என் மலர்
கன்னியாகுமரி
- இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார்.
- பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இரணியல்:
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 46). நடிகர் விக்ரம் ரசிகர்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்தவர். இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார். பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வில்லுக்குறி தாண்டி தோட்டியோட்டில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட பாலு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலுவின் மனைவி துர்காதேவி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர்.
- மேலும் 6 வீடுகள் இடிந்தது
- மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சிற்றாறு-1 அணைப்பகுதியில் நேற்று 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 103.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.
கோழிப்போர்விளை, அடையாமடை, முள்ளங்கினாவிளை, குழித்துறை, களியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்துவரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 35.55 அடியாக இருந்தது. அணைக்கு 975 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 66.40 அடியாக உள்ளது. அணைக்கு 538 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.15 அடியாக உள்ளது. அணைக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.25 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.07 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது.
தொடர் மழையின் காரணமாக மழைக்கு ஏற்கனவே 60 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் 6 வீடுகள் இடிந்துள்ளது. கல்குளம் தாலுகாவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது.
- கலெக்டர் தகவல்
- துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல் துறை பணி விளக்க முகாமினை கலெக்டர் பார்வையிட்டார்.
நாகர்கோவில்:
விளவங்கோடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட பாலவிளை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறை வேற்றும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிரா மங்களிலும் முதல் மற்றும் 2 கட்டங்களாக சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இம்முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன் பெறுவதே ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 4,77,000 குடும்ப அட்டைகள் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமம் திட்டத்திற்கு சுமார் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த மாதம் 15-ந்தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விடுப்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமம் திட்டம் தொடர்பாக குறைகள் இருந்தால் தகுந்த சான்றிதழ் வழங்கி அக்குறை களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள், தாசில்தார்கள் ஆகியோரிடம் அறிக்கைகள் பெறப்பட்டு, கலந்தாய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார். முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
முகாமில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நோட்டுப்புத்தகங்களையும், 4 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல் துறை பணி விளக்க முகாமினை கலெக்டர் பார்வையிட்டார்.
- சிலைகளுக்கு வழி நெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
- 10 நாட்கள் பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும்.
குழித்துறை:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு, குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமார கோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவிதாங்கூர் மன்னர் காலம் தொட்டு சரஸ்வதி தேவியம்மனை யானை மீதும், முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் ஆகிய விக்ரகங்களை, பல்லக்கிலும், சுமந்தும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த சிலைகளுக்கு வழி நெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். இந்நிலையில் நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியுடன் இந்த சாமி விக்ரகங்கள் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக-கேரளா போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் யானை மீது சரஸ்வதி தேவியும், பல்லக்குகளில் குமார கோவில் முருகனும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையும் ஊர்வலமாக புறப்பட்டது.
வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். நேற்று இந்த சாமி விக்ரகங்கள் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில், தங்குகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு அங்கிருந்து அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டு சென்றது. அப்போது பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இன்று மதியம் 12 மணிக்கு குமரி-கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி மற்றும் தமிழக இந்து அறநிலைய துறையினர், கேரளா இந்து அறநிலை துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சாமி விக்ரகங்கள் இன்று நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்கலும், நாளை திருவனந்தபுரம் சென்றடைகிறது.
அங்கு கிழக்கு கோட்டை கொலுமண்டபத்தில் சரஸ்வதி தேவியையும், ஆர்யா சாலையில் முருகப்பெருமானையும், வலிய சாலையில் முன்னுதித்த நங்கை அம்மனையும், பூஜைக்கு வைத்து 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்வார்கள்.
பின்னர் 10 நாட்கள் பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும். அப்போதும் பொதுமக்கள் வழி நெடுக வரவேற்பு அளிப்பார்கள். பின்னர் குமரியில் அந்தந்த கோவில்களில் வைத்து வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். இந்த சாமி விக்ரகங்கள் செல்லும் வழியில் கேரளா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் சாலைகளின் இரு புறங்களிலும் மா, பலா, வாழை, தென்னை ஓலை களாலும் அலங்கரித்து பூஜைகள் செய்து வரவேற்பு அளித்தனர்.
- சீரமைக்க அறங்காவலர் குழு தலைவர் நடவடிக்கை
- 4 ஆயிரத்து 224 சதுரஅடி பரப்பளவில் இந்த அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மெயின்ரோட்டில் காந்தி மண்டபம் அருகில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்துறைக்கு சொந்தமான அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகம் கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. மொத்தம் 4 ஆயிரத்து 224 சதுரஅடி பரப்பளவில் இந்த அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. அரசு அருங்காட்சியகத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இந்து அறநிலையத்துறை இடத்தில் இயங்கி வருகிறது.
