடக்கிறது. நான்காம் நாள் (17-ந்தேதி) இரவு.7.30 மணிக்கு நடன நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் ஆகியனவும் 5-ம் நாள் (18-ந்தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடி யேற்றமும், 9 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பவனியும், 10 மணிக்கு நள சரிதம் கதகளி ஆகியவையும், 6. ம் நாள் (19-ந்தேதி) இரவு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு தேவயானி சரிதம் கதகளி ஆகியன நடக்கிறது. 7-ம் நாள் (20-ந்தேதி) இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனியும், தொடர்ந்து தோரண யுத்தம் கதகளியும் நடைபெறுகிறது.

    8-ம் நாள் (21-ந்தேதி) இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு துரியோதன வதம் கதகளி, 9-ம் நாள் (22-ந்தேதி) இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது. 10-ம் நாள் (23-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக் கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சுவாமி எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    Next Story
    ×