இந்த இடத்துக்கு மாதம்தோறும் அருங்காட்சியகத்துறை பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு ரூ.9ஆயிரத்து 795 வாடகை செலுத்தி வருகிறது. இந்த அரசு அருங்காட்சியகத்தில் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்கால கல் சிலைகள், திமிங்கலத்தின் எலும்புக் கூடு, டால்பின் மீன் மற்றும் அதன் எலும்புக்கூடு, காடுகளில் வன மிருகங்கள் வசிக்கும் காட்சி, கடல் ஆமை, பழங்கால உலோகப்பொருட்கள், தோல்பாவை கூத்தில் பயன்படுத்தப்படும் தோல் பொம்மைகள், குமரி மாவட்டத்தில் முக்கியமாக பயிரிடப்படும் ரப்பர் தோட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி கோவிலில் பயன்படுத்தப்பட்டு வந்த பழங்கால தேர் மற்றும் கருட வாகனம் போன்றவை காட்சியகப்ப டுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி இந்த அருங்காட்சியகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் புகைப்பட கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த அரசு அருங்காட்சியகம் சமீபத்தில் பெய்த கன மழையினால் தண்ணீர் ஒழுகி அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த அரிய பொருட்கள் நாசமடைந்து உள்ளன. இதைத்தொடர்ந்து மழையில் ஒழுகும் அரசு அருங்காட்சியகத்தை சீரமைக்க வேண்டும் என்று அருங்காட்சியத்துறை அதிகாரிகள் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். அதன் பயனாக குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தை நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மழையில் ஒழுகும் அரசு அருங்காட்சியக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உறுதி அளித்தார்.
- மேரி ஸ்டெல்லா ராணி மண்டைக்காடு அருகே பெரிய விளையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
- கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி (வயது 58). இவர் பணக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மேரி ஸ்டெல்லா ராணி. இவர் மண்டைக்காடு அருகே பெரிய விளையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் தூத்துக்குடியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
ஜான்கென்னடியும், மேரிடெல்லா ராணியும் இங்கு வசித்து வந்தனர். இவர்கள் தினமும் காலை வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலையில் வழக்கம்போல் இருவரும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்குச்சென்றனர். மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜான்கென்னடி, மேரி ஸ்டெல்லா ராணி இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து 35 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளையடித்து இருந்தனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வெள்ளிச்சந்தை போலீசார் மற்றும் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஜான்கென்னடி, மேரி ஸ்டெல்லா ராணி இருவரும் வீட்டில் இல்லாததை தெரிந்தே கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பழைய கொள்ளையர்களின் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- விழாவை முன்னிட்டு நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகள் நடந்தது.
- 14-ந்தேதி காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலை சென்றடையும்.
தக்கலை:
திருவாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மனாபபுரம் அரண்மனையில் வருடம் தோறும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மன்னர் தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மாற்றிய பின் நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையிலுள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரம் சென்று வருகின்றன.
ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக 3 சாமிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி தொடக்க நாளில் இருந்து விழா முடியும் வரை திருவனந்தபுரத்தில் வைத்து வழிபாடு செய்யப்படும். அதன்பிறகு 3 சாமிகளும் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம் வந்து சேரும். சுவாமிகள் புறப்பாடு மற்றும் வருகையின் போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வரவேற்பதும் வழிபடுவதும் உண்டு. இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டது. தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்ட முன்னுதித்த நங்கையம்மன் அம்மனுக்கு வீதிகள் தோறும் பக்தர்கள் திரண்டு பரவசத்துடன் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முன்னுதித்த நங்கை அம்மன் பத்மனாபபுரம் அரண்மனையை வந்தடைந்து. இன்று காலை அங்கு வேளிமலை முருகனும் பக்தர்கள் புடைசூழ வந்தார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு அரண்மனை உப்பரிகை மாளிகையின் மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் உடைவாளை ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் ஸது எடுத்து தொல்பொருள் துறை இயக்குனர் தினேஷிடம் ஒப்படைத்தார்.
அதனை அவர், கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அவரிடம் இருந்து இதனை குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன் பெற்றுக்கொண்டார். விழாவில் மத்திய மந்திரி முரளிதரன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன். கேரள எம்.எல்.ஏ.க்கள் வின்சென்ட், ஹரீந்திரன், ஆன்சலன், மற்றும் நகர் மன்ற ஆணையாளர் லெனின், தலைவர் அருள் சோபன், துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் அரண்மனை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு நவராத்திரி மண்டபத்தில் சங்கீத கச்சேரி, கூடியாட்டம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் முன்னே செல்ல வேளிமலை முருகன் பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் யானை மீதும் அமர்ந்து பவனி சென்றனர்.
இந்த சாமி ஊர்வலத்தில் தமிழக-கேரள போலீசார் மற்றும் திரளான பக்தர்கள் நடந்து சென்றார்கள். 3 சாமி சிலைகளும் இரவில் குழித்துறையில் தங்கிவிட்டு, நாளை (13-ந்தேதி) காலையில் அங்கிருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலை சென்றடையும். அங்கு மூன்று சாமி சிலைகளுக்கும் கேரள அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும்.
14-ந்தேதி காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலை சென்றடையும். தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மனை பூஜை புரை என்ற இடத்தில் பூஜைக்காக வைப்பார்கள். வேளிமலை முருகன் சிலை ஆரியசாலையில் உள்ள சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோவிலிலும் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இதை தொடர்ந்து நவராத்திரி கொலு மண்டபத்தில் 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலமாக குமரி மாவட்டத்தை நோக்கி புறப்படும்.
- மேயர் மகேஷ் உறுதி
- பொறியியல் துறையில் 101 மனுக்கள் வந்தது. 101 மனுக்களுக்கும் முடிவு காணப்பட்டது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சி அலுவலகத்தில் வாரந் தோறும் வியாழக்கிழ மை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. இன்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் மகேஷ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டார்.
வீட்டு வரி குறைப்பு, சொத்து வரி பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 16 மனுக்கள் பெறப்பட்டன. அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் கூறிய தாவது:-
மனுக்களுக்கு உடனடி யாக தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருவாய்த்துறைக்கு உட்பட்ட 103 மனுக்கள் வந்தன. அதில் 103 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் 101 மனுக்கள் வந்தது. 101 மனுக்களுக்கும் முடிவு காணப்பட்டது. அதுபோல் நகர அமைப்பு தொடர்பாக 43 மனுக்கள் வந்ததில் 38 மனுக்களும், சுகாதாரத் துறைக்கு 30 மனுக்களில் 28 மனுக்களும் , பொதுவான மனுக்கள் 8 வந்தது. இதில் அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 285 மனுக்கள் வந்துள்ளன. இதில் 278 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 7 மனுக்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது. நாகர்கோவில் நகரப் பகுதியில் சாலை போடப்பட்டு வருகிறது. இதில் சாலை நடுவே போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை மற்றும் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் பாதிப்பு இருப்பதாக புகார்கள் வருகிறது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்து சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மேன் கோல் அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
குறைதீர்க்கும் கூட்டத்தில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் மாநகர பகுதியில் இன்று ரூ.75 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் நடந்தது. 50வது வார்டுக்கு உட்பட்ட வண்டிகுடியிருப்பு தெற்கு தெரு வில் ரூ.2.5 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. இந்தபணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
அதேபோல் 42-வது வார்டுக்கு உள்பட இருளப்ப புரம் விவேகானந்தர் சாலையில் தார்தளம் அமைக்கும் பணி ரூ.30 லட்சம் செலவி லும், 20-வது வார்டுக் குட்பட்ட தம்மத்துக்கோணம் திருவள்ளுவர் தெருவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி ரூ.13 லட்சம் செலவிலும், 23-வது வார்டுக் குட்பட்ட பரிவதவர்த்தினி சாலையில் ரூ.30 லட்சம் செலவிலும் தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகளையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரிபிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர் ஸ்டாலின் தாஸ், தி.மு.க. பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர் பகவதி பெரு மாள், இருளப்பபுரம் ஊர் தலைவர் தனபாலன், பொருளாளர் பாரத் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதியம் 12.15 மணிக்கு ஆர்த்தி மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
- பாபாவின் திவ்ய அதிர்வுகளும், இந்திரலோக பிரகாசமும் நடைபெறுகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில்-கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெற்றையடியில் அமைந்துள்ளது ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம். இந்த ஆலயத்தில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாய்பாபாவின ஒளிரூப தரிசனவிழா நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆனந்த சாய் பஜன்ஸ் வழங்கும் பாபாவின் கானமழை நடைபெறுகிறது.
காலை 11.20 மணி முதல் கூட்டு பிராத்தனை, மவுன ஆராதனை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு ஸ்ரீஷீரடி சாயிபாபாவின் திவ்ய பாதங்களில் 3 நிமிடங்கள் ஏற்படும் பாபாவின் திவ்ய அதிர்வுகளும், இந்திரலோக பிரகாசமும் நடைபெறுகிறது. மதியம் 12.15 மணிக்கு ஆர்த்தி மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீஷீரடி சாயி சேரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள், ஸ்ரீஷீரடி சாயி சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
- 18 மாணவ - மாணவிகள் 6 குழுக்களாக இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர்
- அறிவுத் திறனை மேம்படுத்த ஏதுவாக ஒலி மற்றும் காணொளி சுற்று
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்செலென்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 'பிரேயின் பிளாஸ்ட் சந்திராயன் சேலஞ்ச்' என்ற தலைப்பில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. வின்ஸ் பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கி னார். செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் முன்னிலை வகித்தார்.
முதல் கட்டமாக 119 மாணவர்களுக்கு தகுதிச்சுற்றாக எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதில் தகுதி பெற்ற 18 மாணவ - மாணவிகள் 6 குழுக்களாக இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர். இப்போட்டி யினை பள்ளியின் முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்டணி நடத்தினார்.
நிலவின் தென் துருவத்தை முதலில் தொட்ட நாடு என்ற பெருமையினை பெற்றுக் கொடுத்த சந்திராயன் 1,2,3 திட்டங்கள் குறித்து மாணவ - மாணவியர் தெரிந்து கொள்ள, அறிவுத் திறனை மேம்படுத்த ஏதுவாக ஒலி மற்றும் காணொளி சுற்று, பொதுவான கேள்விகள் சுற்று, பஷர் சுற்று, சரியானதை தேர்ந்தெடு சுற்று, அதிவிரைவுச் சுற்று, நபர்களை அடையாளம் காணுதல் சுற்று என 6 சுற்றுகள் நடைபெற்றன. இதில் லேண்டர், ரோவர், ஆர்பிட்டர், லூனார், போலார், த்ரஷ்டர் என 6 குழுக்கள் போட்டியிட்டன. 6 சுற்றுகளில் 90 கேள்விகள் கேட்கப்பட்டன. மாண வர்கள் ஆதில் பெலிக்ஸ், பெரிஷ் மாத்தியூ, யாஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்ட லூனார் அணி முதல் இடத்தை பிடித்தது. மாணவர்கள் ஸ்டீவ் ஆண்டர்சன், ஜெஸ்லின், ஆதவ்ஸ்ரீ ஆகியோரின் ரோவர் அணி 2-ம் இடத்தையும், மாணவர்கள் ஷான் ஜூஸ்வின், அபி னோவ், அதுராம் ஆகியோர் அடங்கிய ஆர்பிட்டர் அணி 3-ம் பரிசினையும் வென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் பரிசு மற்றும் வெற்றிக் கோப்பையினையும், பதக்கங்களையும் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- பழைய ராக்கெட்டுகள் இங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
- காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் அதிக நாட்கள் இங்கு தங்கி இருந்து சுற்றுலா தலங் களை கண்டுகளிப்பதற்கு வசதியாக மத்திய, மாநில அரசுகள் கன்னியாகுமரியில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
அந்த அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் அறிவியல் அறிவை வளர்க்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை தெரிந்து கொள்ளும் வகையிலும் மத்திய அரசின் விண்வெளி துறை சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.150 கோடி செலவில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த விண்வெளி பூங்காவில் இந்திய விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகளான ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் மற்றும் அறிவியல் கண்காட்சிகள் சிறுவர்-சிறுமிகளுக்கான விளையாட்டு சாதனங்கள் இடம் பெற உள்ளன. மேலும் பழைய ராக்கெட்டுகள் இங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
இந்த விண்வெளி அறிவியல் மற்றம் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணியின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டன. இந்த விண்வெளி பூங்கா அமைய இருக்கும் இடத்தை சுற்றி பாதுகாப்பான காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது
- வேளாண்மைத்துறை அதிகாரி தகவல்
- மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதால் நஞ்சற்றவிளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட வே ளாண்மை இணை இயக்கு னர் வாணி (பொறுப்பு) வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
அங்கக வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம் பூச்சிக் கொல்லி ஆகியவற்றைத் தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்ப டுவதோடு, மண வளத்தை யும பாது காக்கும் சாகுபடி முறையாகும்.
அங்கக வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணு யிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச் செய்து அதில் உள்ள ஊட்டச் சத்துக்களை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன, நுண்ணுயிர்கள் ஊட்டச் சத்துக்களை மொதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதால் நஞ்சற்றவிளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
மக்களின் உடல் நலத்தை காக்கவும் மண்வளம், இயற்கை வளம் காப்பதற்கும் நீடித்த நிலையான வேளாண் மையினை உறுதிபடுத்தவும் தமிழக அங்கக வேளாண்மை கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 14-ந் தேதி வெளியிட்டார். இயற்கை விவசாயம் செய்யும் தன் னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக 2023-2024-ம் ஆண்டு பட்ஜெட்டில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி மற்ற விவசாயி களையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழக்கப் படும் என அறிவிக்கப்பட்டது.
நம்மாழ்வார் விருது பெற விம்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைதளத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும், குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும்.
வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை குடியரசு தினத்தன்று முதல்- அமைச்சர் வழங்க உள்ளார். முதல் பரிசு ரூ.2,5 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், மூன் றாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப் புள்ள பதக்கம் வழங்கப்ப டும்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அதற்கான வழிமுறைகள் குறித்து அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வே ளாண்மை உதவி இயக்கு னர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள லாம். குமரி மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்க லாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.






